Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
இஸ்ரேலுக்காக அமெரிக்காவின் MQ-9 Reaper உளவு விமானம்? 

இஸ்ரேலுக்காக அமெரிக்காவின் MQ-9 Reaper உளவு விமானம்?

  • 100

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

புலிகளை அழிப்பதற்கு எவ்வாறு அமெரிக்கா பங்களித்தது ?

ஒரு போரில் வெற்றிபெறுவதற்கு அல்லது எதிரிகளை அழித்தொழிப்பதற்கு உளவுத் தகவல்கள் மிகவும் முக்கியமானது. அவ்வாறு போரில் பங்குகொள்ளும் தரப்புக்கு துல்லியமான உளவுத் தகவல்களை பெற்றுக்கொள்வதில் தடைகள் இருந்தால், தனது நற்பு நாட்டின் உதவியை நாடுவர்.

பாலஸ்தீனில் போர் ஆரம்பித்ததிலிருந்து காசாவின் மேற்பரப்பில் MQ-9 Reaper உளவு விமானங்களின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகின்றது. இது அமெரிக்காவின் உளவு விமானங்கள் என்று ஹமாஸ் அமைப்பினர் உறுதியாகத் தெரிவித்தனர். ஹமாசின் இந்த அறிவிப்புக்கு ஆரம்பத்தில் அமெரிக்கா மறுப்பு தெரிவித்தது. பின்பு அது ஹமாசினால் பணயக்கைதியாக வைக்கப்பட்டுள்ள அமெரிக்க பிரஜைகள் பற்றிய தகவலை அறிவதற்காக உளவு நடவடிக்கையில் ஈடுபட்டதாக அமெரிக்கா தெரிவித்தது.

இது சர்வதேசத்தை ஏமாற்றும் நோக்கில் அமெரிக்காவினால் கூறப்பட்ட பொய்யாகும். ஹமாசினால் பிடிபட்டவர்கள் நிலக்கீழ் சுரங்கத்திற்குள் வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது அனைவரும் அறிந்த விடையம். அவ்வாறு வைக்கப்பட்டவர்களை எவ்வாறு உளவு விமானத்தினால் அடையாளம்காண முடியும் ?

விடுதலை புலிகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் நடாத்திய இறுதிப் போரின்போது விடுதலைப் புலிகளின் விநியோக பாதைகள் அனைத்தையும் அழித்தொழிக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டனர். இதற்காக இந்தியாவின் ரோ மாத்திரமல்லாது அமெரிக்காவின் உதவியையும் இலங்கை பெற்றுக்கொண்டது.

அந்தவகையில் சர்வதேச கடற்பரப்பிலிருந்து முல்லைத்தீவு கடல் வழியாக ஆயுத விநியோகத்தினை தடுக்கும் நடவடிக்கைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. அதற்காக வெவ்வேறு நாடுகளின் கொடிகளுடன் ஆயுதங்களை ஏற்றிவருகின்ற விடுதலைப் புலிகளின் கப்பல்களை சர்வதேச கடற்பரப்பில் வைத்து அழித்தொழிப்பதற்காக புலிகளின் கப்பல்களை இனம் கண்டு அமெரிக்காவின் உளவுப்பிரிவினர் இலங்கைக்கு தகவல்களை வழங்கினர்.

அவ்வாறு பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கடந்த 2006,2007,2008 ஆகிய ஆண்டுகளின் ஏராளமான புலிகளின் கப்பல்கள் இலங்கையின் கிழக்கு பக்கமாக சர்வதேச கடற்பரப்பில் தாக்கி அழிக்கப்பட்டது.

அதாவது அடையாளம் காணமுடியாத புலிகளின் ஆயுத கப்பல்களை அழிப்பதற்கான புலனாய்வுத் தகவல்களை இலங்கை அரசுக்கு அமெரிக்கா வழங்கியது. அவ்வாறு அமெரிக்கா உதவி செய்யாதிருந்திருந்தால் புலிகளின் ஆயுத விநியோகத்தினை கட்டுப்படுத்துவது கடினமாக இருந்திருக்கும்.

அதுபோலவே தற்போது காசாவில் ஹமாஸ் இயக்கத்தின் ஆள் நடமாட்டங்கள், ரொக்கட் மற்றும் ஏவுகணை நிலைகள், சுரங்கப் பாதைகள், பதுங்குக்குழிகள், விநியோகப்பாதைகள் போன்றவற்றை உளவு விமானம் மூலம் அடையாளம் கண்டு அதன் தகவலை இஸ்ரேலுக்கு வழங்குகின்றனர்.

தகவல் கிடைத்தவுடன் இஸ்ரேலிய விமானப்படை அல்லது தரைப்படையினர் அந்த பிரதேசத்தினை நோக்கி கண்மூடித்தனமான தாக்குதல்களை நடாத்துகின்றனர். அவ்வாறான தாக்குதல்களின்போது அப்பாவி மக்களே கொல்லப்படுகின்றனர். இவ்வாறான கொலைகளுக்கு அமெரிக்காவின் பங்களிப்பும் உள்ளது.

எனவே இவ்வாறான நடவடிக்கையின் மூலமாக இந்த போரில் ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேலிய படைகளுக்கு எதிராக மாத்திரம் போர் புரியவில்லை. மாறாக உலகின் முதன்மை வல்லராசன அமெரிக்காவுடனும் போர் புரிந்துவருகின்றார்கள்.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

புலிகளை அழிப்பதற்கு எவ்வாறு அமெரிக்கா பங்களித்தது ? ஒரு போரில் வெற்றிபெறுவதற்கு அல்லது எதிரிகளை அழித்தொழிப்பதற்கு உளவுத் தகவல்கள் மிகவும் முக்கியமானது. அவ்வாறு போரில் பங்குகொள்ளும் தரப்புக்கு துல்லியமான உளவுத் தகவல்களை பெற்றுக்கொள்வதில் தடைகள்…

புலிகளை அழிப்பதற்கு எவ்வாறு அமெரிக்கா பங்களித்தது ? ஒரு போரில் வெற்றிபெறுவதற்கு அல்லது எதிரிகளை அழித்தொழிப்பதற்கு உளவுத் தகவல்கள் மிகவும் முக்கியமானது. அவ்வாறு போரில் பங்குகொள்ளும் தரப்புக்கு துல்லியமான உளவுத் தகவல்களை பெற்றுக்கொள்வதில் தடைகள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *