முள்ளிவாய்க்கால் சரீரம்

  • 8

இரத்தம் சிந்தி
மண்ணை முத்தமிட
மானிட சரீரங்கள்
வான் மலையாக

மழலையின் குரல்
ஓடங்களில் ஓலங்களாய்
ஒலிக்கின்றதே ஓசை
பணத்தின் ஆசை
பிணத்தின் மேலா?
இன்னும் தீரவில்லையோ
மானுடப் பேராசை

கரு விலக்கி
தருவாய் மிளிர்வதற்குள்
உருவம் இன்றி
சிறுமை அழிகின்றது

விடியலுக்காய் விரைந்தோரும்
விறகில் வேக
உலையில் வேகிறது
உயிரும் உடலும்

இனத்தை அழிக்க
வனத்தை அடியோடழிக்க
கணப்பொழுதும் போதும்
ஆணவம் ஒழிந்தால்
ஈனப்பிறவி இல்லாதொழியும்

கவிச்சாரல் சாரா
புத்தளம்

இரத்தம் சிந்தி மண்ணை முத்தமிட மானிட சரீரங்கள் வான் மலையாக மழலையின் குரல் ஓடங்களில் ஓலங்களாய் ஒலிக்கின்றதே ஓசை பணத்தின் ஆசை பிணத்தின் மேலா? இன்னும் தீரவில்லையோ மானுடப் பேராசை கரு விலக்கி தருவாய்…

இரத்தம் சிந்தி மண்ணை முத்தமிட மானிட சரீரங்கள் வான் மலையாக மழலையின் குரல் ஓடங்களில் ஓலங்களாய் ஒலிக்கின்றதே ஓசை பணத்தின் ஆசை பிணத்தின் மேலா? இன்னும் தீரவில்லையோ மானுடப் பேராசை கரு விலக்கி தருவாய்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *