முஹர்ரம் புத்தாண்டு தரும் சுப செய்தி சத்தியம் வெல்லும்

  • 18

முஹர்ரம் இஸ்லாமிய மாதங்களில் முதல் மாதம். அது சாந்தி சமாதானத்தின் அடையாளம். அமைதி என்ற சுப செய்தியோடு இஸ்லாமிய புத்தாண்டு பிறக்கிறது.

பிர்அவ்ன் உலகில் தோன்றிய மன்னர்களில் மிகக் கொடிய ஒரு சர்வாதிகாரி. மாபெரும் அநியாயக்காரன். அமைதிக்கு பங்கம் செய்த கல்நெஞ்சம் கொண்ட மன்னன். இரத்த வெறி பிடித்த சண்டாளன். நான் தான் உயர்ந்த இரட்சகன் என கர்வத்துடன் கூறியவன். எந்தநிலையிலும் தனக்கு மரணமில்லை என்ற மமதையோடு வாழ்ந்தவன். இறுதியில் தோற்றுப்போனான்.

அவனது தோல்வியை இந்த மாதம் ஞாபகப்படுத்துகிறது. அதன் பொருள் அசத்தியம் அழியும் சத்தியம் வெல்லும் என்ற சுப செய்தியை முஹர்ரம் சுமந்து வருகிறது என்பதாகும்.

இஸ்லாம் ஒரு கொள்கை. அது ஒரு சம்பூரண வாழ்கைதிட்டம். அதை பின்பற்றுவதால் கிடைப்பது சாந்தி, அமைதி, நிம்மதியான வாழ்வு. வரலாறு அதற்கு சான்று. மனித நாகரிகங்கள் இந்த உண்மையை கண்கூடாகக் கண்டன.

அன்று போன்று இன்றும் சாந்தி வழிக்கு வேராக இருக்கும் இஸ்லாம் மார்க்கத்திற்கு எதிரிகள் இருக்கவே செய்கின்றனர். அவர்கள் இஸ்லாம் என்றால் அதன் மறுபெயர் பயங்கரவாதம் என்று ஊடகங்கள் மூலம் அச்சத்தையும் பயத்தையும் மக்கள் மத்தியில் திணித்துள்ளனர். அது சுத்தப் பொய் என்று பறைசாற்றிக் கெண்டு முஹர்ரம் புத்தாண்டு பிறக்கிறது. ஆம் முஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கும். சாந்தி சமாதானம் நிலவும்.

எமது நாட்டுச் சூழலில் சாந்தி சமதானம் பற்றிய எண்ணக்கருவை சுமந்து வரும் புத்தாண்டை எப்படி நடைமுறைக்கு கொண்டு வராலாம் என்று சிந்திப்பது காலத்தின் தேவையாகும். நாட்டில் சமாதானத்தை வலியுறுத்தும் கட்டுரைப் போட்டிகள், பாடல்கள், நாடகங்கள், கவிதை அரங்குகள், பட்டிமன்றங்கள் போன்ற கலை கலாச்சார நிகழ்ச்சிகளை படைப்பதன் ஊடாக இஸ்லாமிய புத்தாண்டின் மகிமையை வெளிக்ககொணர முடியும். உண்மையில் அவை தாக்கமிக்கதாகவும் அமையும்.

அனைவருக்கும் முஹர்ரம் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

முஹம்மத் பகீஹுத்தீன்
வியூகம் வெளியீட்டு மையம்

முஹர்ரம் இஸ்லாமிய மாதங்களில் முதல் மாதம். அது சாந்தி சமாதானத்தின் அடையாளம். அமைதி என்ற சுப செய்தியோடு இஸ்லாமிய புத்தாண்டு பிறக்கிறது. பிர்அவ்ன் உலகில் தோன்றிய மன்னர்களில் மிகக் கொடிய ஒரு சர்வாதிகாரி. மாபெரும்…

முஹர்ரம் இஸ்லாமிய மாதங்களில் முதல் மாதம். அது சாந்தி சமாதானத்தின் அடையாளம். அமைதி என்ற சுப செய்தியோடு இஸ்லாமிய புத்தாண்டு பிறக்கிறது. பிர்அவ்ன் உலகில் தோன்றிய மன்னர்களில் மிகக் கொடிய ஒரு சர்வாதிகாரி. மாபெரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *