Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
பொலித்தீன் பிளாஸ்டிக் பாவனையால் மாசுபடும் கடற்கரையும் எமது மௌனமும் 

பொலித்தீன் பிளாஸ்டிக் பாவனையால் மாசுபடும் கடற்கரையும் எமது மௌனமும்

  • 79

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

உலகில், மனித குலத்துக்கு மட்டுமன்றி அனைத்து ஜீவராசிகளுக்கும், சமுத்திரங்களின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று 21ம் நூற்றாண்டில் நாம், கடற்கரையையும் கடல்சார் வளங்களையும் பராமரிப்பதும் பாதுகாப்பதும், மிக முக்கியமானது. கடப்பாடாக ஆகிவிட்டது.

நாற்புறமும் கடலால் சூழப்பட்ட இலங்கை, அழகிய கடற்கரைப் பிரதேசங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள போதிலும், அதிகரித்துச் செல்லும் கடற்கரைச் சூழல் மாசடைதல் காரணமாக, அதன் எழில் படிப்படியாக மறைந்து செல்கிறது.

உலகளாவிய ரீதியில், ஒவ்வொரு வருடமும், கடலில் மாத்திரம் 60 சதவீதமான பிளாஸ்டிக் பொருட்களுடன் கூடிய 1,000 தொன்னுக்கும் அதிகமான குப்பைகள் அகற்றப்படுகின்றன. புள்ளிவிவரத்தின்படி, மிகவும் மாசுபட்ட கடற்கரையில் 1ஆவது இடத்தில், சீனா இருக்கிறது. இலங்கை, 5ஆவது இடத்தில் இருக்கிறது. ஆசிய கடல் வலயத்தில் மத்தியநிலையமாக இருப்பது, இலங்கைக்கு முக்கியமானதாகும். ஆனால், கடற்கரை மாசடைதலில் இலங்கைக்குக் கிடைத்திருக்கின்ற இந்த நிலையானது, அவ்வளவு ஆரோக்கியமானதல்ல.

இது போன்று முக்கியமான ஒன்றுதான் பொலித்தீன் பாவனையும் இலங்கையில் ஒருநாளைக்கு 15 மில்லியன் லன்ஞ் சீட்டுகளும் 20 மில்லியன் சொப்பிங் பைகளும் உபயோகிக்கப்படுகின்றன. இவற்றில் பாதியளவு குப்பைகளாக மாற்றப்படுகின்றன. இதில் அதிகமானவை கடற்கரை சூழலை அன்மித்தே குப்பைகளாக காணப்படுகிறது

கடற்கரைதான், மக்களுக்கான மிகப்பெரிய பொழுதுபோக்காகும். சமுத்திரப் பிராந்தியச் சட்டப்படி, இலங்கையைச் சுற்றி 1,700 கிலோமீற்றர் பரப்பு, கரையோர மாசடைதல் தவிர்ப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த பத்து ஆண்டுகளில், கடற்கரையும் கடல் வளமும், தீவிரமாக மாசடைந்து வருகிறது.

ஆனால், இன்னும் கடலில் மாசு ஏற்படுத்தும் விளைவுகள் பற்றி, போதியளவிலான விழிப்புணர்வு, மக்களிடம் இல்லை என்பதே உண்மையானது. அதேபோல், அதற்கெதிரான சட்டங்களும் இன்னும் வலுவடையவில்லை. குறிப்பாக, குப்பைகளைக் கடற்கரையோரங்களில் போடுவதால், கடல் வளம் பாதிக்கப்படும் என்பது, எம்மிடையே பலருக்கும் தெரியாதா, இல்லையெனில் தெரிந்தும் தெரியாதது போல் நடக்கிறோமா என்பது, புதிரான ஒன்றாகவே இருக்கிறது. இவ்வாறு இவ்விடயத்தின் ஆபத்தை அறிந்தவர்களின் உதாசீனத்துக்கு, சட்டத்தில் உள்ள குறைபாடும், தனிமனிதனின் சூழல் பற்றிய அக்கறை இன்மையுமே காரணமாகும்.

கடற்கரையை அண்மித்த பகுதிகளில் பிற நிர்மாண நடவடிக்கைகள் காரணமாகவும், கடற்கரை மாசடைகிறது. மேலும், கடற்கரைக்கு வரும் உள்ளூர், வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள், தமது குப்பைகளை ஆங்காங்கே வீசிச்செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது. இவ்வாறு வீசப்படும் குப்பைகள், கடலினுள் சேரும் போது, கடல் வள உயிரினங்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன.

ஒருவருடத்தில் சராசரியாக 8 மில்லியன் டன்கள் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் இவைகள் சேர்ந்தவண்ணம் உள்ளது. இக்கழிவுகளை உணவு என நினைத்து உட்கொள்வதால் கடல்வாழ் உயிரினங்களின் வாழ்க்கைக்கும் பறவைகளின் வாழ்க்கைக்கும் மாபெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொள்ளும் மீன்களை மனிதர்கள் உட்கொள்வதால் மனித உணவுச்சங்கிலிக்குள் பிளாஸ்டிக் சேர்ந்து மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும். மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் உக்குவதற்க்கு 400-1000 வருடங்கள் வரை செல்லும் நீண்ட ஆயுட்காலம் பாவனை கொண்டது இவை சூழலில் சேர்வதன் மூலம் நுளம்புகளுக்கு இனப்பெருக்கம் செய்வதற்கு அதிகமான இடம் கிடைக்கும் இதனால் டெங்கு முதலான ஆபத்தான நோய்கள் பரவுவதற்கு வாய்ப்பு அதிகரிக்கின்றது. மேலும் பிளாஸ்டிக் கழிவுகள் கடற்கரையோரம் சேர்வதன் விளைவாக கடல்சார்ந்த சுற்றுலா துறையும் கணிசமான பாதிப்பை எதிர்நோக்குகிறது

தற்போது எமது சமுத்திரங்களில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் எமது கடற்கரைச் சூழலை பாதிப்புக்குள்ளாக்கி உள்ளது இவ்வாரான பாதிப்பானது கடற்கரை சூழலின் அழகையும், கடல்வாழ் உயிரிணங்களின் இருப்பையும் கேள்விக்குரியாக்கிவிட்டது. இந்த நிலை தொடர்ந்தால் நாமும் எமது கடற்கரைச் சூழலை இழந்து எமது எதிர்கால சந்ததிக்கும் சிறந்த சூழலை கொடுக்க தவரிவிடுவோம் இந்த நிலையை மாற்றி சிறந்த கடற்கரைச் சூழலை உருவாக்க வேண்டியது தனிமனிதன் ஒவ்வொருவரினதும் கடமை

இதற்காக நாம் பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனை விடயங்களில் முக்கியமாக சில விடயங்களை கடைப்பிடிக்க வேண்டியுள்ளது.

  1. மீள்பாவனை – Reuse
  2. மீள்சுழற்சி – Recycle

என்ற நடைமுறைகளை இவ்விடயங்களில் கையாளுதல் அவசியம். அதைவிடவும் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பைகளை மக்கள் பாவனையிலிருந்து தடுப்பதற்க்கு இவ்வாறான வழிகளை கடைப்பிடிக்க வேண்டும்

  1. பொலித்தீன் பைகளுக்கு பதிலாக துணிப்பைகளை பாவித்தல்
  2. போத்தல் குடிநீர் வாங்குவதை நிறுத்தல்
  3. பிளாஸ்ரிக் போத்தல் மற்றும் பைகளுக்குப் பதிலாக கார்ட்போர்ட் அட்டைகளை உபயோகித்தல்
  4. ஸ்ரோக்களை தடைசெய்தல்
  5. அழிக்கக்கூடிய பிளாஸ்ரிக் முகசவர கத்திகளை உபயோகித்தல்
  6. லஞ்சீட்களை பயன்படுத்துவதற்க்கு பதிலாக தாமரை இலை, மற்றும் வாழை இலை போன்றவைகள் மற்றும் சில்வர் பாத்திரங்களை பயன்படுத்தல்
  7. பொலித்தீ்ன் பைகள் 20 மைக்ரோன்ஸ் தடிப்புடையவைகள் மட்டுமே பயன்படுத்தல்
  8. கடற்கரை சூழலில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள கொண்டு செல்வதை முற்றாக தடுத்தல்

இவ்வாறான செயற்பாடுகளை ஒவ்வொரு தனி மனிதனும் கடைப்பிடிடுத்து நடைமுறைப்படுத்தும் போது கடற்கரை சூழலை மட்டும் அல்லாமல் நாம் நாம் வாழும் பூமித்தாயையும் நாம் பாதுகாக்க முடியும். ஆபத்தான பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக்குகளை பயன்படுத்தி கடற்கரைச் சூழல் மாசுபடுவதை தடுப்பது அனைவரினதும் கடமை. எமது சூழலை நாமும் பயன்படுத்தி எமது எதிர்கால சந்ததிக்கும் விட்டுச் செல்வோம்

T.MOHAMED HISHAM
Thooppoor
GEO Special 3rd Year
SEUSL

உலகில், மனித குலத்துக்கு மட்டுமன்றி அனைத்து ஜீவராசிகளுக்கும், சமுத்திரங்களின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று 21ம் நூற்றாண்டில் நாம், கடற்கரையையும் கடல்சார் வளங்களையும் பராமரிப்பதும் பாதுகாப்பதும், மிக முக்கியமானது. கடப்பாடாக ஆகிவிட்டது. நாற்புறமும்…

உலகில், மனித குலத்துக்கு மட்டுமன்றி அனைத்து ஜீவராசிகளுக்கும், சமுத்திரங்களின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று 21ம் நூற்றாண்டில் நாம், கடற்கரையையும் கடல்சார் வளங்களையும் பராமரிப்பதும் பாதுகாப்பதும், மிக முக்கியமானது. கடப்பாடாக ஆகிவிட்டது. நாற்புறமும்…

14 thoughts on “பொலித்தீன் பிளாஸ்டிக் பாவனையால் மாசுபடும் கடற்கரையும் எமது மௌனமும்

  1. Hello, Neat post. There’s an issue with your web site in web explorer, could check thisK IE nonetheless is the market leader and a big component of other folks will leave out your wonderful writing due to this problem.

  2. I like what you guys are up too. Such intelligent work and reporting! Carry on the excellent works guys I’ve incorporated you guys to my blogroll. I think it will improve the value of my web site :).

  3. Thank you for sharing superb informations. Your web-site is very cool. I am impressed by the details that you¦ve on this web site. It reveals how nicely you perceive this subject. Bookmarked this website page, will come back for extra articles. You, my pal, ROCK! I found just the info I already searched everywhere and simply couldn’t come across. What an ideal web site.

  4. Wonderful website you have here but I was wanting to know if you knew of any forums that cover the same topics talked about in this article? I’d really love to be a part of online community where I can get opinions from other experienced people that share the same interest. If you have any recommendations, please let me know. Kudos!

  5. Just desire to say your article is as surprising. The clearness to your put up is just nice and that i can assume you’re knowledgeable on this subject. Well along with your permission let me to grab your RSS feed to stay up to date with approaching post. Thanks one million and please continue the rewarding work.

  6. I’ve been absent for some time, but now I remember why I used to love this blog. Thanks , I will try and check back more often. How frequently you update your web site?

  7. Heya! I’m at work surfing around your blog from my new apple iphone! Just wanted to say I love reading through your blog and look forward to all your posts! Carry on the excellent work!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *