Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
பெண் 

பெண்

  • 12

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

இது எங்களுக்கான நாள்
எங்களுக்கென
நீங்கள் ஒதுக்கித்தந்த
ஒரு நாள் நன்றி!

புதினங்களும் விசேசங்களும் இதிலில்லை
வருடமொருமுறை உளறும்
வழமையான சங்கதிதான்

உங்களின் மீதிகளைத்தான்
முழுமை என்றெண்ணி வாழ்கிறோம்
நாங்கள் பெண்கள்
தியாகங்களும் விட்டுக்கொடுப்புகளும்
ஒடிவதும் உடைவதும்
எங்கள் காலை விடிவதும்
உங்களுக்காக தான்

அன்போடும் வலியோடும்
உங்களைப் பெற்ற அம்மாவாகவும்
எங்கள் குடும்பம் துறந்து
உங்களை பின் தொடரும்
மனைவியாகவும்
நீங்கள் செல்லம் கொஞ்சும்
மகளாகவும்
அம்மாவுக்கு நிகரான
அன்பைத்தரும் அக்காவாகவும்
அடிபணிந்து குட்டு வாங்கி
கோபித்துக்கொள்ளும்
தங்கையாகவும்
நாங்கள் தான் இருக்கிறோம்

நாங்கள்
புற்களாக இருந்தாலும்
மிதித்து போகிறீர்கள்
செடியாய் படருகையில்
பிடுங்கி எறிய
வேர் தேடுகிறீர்கள்
மரமாய் நிமிர்ந்து
நிற்கையில்
கோடரியோடு சிரிக்கிறீர்கள்
ஒருவேளை
உங்களில் சிலர்
இப்படித்தானோ
நாங்கள் கசங்கி
காணாமற் போவதில்
ஓர் இன்பம்.

உலகம்
முன்னேறிச் சென்றாலும்
பகல் பயணங்களில் கூட
அண்ணன் தம்பி
கூடவே வருகிறார்கள்
இருள் சூழ்ந்த
சிறு நடைகளில்
உடல் இலேசாய் நடுக்கம்
கொள்கிறது
புடவை கட்டிய
காட்சி பொம்மைகளில் கூட
காம உணர்ச்சி தோன்றுகிறது
உங்களில் சிலருக்கு
மனிதாபிமானம் தாண்டி
பழியாகியிருக்கிறோம் நாங்கள்
ஐந்தில் இருந்து ஐம்பது வரை

கொஞ்சம் சகஜமாய் பழகினால்
அலைபவள் என்றும்
அதிகாரமாய் பேசுகையில்
திமிரானவளாகவும்
அன்பாய் நடக்கையில்
நடிப்பதாகவும்
உங்களை நம்பி இருக்கையில்
ஏமாளி என்றும் கூறி
சிரித்து கொள்கிறீர்கள்
சிலவேளைகளில்
அது உண்மையாவதுமுண்டு.

எங்களுக்குள்ளும்
திறமை இருக்கிறது
கனவுகளும் ஆசைகளும்
நிரம்பி கிடக்கிறது
உரிமைகளும்
வரிசையில் நிற்கிறது
எங்களின் தேவைகளை
புரிந்து கொள்ளுங்கள்
உணர்வுகளுக்கு
மதிப்பளிக்க முயலுங்கள்
சமயலறை தாண்டிய
உலகத்தை காண்பித்தீர்கள்
பேனாக்களின் வரிகளில்
கிடந்த உரிமைகளை
மீட்டெடுக்க உதவினீர்கள்
அன்பான
அப்பாவாகவும்
ஆறுதல் கணவனாகவும்
பாதுகாப்பு சேர்த்த சகோதரனாகவும்
உற்ற நண்பனாகவும்
துணை புரிகிறீர்கள்
எங்களின் சிரிப்பிற்கு பின்னால்
உங்களின் தியாகம் இருக்கிறது
நீங்கள் தட்டிக் கழித்திருந்தால்
எங்கள் சிறகுகள்
முடங்கி போயிருக்கும்

இருந்தும்
உங்களில் சிலரால்
எண்ணங்களில் மிரட்சி இருக்கிறது
மன்னியுங்கள்!
பெண்ணியம் என்பது ஆண்கள் மீதான குற்றச்சாட்டு இல்லை
பெண்களுக்கான
பாதுகாப்பான சமூகத்தை
உருவாக்க முன்வாருங்கள்!
இன்றைய தேவை

நுஸ்ரா ஹாஸீம்

இது எங்களுக்கான நாள் எங்களுக்கென நீங்கள் ஒதுக்கித்தந்த ஒரு நாள் நன்றி! புதினங்களும் விசேசங்களும் இதிலில்லை வருடமொருமுறை உளறும் வழமையான சங்கதிதான் உங்களின் மீதிகளைத்தான் முழுமை என்றெண்ணி வாழ்கிறோம் நாங்கள் பெண்கள் தியாகங்களும் விட்டுக்கொடுப்புகளும்…

இது எங்களுக்கான நாள் எங்களுக்கென நீங்கள் ஒதுக்கித்தந்த ஒரு நாள் நன்றி! புதினங்களும் விசேசங்களும் இதிலில்லை வருடமொருமுறை உளறும் வழமையான சங்கதிதான் உங்களின் மீதிகளைத்தான் முழுமை என்றெண்ணி வாழ்கிறோம் நாங்கள் பெண்கள் தியாகங்களும் விட்டுக்கொடுப்புகளும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *