Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
பலஸ்தீனமே! மன்னித்துவிடு உம்மத் இன்னும் பிஸியாக இருக்கிறது. 

பலஸ்தீனமே! மன்னித்துவிடு உம்மத் இன்னும் பிஸியாக இருக்கிறது.

  • 35

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

காஸாவிலும் மேற்குக் கரையிலும் கடலோரக் குழந்தைகளாய் அங்க அவயங்கள் சிதறுண்டு கிடக்கும் பலஸ்தீனப் பிஞ்சுகளே! உங்கள் தாயும் தந்தையும் கண்ட துண்டமாய் வெட்டப்படுவதைப் பார்த்துக் கொண்டு கண்ணீர் கூட வடிக்கச் சக்தியற்றிருக்கும் அப்பாவிக் குழந்தைகளே! மஸ்ஜிதுல் அக்ஸாவுக்காய் இரத்தத்தை இழந்து கொண்டிருக்கும் பலஸ்தீன சொந்தங்களே! எங்கள் முதல் கிப்லாவுக்காக உம்மத்தின் சார்பில் தன்னந் தனியாய் போராடிக் கொண்டிருக்கும் பலஸ்தீனமே! மன்னித்து விடு.

நாம் இன்னும் பிஸியாக இருக்கிறோம். எமது இளைஞர்கள் உன்னை மட்டுமல்ல ஈராக்கையும், ஆப்கானையும், காஷ்மீரையும் மறந்து மிகவும் பிஸியாக இருக்கிறார்கள். எதில் தெரியுமா? அரசியல் விவகாரங்களிலும், சினிமா கேலிக்கைகளிலும், அரசியல் கதைகளிலும், போராட்டங்களிலும் ,விளையாட்டு நட்சத்திரங்களுடனும், சினிமா சிங்காரிகளுடனும் லயித்துப் போயிருக்கிறார்கள். மீண்டும் வர நாளாகும். அதுவரை நீ காத்திருக்க வேண்டியதுதான்.

என் கட்சியா? உன் கட்சியா? என்ற விவாதங்களை அவர்கள் இன்னும் முடித்துக் கொள்ளவில்லை. இப்போதல்லாம் அவர்கள் இதிலே ஆழமாக மூழ்கிப் போயுள்ளனர். ஜிஹாத் களத்துக்கு வராமல் மக்காவிலும் மதீனாவிலும் மாறி மாறி இறை வணக்கம் புரிந்து கொண்டிருந்த இமாம் புழைல் இப்னு இயாழ் (ரஹிமதுல்லாஹ்)அவர்களை விளித்து அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹிமதுல்லாஹ்) வடித்தனுப்பிய கவி வரிகள்.

இரு புனிதத் தலங்களின்
புனிதத்தில் திளைத்திருப்பவரே
எம் இபாதத்தில்
நீர் விளையாடிக் கொண்டிருப்பதை அறிவீரா?
உம் கன்னங்கள் அங்கு விழிநீரால் நனைகின்றன
எம் கழுத்துக்களோ இங்கு இரத்தப் பிரசவம்
நடத்திக் கொண்டிருக்கின்றன.

எத்தனை கருத்தாழம்மிக்க கவிவரிகள்! அல்லாஹ்வையே நினைத்து நினைத்து கஃபாவை வலம் வந்து கொண்டிருந்த அந்த மாமனிதர் இதைப் பார்த்து மறுகணமே தன் தவறை ஏற்றுக் கொள்கிறார். என்ன தவறு?ஜிஹாத் களம் மனிதர்களை வேண்டி நிற்கின்ற போதுதான் இங்கு இபாதத்தில் திளைத்திருந்தது. தவறு என்பதை ஏற்றுக் கொள்கிறார்.

அல் அக்ஸா கைவிட்டுப் போவதைப் பார்த்துக் கொண்டு வெறுமனே வேடிக்கை விளையாட்டிலும், அரசியல் விவாகாரங்களிலும் மூழ்கியிருப்பதை என்னவென்று சொல்வது?

“அறுபது வருடங்கள் இறை தியானம் செய்வதை விட சில கணப் பொழுதுகள் இறை பாதையில் போராடுவது அல்லாஹ்வுக்கு மிகவும் உவப்புக்குரியது” என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.

பலஸ்தீன சிங்கங்களே! தாயின் வயிற்றிலிருந்து வெளியே வரும்போது யூதனை கலங்கடிக்கும் கல்லைச் சுமந்து வரும் வீரக் குழந்தைகளே! உங்கள் தலைகள் அங்கு உருள்வதை மறந்து இந்த உம்மத் அரசியலிலும், சினிமாவிலும், வேடிக்கைகளிலும் லயித்துப் போயுள்ளது.

சிலுவைகளின் அழுங்குப் பிடியில் பலஸ்தீனும் அக்ஸாவும் தவித்துக் கொண்டிருந்த ஒரு நாளில் ஸலாஹுத்தின் அய்யூபியிடம் பலஸ்தீனின் நிலை பற்றிச் சொல்லப்படுகின்றது. தனயனை இழந்த தாயைப் போன்று கண்ணீர் விட்டழுதார்கள். பின் தன் படையணிக்குள் நுழைந்து அங்கு கடலெனத் திரண்டிருந்த முஸ்லிம் இளைஞர்களைப் பார்த்து வீராவேசத்துடன் கேட்கிறார்.

“இஸ்லாத்துக்காக யார் வருகின்றீர்கள்? இஸ்லாத்துக்காக யார் வருகின்றீர்கள்? தன்னோடு புறப்பட்டு வந்த படையினரை கண்ணீருடனேயே வழிநடத்த செல்கின்றார். “பலஸ்தீன் அழுது கொண்டிருக்கும் போது என்னால் எப்படி சிரிக்க முடியும்? என்று அவர் வாயால் மாத்திரம் சொல்லவில்லை. பலஸ்தீனை உம்மத்துக்கு மீட்டுக் கொடுத்து விட்டுத்தான்.அவர் புன்னகைத்ததாக வரலாறு சொல்லிக் கொண்டிருக்கின்றது.

ஆனால் இந்த உம்மத்தின் உரமாக இருக்க வேண்டிய எம் இளைஞர்கள் நபியவர்களின் எச்சரிக்கையை உண்மைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

“அவர்கள் உடும்புப் பொந்துக்குள் நுழைந்தால் இவர்களும் போய் நுழைந்து கொள்வார்கள்”

என்ற நபியவர்களின் வார்த்தைகள் நிதர்சனமாவதை நாம் இன்று கண்கூடாகக் காண்கிறோம்.அவர்கள் முடி வளர்த்தால் இவர்களும் வளர்க்கிறார்கள். அவர்கள் தலை மழித்தால் இவர்களும் மழித்து விடுகிறார்கள்.

“போராடாமல் போராட வேண்டுமென்ற எண்ணம் கூட இல்லாமல் யார் மரணிக்கின்றாரோ அவர் முனாபிக்காக மரணிக்கிறார் “

என்று நபியவர்கள் கூறினார்கள்.

அவர்களுக்காக உடலால் போராட முடியாவிட்டாலும் உள்ளத்தாலும் உணர்வுகளாலும் போராடுங்கள். அல்லாஹ்வுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை நினைவு கூறுங்கள். உங்களது உயிர்களையும், உடமைகளையும் தருவதாக நீங்கள் அவனுக்கு வாக்களித்திருக்கின்றீர்கள். ஆனால் அனைத்தையும் மறந்து விட்டு இன்னும் இந்த உம்மத் பிஸியாகிப் போய்விட்டது.

பலஸ்தீனமே ! நீ மன்னித்தாலும் அல்லாஹ் எங்களை மன்னிப்பானா???

Afra binth Ansar

காஸாவிலும் மேற்குக் கரையிலும் கடலோரக் குழந்தைகளாய் அங்க அவயங்கள் சிதறுண்டு கிடக்கும் பலஸ்தீனப் பிஞ்சுகளே! உங்கள் தாயும் தந்தையும் கண்ட துண்டமாய் வெட்டப்படுவதைப் பார்த்துக் கொண்டு கண்ணீர் கூட வடிக்கச் சக்தியற்றிருக்கும் அப்பாவிக் குழந்தைகளே!…

காஸாவிலும் மேற்குக் கரையிலும் கடலோரக் குழந்தைகளாய் அங்க அவயங்கள் சிதறுண்டு கிடக்கும் பலஸ்தீனப் பிஞ்சுகளே! உங்கள் தாயும் தந்தையும் கண்ட துண்டமாய் வெட்டப்படுவதைப் பார்த்துக் கொண்டு கண்ணீர் கூட வடிக்கச் சக்தியற்றிருக்கும் அப்பாவிக் குழந்தைகளே!…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *