Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
முதுமையின் தேவை என்னவென்று தெரியுமா? 01 

முதுமையின் தேவை என்னவென்று தெரியுமா? 01

  • 97

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

ஓர் மனோவியியல் அணுகுமுறை

பொதுவாக முதியோர் உளவியல் (Elder Psychology) குழந்தையை உளவியலை (Child psychology) போன்றதாகவே காணப்படும்.

அத்தகைய உளவியல் நோக்கில் முதியவர்களை அணுகுவதே அவர்களது உள ஆரோக்கியத்தை வளப்படுத்தும் . முதுமை சில விஷயங்களை அதிகம் எதிர்பார்க்கும்.

  1. எல்லா விஷயங்களிலும் தனது ஆளுகை இருக்க வேண்டும்.
  2. எல்லா சந்தர்ப்பங்களிலும் தனது பேச்சுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு தான் பேசுவதை ஏனையோர் ஆழ்ந்து கேட்க வேண்டும்.
  3. அதிகம் அமைதியை நாடுதல்
  4. அதிகம் தனிமையை விரும்புதல்.
  5. அன்பும் கனிவும் நிறைந்த அணுகுமுறை.
  6. தான் யாருக்கும் பாரமாக இருப்பதை விரும்பாமை.

(இன்னும் எத்தனையோ விடயங்களை எதிர்வரக்கூடிய பதிவுகளில் விளக்குகின்றேன்)

இனி ஏனையோரது பேச்சை செவியேற்பதை விட தனது பேச்சை ஏனையோர் காது தாழ்திக் கேட்க வேண்டும் என அதிகம் எதிர்பார்ப்பது முதுமையின் மிக முக்கியமான இயல்பு.

இந்த சந்தர்ப்பத்தில் வீட்டிலுள்ள பலரும் தவறிழைத்து விடுகின்றனர்.

தன்னுடைய உடலிலுள்ள நோய்கள், மனதிலுள்ள வலிகள், வடுக்கள் (Trauma) , மற்றும் வயோதிபத்தினால் ஏற்பட்டுள்ள இயலாமைகளை இன்னுமொருவரிடம் கொட்டித் தீர்க்க முதுமை எப்போதும் எதிர்பார்த்திருக்கும். இதனூடாக அவர்கள் மிகப்பெரும் ஆறுதலை அடைகிறார்கள்.

இந்த சந்தர்ப்பங்களில் நாம் எவ்வாறான பிரதிவெளிப்பாடுகளைக் கொண்டிருக்க வேண்டும்?

ஆழ்ந்து செவிமெடுத்தல் (Active Listening)

பொதுவாக இது பரஸ்பர உரையாடல்களின் வினைத்திறனை அதிகரிக்கச் செய்ய வலியுறுத்தப்பட்டதாக இருந்தாலும் முதியவர்களுடனான உரையாடல்களில் தவிர்க்க முடியாததாகக் காணப்படும்.

– முகபாவனைகளின் பிரதிபலிப்புக்கள் (Facial Reflections)

– உடனிருத்தல் ( Attending ) உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் அவர்களைச் சுற்றியே நமது அவதானம் முழுமையாக அமையப்பெற்றுள்ளது என்பதை அவர்கள் உணரும் விதமாக செயற்படல்.

இந்த சந்தர்ப்பங்களில் அவர்கள் தொடர்ச்சியாகப் பேசுவதை இடைமறிப்பது, நமது எடுத்துக்காட்டுக்கள், அலட்சியப்படுத்தும் அங்க அசைவுகள் மற்றும் பேச்சைப் புறக்கணிக்கும் வார்த்தைகள் கடுமையாகப் பாதிப்பை ஏற்படுத்தும்.

அன்பான வார்த்தைகளால்க் கிளர்தலும் (Probing) ஆராதித்தலும்

முதியவர்களைப் பொறுத்தளவில் எப்போதும் தன்னுடைய இறந்தகாலத்தை நினைவூட்டிய பேச்சுக்களில் அதிக ஆர்வத்தைக் கொண்டிருப்பார்கள்.

தான் வாழ்க்கையில் எதிர்கொண்ட மனிதர்கள், சவால்கள் மற்றும் மறவாத இனிமையான நிகழ்வுகளை மீட்டி மீட்டிப் பேசுவதில் அலாதியான இன்பம் காண்பது தான் முதுமையின் இயல்பு.

இந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் ஏற்கனவே சொல்லி நமது காதுகளுக்குப் புலித்துப்போன விஷயமாக இருந்தாலும் அவர்களைத் தடுக்காமல்ப் பேசுவதற்கு இடமளிக்க வேண்டும்.

இந்த Ventilation அவர்களது மனதின் இறுக்கத்தைத் தளர்வடையச் செய்வதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

அவர்களை அதிகம் சிரிக்கச் செய்வது அவர்களது உள்ளத்திற்கு ஆரோக்கியமாக அமைவதாக வெளிப்படைக்குத் தோன்றப் பெற்றாலும் சில சந்தர்ப்பங்களில் அவர்களது உடல் ஆரோக்கியத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.

மனதிற்கு இதமான ஒத்தடம் கொடுக்கும் நமது அணுகுமுறைகள் மற்றும் வார்த்தைகளே அவர்களது உள ஆரோக்கியத்தை அதிகம் வலும் பெறச் செய்கின்றது.

எனவே இப்போது நாம் வீட்டில் அதிக நேரத்தைக் கழிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ள காரணங்களினால் அவர்களை ஆசுவாசப்படுத்தும் விதத்தில் அவர்களுடனான உறவைக் கட்டியெழுப்புவோம்.

தொடரும்…
A.B.M Waseem (Naleemi)
Monetize your website traffic with yX Media

ஓர் மனோவியியல் அணுகுமுறை பொதுவாக முதியோர் உளவியல் (Elder Psychology) குழந்தையை உளவியலை (Child psychology) போன்றதாகவே காணப்படும். அத்தகைய உளவியல் நோக்கில் முதியவர்களை அணுகுவதே அவர்களது உள ஆரோக்கியத்தை வளப்படுத்தும் . முதுமை…

ஓர் மனோவியியல் அணுகுமுறை பொதுவாக முதியோர் உளவியல் (Elder Psychology) குழந்தையை உளவியலை (Child psychology) போன்றதாகவே காணப்படும். அத்தகைய உளவியல் நோக்கில் முதியவர்களை அணுகுவதே அவர்களது உள ஆரோக்கியத்தை வளப்படுத்தும் . முதுமை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *