Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
புத்தகங்களை காதல்கொள் 

புத்தகங்களை காதல்கொள்

  • 10

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

புத்துலகம் உன்வசமாகும்.
இத்தலத்தில் இனிமைகள் கரம்சேரும்.
உதயம் உன்மனவானில் காட்சியாகும்.
இதயம் தினம் புதுமைகளுக்கு சாட்சியாகும்.
புத்தகங்களை காதல்கொள்!

நினைவுகளில் எல்லாம்
கார்கால மழைதூறும்.
கனவினிலும் கவிதைகள்
ஊர்கோலம் போகவரும்.
புத்தகங்களை காதல்கொள்!

தனிமையின் தவிப்பில்
துணையாக நிலைக்கும்.
இருள் சூழ்ந்த இரவில்
விளக்காக ஜொலிக்கும்.
புத்தகங்களை காதல்கொள்!

மனசுகனத்த பொழுதுகளில்
தாய்மடியாய் மகிழ்விக்கும்.
புதுசுபுதுசாய் எண்ணங்களை
சேய்போல ஒப்புவிக்கும்
புத்தகங்களை காதல்கொள்!

நல்லெண்ணங்கள் உன் சுவாசமாகும்.
வாழ்க்கை அமைதியின் தேசமாகும்.
புத்தகங்களை காதல்கொள்!

மக்கொனையூராள்

புத்துலகம் உன்வசமாகும். இத்தலத்தில் இனிமைகள் கரம்சேரும். உதயம் உன்மனவானில் காட்சியாகும். இதயம் தினம் புதுமைகளுக்கு சாட்சியாகும். புத்தகங்களை காதல்கொள்! நினைவுகளில் எல்லாம் கார்கால மழைதூறும். கனவினிலும் கவிதைகள் ஊர்கோலம் போகவரும். புத்தகங்களை காதல்கொள்! தனிமையின்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *