Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
மாறை/ கொடபிடிய ஸாதாத் மகா வித்தியாலய வரலாறு 

மாறை/ கொடபிடிய ஸாதாத் மகா வித்தியாலய வரலாறு

  • 252

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

மாறை/ கொடபிட்டிய ஸாதாத் மகா வித்தியாலயம் ஆனது பள்ளிவாசலுக்கு உரித்தான காணியில் ஓர் திண்ணைப் பள்ளிக்கூடமாக 1934 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அப்போது பள்ளிவாசலுக்கு பொறுப்பதிகாரியாக இருந்த என்.ஐ.எம்.அப்துல் மஜீத் கலீபா அவர்களை முகாமையாளராக கொண்டு இது இயங்கி வந்தது. எம்.ஸீ.எம்.ஸ(Z)க்கரியா என்பவரே எமது பாடசாலையின் முதல் மாணவராவார்.

1935.01.01 முதல் இத்திண்ணைப் பாடசாலைக்கு ஊர் நலன் விரும்பிகள் சிலர் “புஸ்வத்த ஒவிட்ட” என்ற நிலப்பகுதிகளையும் சேர்த்து உதவி புரிந்தனர்.இதன் பின்னர் 1935.01.01 முதல் “கொடப்பிட்டிய தமிழ் பாடசாலை” எனும் பெயரில் ஆரம்பமாகி இயங்கியது.

1936.11.01ம் திகதி திரு.சிதம்பரம்பிள்ளை என்பவர் முதல் தலைமை ஆசிரியராக நியமனம் பெற்றார். 1938 ஆம் ஆண்டு கொடபிட்டிய தமிழ் பாடசாலையை, அதன் முகாமையாளர் அப்துல் மஜீத் கலிபாவிடமிருந்து அரசாங்கம் பொறுப்பேற்றது. அதுவரை உதவி நன்கொடை பெறும் ஒரு பாடசாலையாகவே பதிவு செய்து நடத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்க ஓர் விடயமாகும்.

1941 ஆம் ஆண்டு நடைபெற்ற சிரேஷ்ட பாடசாலை தராதரப் பரீட்சையில் (S.S.C) முதன்முதலாக எமது பாடசாலையில் இருந்து தோற்றிய டீ.எம்.அப்துல் மஹ்மூத் என்பவர் சிறப்பாக சித்தி பெற்று பாடசாலைக்கு கீர்த்தியை ஏற்படுத்தித் தந்தார். அதேபோல் அல்ஹாஜ் எம்.ஸீ.எம். ஸாஹிர் என்பவர் முதல் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து பாடசாலைக்கு மேலும் வலுவூட்டினார். இவ்வாறு பாடசாலை வளர்ச்சி அடைய அவ்வக் காலகட்டங்களில் சேவை புரிந்த ஆசிரியர்களையும் அதிபர்களையும் என்றென்றும் மறத்தலாகாது.

1953.03.26 அன்று நடைபெற்ற சிரிஷ்ட பாடசாலை தராதர பரீட்சையில் (S.S.C.) எம்.ஸீ.எம். ஸாஹிர் அவர்கள் முதல் தரத்திலேயே சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமையை ஈட்டிக் கொடுத்தார்கள். எம்.எஸ்.எம்.ஜிப்ரி என்ற மாணவன் அதே ஆண்டு நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து கல்லூரிக்கு பெருமை ஈட்டிக்கொடுத்தார்.

இவ்வாறு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இருந்து வளர்ந்து வந்த எமது பாடசாலைக்கு ஒரு பெரும் திருப்பு முனையாக அமைந்தது, 1966ஆம் ஆண்டு “பண்டாரவத்த” என்ற நிலப்பரப்பு அப்போதைய கலையக அதிபரான ஏ.ஸீ.எம்.பாரூக் என்பவரின் அரும் பெரும் முயற்சியினால் எமது பாடசாலைக்கு சொந்தமாக்கப்பட்டமையாகும். அன்னாருடைய காலத்தில் “கொடப்பிட்டிய அரசினர் கலவன் பாடசாலை” எனும் பெயரில் இருந்த எமது பாடசாலை 1970.03.13 முதல் “ஸாதாத் வித்தியாலயம்” எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது. அதன் பின்னர் 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் ஏ.எம்.எப்(F). மதனியா , எம்.எம்.ஏ. ராபிஉ ஆகியோர் சித்தி அடைந்தனர்.

பாடசாலை கட்டடத்தில் மாணவர்களுக்கு தொடர்ந்தும் கற்பது சிரமம் என்பதால் இட நெருக்கடியைக் குறைக்க 1966களில் எமது பாடசாலைக்குச் சொந்தமாகிய “பண்டாரவத்த” காணியில் ஒரு பாடசாலை கட்டடத் தொகுதியை அமைக்க வேண்டும் என்ற நலன் விரும்பிகள் யாபேரினதும் அவா காரணமாக 1972 ஆம் ஆண்டுகளில் கல்வி அமைச்சின் தகவல் பிரிவு தமிழ் துறை தலைவராக கடமையாற்றிய எமது ஊரைச் சேர்ந்த எம்.எஸ்.முஹம்மத் அவர்களின் அயராத முயற்சியின் விளைவாக அங்க சம்பூரணம் வாய்ந்த அழகிய பாடசாலை கட்டிடம் ஒன்று அமைத்துத்தரப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் அன்றைய கல்வி அமைச்சர் கலாநிதி காயிதே மில்லத் பதியுதீன் மஹ்மூத் அவர்களை நன்றியுடன் நினைவு கூற கடமைப்பட்டுள்ளோம். 1977 ஆம் ஆண்டு எமது பாடசாலைக்கு விளையாட்டுத் திடல் ஒன்று அவர் முயற்சியில் கிடைக்கப்பெற்றது.

1978 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை எழுதிய 25 மாணவர்களுள் 15 பேர் உயர்தரம் கற்கத் தகுதி பெற்றதன் விளைவாக எமது பாடசாலை 1979 ஆம் ஆண்டில் “ஸாதாத் மஹா வித்தியாலயம்” என தரமுயர்த்தப்பட்டு க.பொ.த. உயர்தர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன.இதன் பிரகாரம் 1982ல் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் 7 மாணவர்கள் பல்கலைக்கழகப் பிரவேசத் தகுதியுடன் சித்தி பெற்றனர். உம்மு ஹபீபா என்பவர் எமது பாடசாலையிலிருந்து முதன் முதலில் பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்றுச் சென்றவராவார்.

அதன் பின்னர் எமது பாடசாலை புத்தெழுச்சி பெற்று செயற்பட்டு வருகையில் 2003.05. 17 நடைபெற்ற இயற்கை அனர்த்தமான பெரு வெள்ளம் காரணமாக எமது பாடசாலை கட்டிடம்,விவசாய ஆய்வுக்கூடம் என்பன உடைந்து விழுந்தது மாத்திரமன்றி, பாடசாலை தளபாடங்கள் அனைத்தும் அதில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் நிர்க்கதியான எமது மாணவர் நலன் கருதி எமக்கு ஒத்துழைப்புக்கள் தந்தோர் பலர். அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டார்நாயக்க குமாரதுங்க அவர்களின் ஆட்சியில் எமது பிரதேசத்தைப் பிரதி நிதித்துவப்படுத்திய எச்.ஜீ.சிறிசேன என்பவரால் தற்போதைய எமது இரண்டு மாடி கட்டிடமாக இருக்கும் பாடசாலையும் மலேசிய நாட்டின் உதவியுடன் ஆரம்ப பிரிவு பாடசாலையின் இரு மாடி கட்டடங்களும் அமைத்து தரப்பட்டது.

பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், எமது ஊர் நலன் விரும்பிகள், பழைய மாணவர்கள், அனைவரினதும் உதவி ஒத்தாசைகள் எமது பாடசாலைக்கு கிடைத்துக் கொண்டிருப்பதால் நாளுக்கு நாள் எமது பாடசாலை அபிவிருத்தி அடைந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

இன்று 28 ஆசிரியர்களையும் 435 மாணவர்களையும் கொண்டு இயங்கி வரும் எமது பாடசாலை ஒரு நவோத்யா பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இப்பாடசாலையில் கல்வி கற்றுத் தேர்ந்தோர் இன்று உயர்நிலைகளில் உள்ளமையும் சிறப்புக்குரிய விடயமாகும்.

1990களில் கல்விப் பணியில் முன்னேரி 2000 ஆம் ஆண்டுகளில் களனிக் கூட்டத்துடன் சேர்ந்த எமது பாடசாலையில் தொழில்நுட்பக் கல்வியும் கற்பிக்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்தும் புலமைப் பரிசில் பரீட்சை , க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை , க.பொ.த. உயர் தரப் பரீட்சை என்பவற்றில் மாணவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தி பாடசாலையை மென்மேலும் முன்னேற்றமடையச் செய்கின்றனர். பல்கலைக்கழக அனுமதிகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

1935ல் ஆரம்பிக்கப்பட்ட எமது பாடசாலை 1985 ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாடியது மட்டுமன்றி 1995ஆம் ஆண்டு வைரவிழாவையும் கொண்டாடி மகிழ்ந்தது.2035 ஆம் ஆண்டு நூற்றாண்டை எட்டிப் பிடிக்கும் எமது பாடசாலை மேலும் முன்னேறி சகல தேவைகளும் பூர்த்தியடைந்த ஒரு மத்திய மகா வித்தியாலயமாக உயர்த்தி பெற வேண்டும் என பிரார்த்திக்கின்றோம். வாழ்க எமது பாடசாலை!! வளர்க அதன் பணிகள்!!

நன்றி

MR/Godapitiya Sadath Maha Vidiyalaya

மாறை/ கொடபிட்டிய ஸாதாத் மகா வித்தியாலயம் ஆனது பள்ளிவாசலுக்கு உரித்தான காணியில் ஓர் திண்ணைப் பள்ளிக்கூடமாக 1934 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அப்போது பள்ளிவாசலுக்கு பொறுப்பதிகாரியாக இருந்த என்.ஐ.எம்.அப்துல் மஜீத் கலீபா அவர்களை முகாமையாளராக…

மாறை/ கொடபிட்டிய ஸாதாத் மகா வித்தியாலயம் ஆனது பள்ளிவாசலுக்கு உரித்தான காணியில் ஓர் திண்ணைப் பள்ளிக்கூடமாக 1934 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அப்போது பள்ளிவாசலுக்கு பொறுப்பதிகாரியாக இருந்த என்.ஐ.எம்.அப்துல் மஜீத் கலீபா அவர்களை முகாமையாளராக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *