Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
புலமைப் பரீட்சை 

புலமைப் பரீட்சை

  • 13

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

பிள்ளை வளர்ப்பில் நாம் விடும் தவறு.

‘’உங்களுடைய குழந்தைகளை ஏழு வயதில் தொழுகையைக் கொண்டு ஏவுங்கள். அவர்களுக்கு பத்து வயதானால் அடித்து தொழவையுங்கள். மேலும் அவர்களை படுக்கையை விட்டும் பிரித்து வையுங்கள்’’. (ஸுனன் அபூ தாவூத் 495)

இன்று இலங்கை சமூகம் கல்வியில் கரிசனை காட்டி வருவது மகிழ்ச்சியான விடயமாகும். அதிலும் குறிப்பாக இன மத பேதமின்றி அணைத்து தாய்மார்களும் கரிசணை காட்டும் ஓர் பரீட்சையே புலமைப் பரீட்சையாகும். என்றாலும் கவலையான விடயம் புலமைப் பரீட்சையில் கரிசணை காட்டும் அணைத்து பெற்றோர்களும் தவறவிடும் ஓர் விடயமே இங்கு குறிப்பிட்டுள்ள ஹதீஸாகும்.

ஹதீஸின் நேரடிக் கருத்தின் அடிப்படையில் புலமைப் பரீட்சைக்கு தயாராகும் பல மாணவர்கள் தொழுகை கடமையில்லை என்பதால் தொழுகை, மார்க்க கல்வி கற்றல் போன்றவற்றில் 7 – 1௦ வயதுக் காலப்பகுதியில் கரிசணை காட்டுவதில்லை. இக் காலப்பகுதியில் நாம் எவ்வாறு புலமைப் புலமைப் பரீட்சையில் கவனம் செலுத்துகின்றோமோ அவ்வாறே மார்க்கக்கல்வியிலும் கரிசணை காட்ட வேண்டும்.

உலகிற்கே வழிகாட்டியாக உதித்த ரசூலுல்லாஹ் அவர்களின் குறித்த நபி  மொழியில் இன மத பேதமின்றி புலமைப் பரீட்சை மாணவர்களை வளர்க்கும் விதத்தில் பல உளவியல் உண்மைகள் மறைந்துள்ளது.

இன்று புலமைப் பரீட்சையை இலங்கையில் ஒவ்வொரு மாணவனும் பத்து வயதில் எழுதுகின்றனர். என்றாலும் இதற்கான ஆயத்தம் ஏழு வயதில் ஆரம்பமாகின்றது.

ஏழு  வயது முதல் விளையாட்டை குறைத்து, நண்பர் தொடர்பை குறைத்து, பள்ளிவாசல் தொடர்பைக் குறைத்து பாடசாலையும் பகுதி நேர வகுப்பும் என பத்து வயதுவரை புலமைப் பரீட்சை எழுதும் மாணவனின் வாழ்க்கை மாறிவிடுகின்றது. சுருக்கமாக கூறினால் அது ஓர் சிறை வாழ்கை. பின்னர் பத்தாவது வயதில் ஆகஸ்ட் மாதம் மூன்றாவது ஞயிற்றுக்கிழமை சிறையிலுருந்து ஒவ்வொரு மாணவனும் விடுதலையாகின்றனர். பின்னர் அவர்களின் வாழ்கை ஆடல், பாடல், கொண்டாட்டம், என்று புது உலகாய் மாறிவிடுகின்றது. இதுதான் பிள்ளைகளை  வளர்ப்பதில் நாம் விட்ட தவறாகும்.

முதலில் குறிப்பிடப்பட்டுள்ள ஹதீஸில் ஒரு பிள்ளை ஏழு வயதை அடைந்ததும் தொழுமாறு ஏவ வேண்டும். பத்து வயதாகியும் தொழுகையில் பொடுபோக்கு காட்டினால் அடித்துத் தொழுவிக்க வேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளது.

தொழுகை போன்றுதான் கல்வி கற்றலும் ஓர் வணக்கமாகும். கல்வி கற்றல் என்ற வணக்கத்திலும் நாம் குறித்த ஹதீஸிற்கு முரணாக செயற்படுகின்றோம்.எவ்வாறெனில் நாம் புலமை பரீட்சை விடயத்தில் பிள்ளைகளை 7 – 1௦ வயதுவரை பயமுறுத்தி கட்டுப்படுத்தி கற்பிக்கின்றோம். பின்னர் அப்பரீட்சை முடிந்ததும் சுதந்திரமாக விடுகின்றோம்.

உளவியல் ஆலோசகர் டாக்டர் பெரியார் அப்துல்லாஹ் அவர்கள் ஓர் பிள்ளையின் முதல் 21 வருட காலப்பகுதியில் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய பகுதிகளை பின்வருமாறு வகைப்படுத்தியுள்ளார்.

  1. 3 – 7 வயதுவரை
  2. 11 – 14 வயதுவரை
  3. 17 – 21 வயதுவரை

இக்காலப்பகுதியில் ஒரு பிள்ளைக்கு சரியான வழிகாட்டல் கிடைக்காவிடின் அப்பிள்ளை வழி தவறிவிடும்.

இலங்கையில் ஓர் பிள்ளை மீது அதிக கரிசணை காட்டும் வயதெல்லை.

  1. 7 – 10 வயதுவரை
  2. 15 – 16 வயதுவரை

இக்காலப்பகுதியில் தான் இலங்கையில் ஒவ்வொரு பிள்ளையும் புலமைப் பரீட்சை, சாதாரண தரப் பரீட்சை என்பவற்றுக்கு தோற்றுகின்றனர். எனவே இப்பகுதியில் மாத்திரம் பிள்ளை மீது கரிசணை காட்டி பிள்ளை வழிதவறிய பின்னர் சமூகத்திற்கும், பாடசாலைக்கும் குற்றம் சொல்கின்றனர்.

பெற்றோர்களே நமது பிள்ளைகளை பராமரிக்கும் விதத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய வயதெல்லை 11 – 14 (GR 6 – 9 ) வயதுவரை உள்ள காலப்பகுதியாகும். இப் பருவம் ஆண், பெண் இருபாலரூம் பருவமடையும் பருவம். இப்பருவத்தில் பிள்ளைக்கு சரியான வழிகாட்டல் கிடைக்காவிடின் அவர்கள் வழிதவறி விடுகின்றனர். குறிப்பாக வழிதவறிய பல மாணவர்களது வாழ்க்கையை எடுத்து நோக்கினால் இப்பருவத்தில்தான் அவர்கள் வழிதவறி உள்ளனர்.

எனவேதான் பத்து வயதானால் பிள்ளைக்கு கண்டித்து வழிநடாத்த வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் இப் பருவ பிள்ளைகளுக்கு வழிகாட்டும் பெற்றோர் முதலாளியாக இருக்காமல் தலைவராக செயற்பட வேண்டும். அதாவது நாம் பிள்ளைக்கு “புத்தகத்தை எடுத்துப் படி” என்று கட்டளை இடுவதுடன் மாத்திரம் நிற்காமல் பெற்றோர்களும் புத்தகங்களை எடுத்து வாசிக்க வேண்டும். மேலும் பிள்ளைக்கு தொழுமாறு ஏவுவதுடன் நிற்காமல் பெற்றோரும் உரிய நேரத்தில் தொழ வேண்டும்.

ஓர் பிள்ளையை சிறப்பாக வளர்க்க வேண்டும் என்றால் 7 – 1௦ வயதுவரை சுதந்திரமாக கற்க விட வேண்டும். பத்து வயதாகிய பின்னர் பிள்ளை கற்றலில் கவனம் செலுத்தாவிடின் அல்லது தவறுகள் செய்தால் பிள்ளையை கண்டிக்க வேண்டும். கண்டித்தலின் கருத்து அடிப்பது அல்ல மாறாக அழகின முறையில் எடுத்துக் கூறல், பெற்றோர்களே செயற்படுதல் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

11 – 14 வயதுக்குற்பட்ட பிள்ளைகளின் குற்றங்களை பெற்றோர்கள் பிள்ளையின் முன்னிலையில் பிறரிடம் கூறாமல், தனியாக அழைத்து புத்திமதிகளை கூற வேண்டும்.

பெற்றோர்களே! இன்றைய சிந்தனைப் பகுதியில் முன்வைத்த ஹதீஸை சரியாக நடைமுறைப்படுத்தி ஈருலகிலும் பயனை பெற முயற்சிப்போம்.

பிள்ளை வளர்ப்பில் நாம் விடும் தவறு. ‘’உங்களுடைய குழந்தைகளை ஏழு வயதில் தொழுகையைக் கொண்டு ஏவுங்கள். அவர்களுக்கு பத்து வயதானால் அடித்து தொழவையுங்கள். மேலும் அவர்களை படுக்கையை விட்டும் பிரித்து வையுங்கள்’’. (ஸுனன் அபூ…

பிள்ளை வளர்ப்பில் நாம் விடும் தவறு. ‘’உங்களுடைய குழந்தைகளை ஏழு வயதில் தொழுகையைக் கொண்டு ஏவுங்கள். அவர்களுக்கு பத்து வயதானால் அடித்து தொழவையுங்கள். மேலும் அவர்களை படுக்கையை விட்டும் பிரித்து வையுங்கள்’’. (ஸுனன் அபூ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *