Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
முப்தி மூட்டிய தீயில் எரியும் முஸ்லிம் சமூகம் 

முப்தி மூட்டிய தீயில் எரியும் முஸ்லிம் சமூகம்

  • 49

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

இஸ்லாமிய மார்க்க தலைமைத்துவம் என்பது எவ்வாறு அமைய வேண்டும், சன்மார்க்கம் சம்பந்தமான முடிவுகள் எவ்வாறு எட்டப்பட வேண்டும் என்பதை இஸ்லாம் அழகாக விவரித்துள்ளது.

இவ்வாறான ஒரு நிலையில் முஸ்லிம்களை எரித்து சாம்பலை அல்லது அதன் ஒரு பகுதியை பணிவாக காலில் விழுந்து வேண்டியது, எவ்வளவு அருவருக்கத்தக்க கோழைத்தனமான? இஸ்லாமியர்களை மனம் நோகவைத்து, தலைகுனிய வைத்த செயல் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஜனாஸாவை எரிப்போம் என்ற வேலையில், மார்க்கத் தலைமை என்ற வகையில் தைரியத்தோடு, எரிப்புக்கான காரணத்தையும் ஆதாரத்தையும் ஆய்வுகளையும் முன்வையுங்கள், எரிக்க அனுமதி தரமாட்டோம், என கடுமையாக எதிர்த்து நிற்காமல், செய்வதை செய்து கொள்ளுங்கள் என்று சினங் கொண்டு கொதித்து எழாமல், ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் ஜனாஸாவையும் எரித்து சாம்பலை தாருங்கள் என்று அனுமதி அளிக்க இஸ்லாமிய அடிப்படையில் இவருக்கு என்ன உரிமை இருக்கிறது.

இவர் எரிக்கப்பட்ட முதல் ஜனாஸாவோடு எதிர்த்து நிற்காமல், தடுத்து நிறுத்த போராடாமல், இஸ்லாத்தில் இல்லாத அனுமதியை வழங்கியதே தொடர்ச்சியான ஜனாஸா எரிப்புக்கு முதல் காரணம்.

நான் ஒரு சமூகத்தின் தலைவன். எனது மார்க்கம் சொல்வது போல் செயற்படுவதே எனது பொறுப்பும் கடமையும் என தைரியமாக எடுத்துரைக்காமல், எரித்து சாம்பலை அல்லது அதன் ஒரு பகுதியை தாருங்கள் என்று கெஞ்சி நிற்க ஒரு தலைமைத்துவம் தேவைதானா?

இது தான் முஸ்லிம் சமுதாயத்தின் அறிவுள்ள தலைமையா? இது தான் முஸ்லிம் சமூகத்தின் அறிவின் அடையாளமா? சமூகத்தின் ஒட்டு மொத்த அறிவுச் சரக்கும் இவ்வளவுதானா?

முஸ்லிம் சமூகத்தின் மொத்த அறிவின் எல்லை இது தானா? முஸ்லிம் சமூகத்தின் தலைமையை தாங்கி நிற்க படித்தவர்கள் நம் சமூகத்தில் கிடையாதா? முஸ்லிம் சமூகமே வாய் அடைத்து நிற்பது ஏன்?

இன்று Social Meadia களில் ஒலிக்கும், எரிக்கப்படும் ஜனாஸாக்களின் உறவுகளின் அவலக் குறல்களையும் ஒப்பாரிகளையும் செவிமடுத்துக் கொண்டு, தன்னால் நடந்த அநியாயத்தையும் தவறையும் நினைத்து மன வேதனைப்பட்டு ஒதுங்காமல், தன்னால் ஜனாஸாக்ளை எரிக்க வழங்கப்பட்ட ஒப்புதலை நினைத்து, சற்றேனும் மன அனுதாபப்படாமல் இன்னும் சிரித்துச் சிரித்து மலர்ந்த முகத்தோடு கலகலப்பாக “தான் அனைவரையும் மன்னித்துவிட்டதாக” video வெளியிடுவதில் இருந்து இவர் மனதில் அல்லாஹ்வின் அச்சம் சற்றேனும் உள்ளதா அல்லது சமூகத்தின் கவலை சற்றேனும் உள்ளதா என கவலைப்பட வேண்டியுள்ளது.

ஒவ்வொரு ஜனாஸாவையும் எரிக்கும் போதும், அவை காதில் விழும் போதும் புழுவாய் துடிக்கிறது முஸ்லிம் சமூகம். எந்த மனதோடு சாம்பலை எடுக்க அனுமதி வழங்கினார் என்பதை அல்லாஹ் தான் அறிவான்.

யாரையும் இவர் மன்னிக்கும் அளவுக்கு இவரது தனிப்பட்ட விடயங்களில் நம் முஸ்லிம் சகோதரர்கள் யாரும் தலையிடவோ திட்டவோ இல்லை. நம் முஸ்லிம் சகோதரர்கள் தவறை தான் சுட்டிக்காட்டியுள்ளார்கள். தவறை சுட்டிக் காட்ட யாரிடமும் தயங்க வேண்டியதில்லை. இதற்கு மார்க்க அடிப்படையில் பூரண அனுமதியுள்ளது.

எவனுக்கு அல்லாஹ்வின் அருள் கிடைக்கப் பெற்றுள்ள அறிவுக்கும் ஆற்றலுக்கும் அமைய அவனுக்கான கேள்வி இருக்கின்றது. ஆக அதை சுட்டிக் காட்டுவது அறிவும் ஆற்றலும் உள்ள ஒருவனுக்கு அவனின் கடமை.

எனக்கு அல்லாஹ் தந்த அறிவுக்கும் ஆற்றலுக்கும் என்ன கடமையை நான் செய்கிறேன்.

இவரது இவ்வாறான செயல் மக்களிடம் தனது அனுதாபத்தை அதிகரித்து, பதவியை தக்கவைத்துக் கொள்ளவும், இவர் மீது மக்கள் குற்றப் பழி சுமத்துவதை விட்டும் மக்களின் கவனத்தையும் ஆத்திரத்தையும் திசை திருப்ப, பூனைக்கு முதல் புலி பாய்வதைப்போல் இதுவும் ஒரு இராஜதந்திரமா?

மக்களின் பழியில் இருந்து இவரை காப்பாற்ற வக்காலத்து வாங்கியா ஒரு மதனி (PHD) யும் ஒரு சரயீயும் இவர்களுக்கும் இஸ்லாமிய அடிப்படையில் ஆதாரமும் அனுமதியும் எங்கிருந்து கிடைத்தது. முப்திகளை பாதுகாக்கும் redy made பத்வா உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது.

கள்ளி மரத்தில் கட்டப்பட்டு ஈட்டிகளால் ஏய்து சல்லடையாக்கியும் சத்தியத்தை கைவிடாத குபைப் (ரலி) வரலாறு, இது நீங்கள் சொல்லி நாங்கள் கேட்க மட்டும் தானா?

அப்துல்லா இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்களின் பக்கம் சற்று ஒரு நொடி திரும்பிப் பார்க்காமல் இருந்ததற்கே ரஸூலுல்லாஹ்வை கண்டித்தது போன்ற ஒரு குர்ஆன் வசனத்தையே அல்லாஹ் இறக்கினான்.

மார்க்கத்தில் இல்லாத சாம்பல் பத்வாவை வழங்கியமைக்காக அல்லாஹ் உங்களை போட்டு வறுத்தெடுக்க மாட்டானா? அந்தப் பயம் கிடையாதா? இவர்களின் மனதில் அல்லாஹ் வஃன் என்ற நோயை நஸீபாக்கி விட்டானா?

அல்லாவின் மீது சத்தியமாய் சொல்கிறேன். எரிக்கப்படும் ஒவ்வொரு ஜனாஸாவிற்கும், வார்த்தை அளவில் அனுமதி அளித்ததற்கு நிச்சயம் இவரும் ஒரு பொறுப்பு தாரியே. ஜனாஸாக்களை பொறுப்பேற்பதா, அல்லது கைவிடுவதா என செய்வது அறியாது முஸ்லிம் சமூகம் தினரும் நிலையில், முஸ்லிம்கள் தடுமாறும் நிலையில், தரமுடியாவிடில் வைத்துக் கொள்ளுங்கள் என இதற்கு ஒரு சரியான தைரியமான தீர்வை வழங்காமல் ஒளிந்திருப்பது தான் தலைமையின் வழிமுறையா?

அ‌ல்லது தூய்மையான மிம்பர் மேடைகளை பயன்படுத்தி ஆட்சியாளர்களுக்கு சுபசோபனம், வாழ்த்துக்கள் கூறிய அரசியல் வாதிகளின் அன்பு முறிந்துவிடும் என்ற நிலைப்பாடா?

இவ்வளவு ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டும் தன்னால் நடந்த தவறை நினைத்து வருந்தாமல் இருப்பது ஆச்சரியமே.

ஒரு தனி நபரின் பதவி ஆசைக்கும், சுகபோக ஆடம்பர வாழ்க்கைக்காகவும் ஒரு சமூகமே பழியாவதை இன்னும் சமூகம் சிந்திக்காமல் இருப்பது கவலைக்குறியதே. முஸ்லிம் சமூகமே ஏன் இன்னும் உறக்கம். இதற்கு மேலும் ஒரு அநியாயம் உண்டா?

முஸ்லிம் சமூகத்திற்கு கூடுதலான சீரழிவுகளும், சிதைவுகளும் இவரது இரு தசாப்த காலப் பகுதியிலே இடம்பெற்றுள்ளது.

இளைஞர்களுக்கான குழுக்களாகவும் இயக்கங்களாகவும் பிரிந்து செயற்பட்டு துருவங்களாக தூர்ந்து போனமைக்கான காரணமும் தலைமைகளின் தான் தோன்றித்தனமும் தன்னலமுமே ஆகும்.

மார்க்கத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஸஹாபாக்கள் காலம் தொடக்கம் இருந்தே வந்துள்ளன. இவ்வாறான கருத்து மோதல்களை வைத்து அவர்களை ஒதுக்கி, புரம் தள்ளி, தான் இருக்கும் கொள்கையை ஆதரிக்கும் ஒரு குழுவை வைத்து ஒவ்வொரு முறையும், தலைமை பதவியை கைப்பற்றுவது, மத வாதத்தை வைத்து, மக்களை பிரித்து, இன வாதத்தை பரப்பி, அரசாங்கம் செய்து வரும் இராஜதந்திரமே. இவரும் மார்க்கம் என்ற ரீதியில் கைக் கொண்டு வருகிறாரா?

சகலரையும் ஒன்றிணைத்து எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை சமாளிக்கக் கூடிய அறிவாளிகளே அல்லாஹ்வுக்காக முன்வாருங்கள். இது உங்கள் கடமை அல்லாஹ் இது பற்றி நிச்சயம் தகுதியானவர்களிடம் கேட்பான்.

இவரது இருபது ஆண்டு கால தலைமைத்துவத்திலேயே இஸ்லாமியர்கள் பல அமைப்புக்களாகவும் இயக்கங்களாகவும் பல கட்சிகளாகவும் பிரிந்தனர்.

சரியான தலைமைத்துவத்தின் அடிப்படையில் சிறு சிறு கொள்கை வேறுபாடுகள் கருத்து மோதல்கள் இருந்தாலும், ஒரே கலிமாவின் கீழ் அனைவரையும் ஒன்றிணைத்து கண் காணிப்புடன், மார்க்கப்பயணம் சென்றிருந்தால் சில இளைஞர்கள் தற்கொலை தாக்குதல் நடாத்தும் அளவுக்கு தவறான வழியில் சென்றிருக்க மாட்டார்கள். இத்தனைக்கும் தலைமைகளே பதில் சொல்ல வேண்டும்.

தலைமைக்கு பிழைகளும் தவறுகளும் தொடர்ந்து நடக்கும் போது அந்த பதவிக்கு அவர் தகுதி அற்றவர் என்பதே அர்த்தமாகும்.
அவ்வாறான நிலமைகளில் தானாகவோ பதவிகளில் இருந்து விலகி ஒதுங்குவதே நாகரீகமாகும். இஸ்லாம் கட்டித்தரும் வழி முறையும் இதுவே.

இலங்கை நாடு இன்று செல்கின்ற திசையை நோக்கும் போது இன்னும் என்னென்ன பிரச்சினைகள் சமுதாயம் எதிர் நோக்க வேண்டி வரப்போகுதோ அந்த அல்லாஹ் தான் அறிவான். இந்த நிலையில், இவ்வாறான ஒரு உறுதியற்ற கோழைத்தனமான தலைமை பதவிகள் நீடிக்குமாக இருந்தால் இந்த நாட்டு முஸ்லிம்கள் நிலை என்ன?

அரசியலில் எந்த முஸ்லிம் ஆதிக்கமும் இல்லாத இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான மாடறுப்புச் சட்டம் உயர் நீதி மன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் உறுதியான படித்த தலைமையின் கீழ் முஸ்லிம்களின் போராட்டம் தொடர்ந்தது. இறுதியில் சுப்ரீம் கோட் தீர்ப்பை வாபஸ் வாங்கியது. இத்தனைக்கும் அகில இந்திய பாராளுமன்றத்தில் இருப்பது ஒரே ஒரு முஸ்லிம் பிரதிநிதியே.

நம் நாட்டில் முஸ்லிம்கள் செருப்பு அணியக்கூடாது என சட்டம் வந்தாலும், அரசியல் தலைமைகளை திருப்திப்படுத்த முஸ்லிம் தலைமைகள் இதை ஏற்றுக் கொள்ளும். இதுவே இந்நாட்டுத் தலைமைகளால் நமக்கு ஏற்பட்டிருக்கும் சாபக்கேடு.

எனவே தனது இயலாமையையும் தவறையும் அளவிட தனது மனச்சாட்சியே போதுமானது எனவே வருங்கால முஸ்லிம் சமூகத்தில் கருணையும் இரக்கமும், அன்பும் ஆசையும், பாசமும் நேசமும் இருந்தால் ஆற்றல் படைத்தவர்களுக்கும், தைரியமாக எதிர்கால பிரச்சினைகளை எதிர் கொள்ளக்கூடிய சட்ட வல்லுநர்களுக்கும் இடமளித்து, தன் நிலை கருதி, தானாய் ஒதுங்குவதே சமூகத்திற்கு செய்யும் பாரிய சேவையாகும்.

குருடன் ஓட்டும் கப்பலில் தொடர்ந்தும் பயணிப்பதா? சிந்திக்குமா முஸ்லிம் சமூகம்!

பேருவளை ஹில்மி

இஸ்லாமிய மார்க்க தலைமைத்துவம் என்பது எவ்வாறு அமைய வேண்டும், சன்மார்க்கம் சம்பந்தமான முடிவுகள் எவ்வாறு எட்டப்பட வேண்டும் என்பதை இஸ்லாம் அழகாக விவரித்துள்ளது. இவ்வாறான ஒரு நிலையில் முஸ்லிம்களை எரித்து சாம்பலை அல்லது அதன்…

இஸ்லாமிய மார்க்க தலைமைத்துவம் என்பது எவ்வாறு அமைய வேண்டும், சன்மார்க்கம் சம்பந்தமான முடிவுகள் எவ்வாறு எட்டப்பட வேண்டும் என்பதை இஸ்லாம் அழகாக விவரித்துள்ளது. இவ்வாறான ஒரு நிலையில் முஸ்லிம்களை எரித்து சாம்பலை அல்லது அதன்…

4 thoughts on “முப்தி மூட்டிய தீயில் எரியும் முஸ்லிம் சமூகம்

  1. 841917 322612 I discovered your weblog internet site on google and check a few of your early posts. Continue to keep up the extremely good operate. I just additional up your RSS feed to my MSN News Reader. Seeking forward to reading far more from you later on! 575176

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *