Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
பெண்ணே! உன் ஆடை பற்றி ஒரு நிமிடம் 

பெண்ணே! உன் ஆடை பற்றி ஒரு நிமிடம்

  • 17

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

ஒரு மகள் தன் தந்தையிடம் ஆடை பற்றி கீழ்வரும் கேள்வியைத் தொடுக்கின்றாள்: “தந்தையே! என் உடம்பில் எதை மறைக்க வேண்டும் எதைத் திறக்கவேண்டும்.”

அதற்குத் தந்தை: “உன் உடலில் நரக நெருப்பைத் தாங்கமுடியுமான அளவு வெளிக்காட்டு.” என ஆழமான பதிலொன்றை வழங்கினார்.

இது அனைத்து ஆடைகளிலும் கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான விடயம். வளர்ந்து வரும் பெண் பிள்ளைகளிடம் அண்மைக் காலமாக ஆடைகள் விடயத்தில் மார்க்க வரையறைகள் பாரியளவு மீறப்படுகின்றன. தற்காலத்தில் குறிப்பாக லெகின்ஸ், டெனிம் ட்ரௌஸர், டீ ஷேர்ட், ரெப்பிங் ஷோல் போன்றவை மிகப்பெரும் தாக்கத்தையும் சீரழிவையும் ஏற்படுத்தி வருகின்றன. எதிர்வரும் காலங்களில் இது மேலும் மோசமாக மாறலாம்.

சுவனத்தின் வாடையைக் கூடப் பெறமுடியாதவர்கள் ஆடையணிந்தும் நிர்வாணிகளான பெண்கள். சகோதரியே! இவ் எச்சரிக்கைக்குள் நீயும் நுழையாதிருக்க உன் ஆடை:

  1. அவையங்களை வெளிக்காட்டுமளவு அறைகுறையாக
  2. அவையங்களை வெளிக்காட்டுமளவு இறுக்கமானதாக
  3. அவையங்களை வெளிக்காட்டுமளவு மெல்லியதாக
    இருக்கக் கூடாது.

பெண்ணே! ஆடை. அது வெறும் அலங்காரமுமல்ல, நீ ஆடவர்களைக் கவரும் காட்சிப் பொருளுமல்ல. ஆடை உன் பெண்மைக்கான அடையாளம். உன்னை இம்மையில் மானக்கேடானவற்றிலிருந்தும் மறுமையில் நரகிலிருந்தும் காக்கும் அரண். நீ நினைத்தவாறு அதனை அணிய முடியாது.

பெரும் பெரும் விலைகொடுத்து வாங்கும் ஆடைகள் உன் உடலில் மறைக்க வேண்டியதை வெளிக்காட்டுமானால் அதன் பயன் என்ன? சிலவேளை முப்பதாயிரம் ரூபாய்க்கு வாங்கும் ஆடையை விட முன்னூறு ரூபாய்க்கு வாங்கும் ஆடை ஒழுக்கமாகவும் பாதுகாப்பாகவும் இறையச்சத்துக்கு நெருக்கமானதாகவும் இருக்கலாம்.

பெண் அணியும் ஆடை உடம்பை வெளிக்காட்டக் கூடிய ஒழுக்கயீனமான ஆடையாக இருப்பின்:

  1. அவளது தந்தை அல்லது கணவன் அல்லது சகோதரன் அல்லது பாதுகாவலன் மார்க்கம் தெரியாதவர் அல்லது தெரிந்தும் உதாசீனம் செய்பவர்.
  2. அல்லது கட்டுப்படாத மனைவி அல்லது மகள் அல்லது சகோதரி.

என்ற பொருளையே தரும். இவ்விரு விடயங்களுமே பாரதூரமானவை.

ஆடைகள் பற்றிய மார்க்க வரையறைகள் பற்றிப் படிப்போம். அது பற்றி வளரும் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்போம். அது எம் கடமை. அது பிள்ளை வளர்ப்பின் ஒரு பகுதி. அல்லாஹ் எம்மை அழைக்கின்றான்:

“நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரக நெருப்பிலிருந்து காத்துக் கொள்ளுங்கள்” (அல் குர்ஆன் 66-06)

மறுமையில் அல்லாஹ்வின் முன் குற்றவாளிகளாக நிற்பதை விட்டும் அவனே எம்மை காப்பானாக.

பாஹிர் சுபைர்

ஒரு மகள் தன் தந்தையிடம் ஆடை பற்றி கீழ்வரும் கேள்வியைத் தொடுக்கின்றாள்: “தந்தையே! என் உடம்பில் எதை மறைக்க வேண்டும் எதைத் திறக்கவேண்டும்.” அதற்குத் தந்தை: “உன் உடலில் நரக நெருப்பைத் தாங்கமுடியுமான அளவு…

ஒரு மகள் தன் தந்தையிடம் ஆடை பற்றி கீழ்வரும் கேள்வியைத் தொடுக்கின்றாள்: “தந்தையே! என் உடம்பில் எதை மறைக்க வேண்டும் எதைத் திறக்கவேண்டும்.” அதற்குத் தந்தை: “உன் உடலில் நரக நெருப்பைத் தாங்கமுடியுமான அளவு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *