சடலங்களை எரிப்பதால் வைரஸ்ஸை அழிக்க முடியுமா?

  • 6

கொரோனா தொற்றுப் பாதிப்பால் உயிர் நீக்கும் உடல்களை எரியூட்ட வேண்டும். எரிப்பதால் மட்டுமே கொவிட்19 வைரஸை அழிக்க முடியும். முதற் கோணல் முற்றிலும் கோணலாகிவிடக் கூடாது என்பதற்காக தமது வலிதற்ற வாதத்தை வலிதாக்கும் எத்தனிப்பில் சிலர் ஈடுபடுவதாகவே தெரிகிறது.

கொவிட்19 வைரஸானது ஒரு சவர்க்கார சலவையில் போய்விடும் என்கிறார்கள். அதனால்தான் கைகளை நன்கு சவர்க்காரம் இட்டு கழுவுமாறு அறிவுறுத்தப்படுகிறது. கொரோனா தொற்றாளர்களுக்கு வைத்தியம் செய்யும் வைத்தியர்களும் தாதி உத்தியோகத்தர்களும் PPE பாதுகாப்பு அங்கிகள் அணிந்து கொள்ள வேண்டும், அப்போதுதான் அவர்களுக்கு தொற்றாது தடுக்க முடியும் என்கிறார்கள்.

மாஸ்க் முக கவசம் அணிந்து கொள்ளுங்கள் அதன் மூலம் அந்த வைரஸ் தொற்றை தடுக்கலாம் என்று வலியுறுத்துகிறார்கள். ஆனால் சுமார் ஏழு அடி ஆழத்தில் மண்ணில் புதைத்தால் அது பாதிப்பு என்கிறார்கள். அதுவும் பாதுகாப்பான பொலிதீன் பையினால் கட்டப்பட்டு முழுவதும் அடைக்கப்பட்ட பெட்டியில் வைத்து புதைக்கப்படும் உடலில் இருக்கும் வைரஸால் பாதிப்பு வரும் என்கிறார்கள்.

இது ஒர் ஆக்கபூர்வமான, ஆரோக்கியமான, ஏற்புடைய வாதமாகத் தெரியவில்லை. எரிப்பதற்கு ஏதேனும் காரணம் சொல்ல வேண்டும் என்பதற்காக திரை மறைவில் திட்டமிடப்பட்ட காரணங்களை சொல்வதாகவே தெரிகிறது. இதன் மூலம் பிடிப்போடும் சேவை பனப்பாங்கோடும் பணியாற்றி வரும் வைத்தியர்களும் தாதி உத்தியோகத்தர்களும் இனி தள்ளி நிக்கும் நிலை கூட உருவாகும்.

இறந்தால் நம்மையும் எரிப்பார்கள் என்ற பயம் ஏற்படும், ஏழடி மண்ணையே தாண்டி வரும் இந்த வைரஸ் நாம் அணிந்திருக்கும் இந்த அங்கிக்கு எங்கே தாக்குப்பிடிக்கும் என்ற எண்ணம் உருவாகும். அச்சம் அதிகரிக்கும். உலவியல் பாதிப்புகள் கூட ஏற்படும். அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன். அவன் நாட்டம் எதுவோ அதுவே நடக்கும்.

ஹாறூன் (ஸஹ்வி)

Monetize your website traffic with yX Media

கொரோனா தொற்றுப் பாதிப்பால் உயிர் நீக்கும் உடல்களை எரியூட்ட வேண்டும். எரிப்பதால் மட்டுமே கொவிட்19 வைரஸை அழிக்க முடியும். முதற் கோணல் முற்றிலும் கோணலாகிவிடக் கூடாது என்பதற்காக தமது வலிதற்ற வாதத்தை வலிதாக்கும் எத்தனிப்பில்…

கொரோனா தொற்றுப் பாதிப்பால் உயிர் நீக்கும் உடல்களை எரியூட்ட வேண்டும். எரிப்பதால் மட்டுமே கொவிட்19 வைரஸை அழிக்க முடியும். முதற் கோணல் முற்றிலும் கோணலாகிவிடக் கூடாது என்பதற்காக தமது வலிதற்ற வாதத்தை வலிதாக்கும் எத்தனிப்பில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *