Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
மர்ஜான் பளீலின் முயற்சியினால் மூன்று பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்வு - Youth Ceylon Sri Lanka Research Magazine & Business Store

மர்ஜான் பளீலின் முயற்சியினால் மூன்று பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்வு

  • 18

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

பேருவளை தொகுதிக்குட்பட்ட, ஸேம் ரிபாய் ஹாஜியார் மகா வித்தியாலயம், நளீம் ஹாஜியார் பெண்கள் பாடசாலை, தர்கா நகர் ஸாஹிரா கல்லூரி ஆகிய மூன்று பாடசாலைகளையும் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பித்து வைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் தெரிவித்தார்.

மேலும் ஏற்கனவே தேசிய பாடசாலைகளாக இருந்த அல்ஹுமைஸரா தேசிய பாடசாலை,எதர்கா நகர் மத்திய மகளிர் தேசிய பாடசாலை ஆகிய இரு பாடசாலைகளினதும் அடிப்படைத் தேவைகளை இன்னும் மேம்படுத்துவதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் காரியாலயத்தில் நேற்று முன்தினம் (27) நடைபெற்ற கலந்துரையாடலில், பேருவளை பிரதேச முஸ்லிம் தேசியப் பாடசாலை அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இங்கு அறிவுஜீவிகள் மத்தியில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கல்விச் சேவைகள் அமைச்சரும் களுத்துறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான பியல் நிஷாந்த அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

களுத்துறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் அவர்களின் கடும் அழுத்தங்களால் இம் மாவட்டத்தில் அதிகமான முஸ்லிம் பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்த முடிந்ததாக  தெரிவித்தார்.

அரசின் 1000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தும் பணிகள் மிக நெருக்கடிகளுக்கு மத்தியில் இடம் பெற்றன. இந்த நிலைமையால் களுத்துறை மாவட்டத்திலிருந்து ஒரு பாடசாலையை மாத்திரமே தெரிவு செய்ய முடியுமாக இருந்தது.

எனினும் இம்மாவட்டத்தின் உங்கள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் ஹாஜியார், அனைத்துப் பாடசாலைகளையும் தேசிய பாடசாலைகளாக்க வேண்டும் என எனக்கு அழுத்தங்களைத் தந்து கொண்டிருந்தார்.

சிறந்த நண்பர்கள் சகோதரர்களாக நாங்கள் தொடர்புகளை வைத்துள்ளோம். அவரது வேண்டுகோளை என்னால் நிராகரிக்க முடியவில்லை.

அதனால் நான் உயர் மட்டங்களோடு, அதிகாரிகளோடு பேசி அவரால் சிபாரிசு செய்யப்பட்ட களுத்துறை மாவட்டத்திலுள்ள பாடசாலைகளை தேசியப் பாடசாலைகளாக தர முயர்த்தினேன்.

இப்பிரதேசத்தில் முஸ்லிம் நண்பர்களுடன் நான் ஒன்றாக கல்வி கற்றுள்ளேன். ஆனால் எங்களுக்குள் எந்த பேதங்களும் இருந்ததில்லை.

எனவே பிரதேச முஸ்லிம்களின் கல்வி, சமூக, பொருளாதார விடயங்களில் தொடர்ந்தும் என்னுடைய பங்களிப்பை வழங்குவேன்.

இன்று தேசிய பாடசாலைகள் பெயர் பலகைக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளில் பல்வேறு எண்ணிலடங்காத குறைபாடுகள் இருக்கின்றன.

ஆனால் என்னுடைய பதவிக்காலத்தில் தேசிய பாடசாலைகள் அனைத்துக்கும் உரித்தான சகல வசதிகளையும் வழங்கி மாணவர்களின் கல்வி முன்னேற்றறத்துக்கு பங்களிப்புச் செய்வேன். குறிப்பாக இப்பிரதேச முஸ்லிம் தேசியப் பாடசாலை மாணவர்களின் கல்வித் தேவைகளை நிவர்த்தி செய்வதில் கண்ணும் கருத் துமாக இருப்பேன் எனவும் அவர் தெரிவித்தார். LNN Staff

பேருவளை தொகுதிக்குட்பட்ட, ஸேம் ரிபாய் ஹாஜியார் மகா வித்தியாலயம், நளீம் ஹாஜியார் பெண்கள் பாடசாலை, தர்கா நகர் ஸாஹிரா கல்லூரி ஆகிய மூன்று பாடசாலைகளையும் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பித்து வைத்துள்ளதாக…

பேருவளை தொகுதிக்குட்பட்ட, ஸேம் ரிபாய் ஹாஜியார் மகா வித்தியாலயம், நளீம் ஹாஜியார் பெண்கள் பாடசாலை, தர்கா நகர் ஸாஹிரா கல்லூரி ஆகிய மூன்று பாடசாலைகளையும் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பித்து வைத்துள்ளதாக…