மனிதநேயமும் பண்பாட்டு மாற்றமும்

  • 11

மனித நேயமும் பண்பாடும் வளமான வாழ்வுக்கான வளங்கள். பெருமையும் பொறாமையுமற்ற மக்களினால் சமூகமும் ஜொலிக்கும் நாடும் செழிக்கும். பிறரை மதிக்கும் பண்பாடும் வெற்றியை தட்டிக் கொடுத்துத் தோல்விக்குத் தோள் கொடுக்கும் குணமும் வாழ்வுத் தரத்தை உயர்த்தும் வழிகளாகும்.

ஜப்பான் எகிப்தை விட சிறிய நாடு. மக்கள் தொகை சுமார் 125 மில்லியன். இரண்டாம் உலகப் போரில் அணுகுண்டுப் பேரழிவை சந்தித்த நாடு. அப்படியிருந்தும் ஏழ்மை, வறுமை, பட்டினி எதுவுமே அங்கில்லை. தொழில்நுட்பத் துறையில் உச்சம் தொட்ட நாடு. உலகின் மிகப்பெரும் பொருளாதார சக்தியை கொண்டிருக்கும் முதன்மை நாடுகளுல் ஒன்று. அபிவிருத்தியின் அடையாளம்.

என்ன ஆச்சரியம் என்றால் அங்கு எண்ணை வளம், இயற்கை வளம் எதுவுமில்லை. ஆனால் இது எல்லாவற்றையும் விட விலை மதிப்பற்ற வளமொன்று அங்கிருக்கின்றது அதுதான் மனிதமும் மனிதநேயமும்.

எந்த மனிதனதும், நிறுவனத்தினதும், அஸ்திவாரம் மனிதமும் பண்பாடாகவும் இல்லையோ அவற்றால் உயர்ந்த சமூகமொன்றை உருவாக்கவே முடியாது. இருப்பதும் சீரழிந்து போகும். பயனற்ற கூடுதல் கல்வியை விட பண்பாடுகளின் அடைவே தற்காலத்தின் தேவையாகும்.

பாஹிர் சுபைர்

மனித நேயமும் பண்பாடும் வளமான வாழ்வுக்கான வளங்கள். பெருமையும் பொறாமையுமற்ற மக்களினால் சமூகமும் ஜொலிக்கும் நாடும் செழிக்கும். பிறரை மதிக்கும் பண்பாடும் வெற்றியை தட்டிக் கொடுத்துத் தோல்விக்குத் தோள் கொடுக்கும் குணமும் வாழ்வுத் தரத்தை…

மனித நேயமும் பண்பாடும் வளமான வாழ்வுக்கான வளங்கள். பெருமையும் பொறாமையுமற்ற மக்களினால் சமூகமும் ஜொலிக்கும் நாடும் செழிக்கும். பிறரை மதிக்கும் பண்பாடும் வெற்றியை தட்டிக் கொடுத்துத் தோல்விக்குத் தோள் கொடுக்கும் குணமும் வாழ்வுத் தரத்தை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *