Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
முதுமையின் தேவை என்னவென்று தெரியுமா? 02 

முதுமையின் தேவை என்னவென்று தெரியுமா? 02

  • 11

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

ஓர் மனோவியியல் அணுகுமுறை

(2019. 11. 03 தெல்லிப்பனை சாந்தியகம் சென்றபோது அங்குள்ள முதியவர்களிடம் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னணியில் எழுதப்பட்டது)

குடும்பங்களில் பேரக்குழந்தைகளுக்கும் முதியவர்களுக்குமிடையிலான உறவும் இப்படித்தான். பேரக்குழந்தைகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்கு அல்லது தன்னைச் சார்ந்த நோக்கில் வளர்க்க முற்படுவதும் பெற்றோர்கள் அதனை ஏற்று நடப்பதும் முறண்படுவதும் அவர்களது உளநிலையை நேரடியாகப் பாதிக்கக்கூடியது.

குழந்தைகளது கல்வி, உணவு, நடத்தை போன்ற பலவிதமான சந்தர்ப்பங்களில் தங்களது தலையீட்டைக் கொண்டிருப்பதும் குழந்தைகளது பெற்றோர்களின் அதிருப்தியை ஏற்படுத்தும் நிலையைப் பல குடும்பங்களில் கருதப்படுகிறது.

தனது அதிகரித்த அன்பை வெளிப்படுத்தவே அவர்கள் இவ்வாறான நடைமுறையைக் கைக்கொள்கின்றார்கள். ஆனால் முதியோரில்லத்திற்கு அவர்களைக் கொண்டு போய்ச் சேர்க்கும் நிலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

Stephen Jenkinson தன்னுடைய “Come of Age : the case for Elderhood in a Time of Trouble ” என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

“வயதில் முதுமையடைந்தவர்கள் அதிகரிக்கின்றார்கள். ஆனால் (அறிவில்) முதிர்வடைந்த முதியவர்கள் குறைவாகவே காணப்படுகிறார்கள்.” என்கின்றார்

Maslow வின் கருத்திற்கமைய முதுமையடைந்தவர்கள் மட்டுமே சுய அடைவினை (Self Actualization) அடையப்பெற்றவர்களாக உள்ளனர். ஏனெனில் ஏனையோர் இன்னும் தங்களது அடிப்படைத் தேவைகளைப் (அடையாளம், தொழில்) பூர்த்தி செய்து கொள்வதற்காக முயற்சித்துக்கொண்டு இருக்கின்றனர்.

Jankinson இனின் கருத்திற்கமைய அறிவில் முதிர்ந்த முதியவர்கள் வாழ்க்கைச் சக்கரத்தின் தவிர்க்க முடியாத பொக்கிஷமாகப் கருதப்படக்கூடியது என்ற நிலைப்பாடாகும்.

எவ்வாறு பழைய ஒரு தாய்மரம் தன்னுடைய வேரைப் பற்றிய சிறு மரக்கன்றுகளையும் பற்றைகளையும் போஷிக்கின்றதோ அது போலவே முதியவர்களது அணுசரனையும் இன்றியமையாதது என உதாரணம் காட்டப்படுகின்றது.

இவ்வாறு தனது அனுபவத்தின் காரணமாக தான் முன்வைக்கும் தீர்மானங்களும் ஆலோசணைகளும் முதன்னிலை பெற வேண்டும் என்பது முதுமையின் பொது இயல்பாகக் கருதப்படுகின்றது.

அனேகமாக ஓய்வு பெற்ற பலர் இத்தகைய மனோநிலையைக் கொண்டிருப்பார்கள். குறிப்பாக அரச உயர் பதவிகள் மற்றும் கல்வித்துறைகளில் இருந்தவர்கள் இந்த நோக்கைக் கொண்டிருப்பது பொது நலப்பணிகளில் இளைஞர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளாத உளவியல்க் கருத்தியலில் ஒன்றாகவும் இது இருந்திருக்கலாம்.

இன்னுமொரு பக்கத்தில் வீட்டில் உள்ள குடும்பக்கட்டமைப்பினுள்ளும் இது நிலவப் பெறும். இதன்காரணமாக மனவெழுச்சி (Emotional) சார்ந்த நிலைக்கு இலகுவாக தள்ளப்படலாம். இவ்வாறான மனவெழுச்சி சார்ந்த பாதிப்புக்கள் முதியவர்கள் மத்தியில் 4.6 % ஆன பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கருதப்படுகிறது.

தொடரும்….
A.B.M Waseem (Naleemi)

[cov2019]

ஓர் மனோவியியல் அணுகுமுறை (2019. 11. 03 தெல்லிப்பனை சாந்தியகம் சென்றபோது அங்குள்ள முதியவர்களிடம் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னணியில் எழுதப்பட்டது) குடும்பங்களில் பேரக்குழந்தைகளுக்கும் முதியவர்களுக்குமிடையிலான உறவும் இப்படித்தான். பேரக்குழந்தைகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்கு அல்லது…

ஓர் மனோவியியல் அணுகுமுறை (2019. 11. 03 தெல்லிப்பனை சாந்தியகம் சென்றபோது அங்குள்ள முதியவர்களிடம் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னணியில் எழுதப்பட்டது) குடும்பங்களில் பேரக்குழந்தைகளுக்கும் முதியவர்களுக்குமிடையிலான உறவும் இப்படித்தான். பேரக்குழந்தைகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்கு அல்லது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *