மயிரைக் கரைத்து மருந்து தேடும் மடையர்கள்.

  • 54

அகிலங்களின் அதிபதி அல்லாஹ்வின் யதார்த்தமான பேச்சே அல்குர்ஆன். அல்லாஹ்வின் பேச்சை திரைமறைவில் செவிமடுத்து, அவற்றை பூமியில் இறைத் தூதர்களுக்கு எற்றிவைக்கும் வானவத் தூதர்களின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நம்பிக்கையாளர் கண்ணியம் நிறைந்த வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலம் இறுதி இறைத் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் பலவிதமான முறையில் இறக்கி அருளப்பட்டதாகும்.

இன்றும் அற்புத வேதமாக விளங்கும் இந்த குர்ஆன் விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள், நாஸ்தீக சிந்தனையாளர்கள் என பலரையும் தன்பக்கம் ஈர்த்துக் கொண்டிருக்கின்ற நிலையில் தொப்பி போட்ட முஸல்மானுக்கு மாத்திரம் அதுவல்ல; அதற்குள் விழுந்து கிடக்கும் ஒரு மயிர் துண்டு சீனாக் குரோனாவுக்கு நிவாரணம் தருகின்றதாம்.

ஏண்டா இந்தக் குர்ஆனை இவ்வளவு கேவலமாகப் பார்க்கின்றீர்கள். உங்கட மூளைக்கு என்னடா குரோனாவா பிடிச்சிட்டு.

குர்ஆன் ஓதுவதற்கே அன்றி, தொங்க விடுவதற்கல்ல.

இந்த அற்புத வேதத்தை ஓதவும், விளங்கவும், அதன் போதனைகளை எடுத்து நடக்கவுமே அல்லாஹ் அருளி இருக்க, இஸ்லாம் பற்றி எதுவும் அறிவில்லாத முஸ்லிம் பெயரில் வாழும் பல அறிவீனர்கள் அதனை மரண வீட்டு சடங்கு நூலாக பல்லாண்டுகள் மாற்றி வழிப்பட்டனர். அந்த நிலைமையை எப்படியோ மாற்றம் பெற்றது.

அந்த மௌட்டீக வழி நடக்கும் பலரே தமது வீடுகளில், கடைகளில், கழுத்துகளில், இடுப்புக்களில் தாயத்து, தகடு, போத்தல்கள் எனத் தொங்க விட்டு பரகத் வேண்டினர்.

அதுவும் கொஞ்சம் குறைந்து வரும் நேரத்தில் இருந்து கொண்டிருக்கும் நிலையில்

மாஷா அல்லாஹ் மற்றும் ஆயத்துல் குர்ஸி, யாசீன் சூறா போன்ற குர்ஆனிய வசனங்களை பதாதைதைகள் தயாரித்து வீடுகளில் தொங்கவிடும் தொப்பி அணிந்த நவீன மடையர்கள் உருவாகினர். இவர்கள் இன்னும் அழியவில்லை என்றே கூற வேண்டியுள்ளது.

மயிருக்குள்ளே மருந்து தேடும் பச்சை மடையர்கள்.

இவ்வேதம் அகிலத்தாருக்கு படிப்பினை தரும் நினைவூட்டலே அன்றி (வேறு) இல்லை. (அல்குர்ஆன்)

  1. அல்குர்ஆனை ஓதுங்கள். அதை ஓதியவருக்கு அது மறுமை நாளில் சிபாரிசு செய்யும் (ஹதீஸ்).
  2. அல்-பகரா அத்தியாயத்தை ஓதுங்கள். ஏனெனில் அல்-பகரா அத்தியாயம் ஓதப்படும் வீடுகளில் இருந்து ஷைதான் வெருண்டோடுகின்றான். (ஹதீஸ்)
  3. ஒருவர் அல்-பகரா அத்தியாயத்தின் இறுதி இரண்டு வசனங்களை ஒரு இரவில் ஓதினால் அதுவே அந்த இரவு முழுமைக்கும் அவருக்கு போதுமானதாகும் என (நபி ) ஸல் அவர்கள் கூறினார்கள். (ஹதீஸ்)
  4. படுக்கைக்கு செல்லும் போது ஆயத்துல் குர்ஸியை ஓதிக்கொண்டு படுத்துறங்கினால் அல்லாஹ்வின் வானவர் ஒருவர் பாதுகாப்பிற்காக நிற்பார். ஷைதான் அவரை நெருங்கவும் மாட்டான் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள் (ஹதீஸ்)

போன்ற அழகான, ஆணித்தரமான, அற்புதமான நபியின் பல ஹதீஸ்கள் பகரா சூராவின் சிறப்புக்களை எடுத்துக் கூறிக் கொண்டிருக்கின்ற போது பகரா சூறாவிற்குள் மயிர் தேடி அந்த மயிரை தண்ணீரில் போட்டு குடிப்பதால் குரோனா போன்ற நோயின் கிரிமித் தொற்றுவராது என இஸ்லாத்தின் பெயரால் பொய்க்கதை அளக்கும் வழிகேடர்கள் தஜ்ஜால் வந்தால் ஆஹா ஓடிவாங்க! ஓடிவாங்க! எங்கட பெரிய ஹஸரத் இந்த னா வந்திட்டாரு! அவரு அற்புதம் பல பண்ணுராரு என உளரிக் கொண்டு தஜ்ஜாலோடு கூட்டுச் சேர்ந்து, ஈஸா நபி (அலை) அவர்கள் சேர்ந்திருக்கும் நேர்வழி பெற்ற இமாம் மஹ்தி (ரழி) அவர்களின் உண்மையான ஜமாத்தைக் குறை காண மாட்டான்; எதிர்த்துப் போராடமாட்டான் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

முடி பிடித்து பெண்ணுக்கு துஆ ஓதத் தெரியாத ஊர்பலாய் பெண்களே இந்த மயிருக் கதையின் அறிவிப்பாளர்கள்.

இந்தப் பொய் ஷீஆ வழிகேடர்களைத் தொடர்பு படுத்தி முஸ்லிம் உலகில் ஏற்கெனவே வெளிவந்திருப்பதே இது ஷீஆக்களின் மறைந்து வாழும் கற்பனை மஹ்தி போன்ற என்பதற்கு மோதுமான சாட்சியமாகும்.

இறைத் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பைத்தியம் பிடிப்பதில் இருந்து பாதுகாப்பு தேடியதால் இவ்வாறான மடையர்களில் இருந்தும் அவர்களின் மடத்தனத்தில் இருந்தும் அல்லாஹ் நம்மையும் முஸ்லிம் சமூகத்தையும் பாதுகாப்பானாக!

எம்.ஜே.எம்.ரிஸ்வான் மதனி

அகிலங்களின் அதிபதி அல்லாஹ்வின் யதார்த்தமான பேச்சே அல்குர்ஆன். அல்லாஹ்வின் பேச்சை திரைமறைவில் செவிமடுத்து, அவற்றை பூமியில் இறைத் தூதர்களுக்கு எற்றிவைக்கும் வானவத் தூதர்களின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நம்பிக்கையாளர் கண்ணியம் நிறைந்த வானவர் ஜிப்ரீல்…

அகிலங்களின் அதிபதி அல்லாஹ்வின் யதார்த்தமான பேச்சே அல்குர்ஆன். அல்லாஹ்வின் பேச்சை திரைமறைவில் செவிமடுத்து, அவற்றை பூமியில் இறைத் தூதர்களுக்கு எற்றிவைக்கும் வானவத் தூதர்களின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நம்பிக்கையாளர் கண்ணியம் நிறைந்த வானவர் ஜிப்ரீல்…

10 thoughts on “மயிரைக் கரைத்து மருந்து தேடும் மடையர்கள்.

  1. I have not checked in here for some time as I thought it was getting boring, but the last few posts are great quality so I guess I?¦ll add you back to my daily bloglist. You deserve it my friend 🙂

  2. I conceive this site has some really superb information for everyone. “Je veux que les paysans mettent la poule au pot tous les dimanches.” by King Henry IV of France.

  3. I have recently started a web site, the information you provide on this website has helped me tremendously. Thanks for all of your time & work. “Quit worrying about your health. It’ll go away.” by Robert Orben.

  4. Magnificent goods from you, man. I have take note your stuff previous to and you’re simply extremely fantastic. I actually like what you’ve received here, really like what you’re saying and the way in which wherein you say it. You’re making it enjoyable and you continue to care for to keep it smart. I can not wait to read much more from you. This is really a great site.

  5. What Is Aizen Power? Aizen Power is presented as a distinctive dietary supplement with a singular focus on addressing the root cause of smaller phalluses

  6. I like what you guys are up too. Such smart work and reporting! Carry on the excellent works guys I have incorporated you guys to my blogroll. I think it’ll improve the value of my web site 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *