Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
மௌனத்தில் பேசுகிறறேன் 

மௌனத்தில் பேசுகிறறேன்

  • 11

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

ஒரு முதியவர் இறக்கும் போது ஒரு உலகம் முடிந்து போகிறது என்பார்கள். வயோதிபம் ஒரு காவியத்தின் முடிவுறும் தருணம் போன்றது. அவ்வளவு அறிவு மிகுந்த அந்த வயதில் இயல்புகளை சாதாரணமாக புரிந்து கொள்ள முடியாது. வாழ்க்கையை முடித்துக்கொள்ள காத்திருக்கும் ஒருவரை நாம் நெருக்கமாக காணும் போது முகத்தின் மீது படிந்துள்ள மரணத்தின் ரேகைகள் சொல்ல முடியாத வலியை ஏற்படுத்தி விடுகின்றன.

ஊரில் நான் கடக்கும் தெருக்களின் வழியே ஊரில் வாழ்ந்து மறைந்த மூதாதையரின் உரையாடல்களை கேட்கிறேன். கடந்த காலத்தில் சாட்சியங்களாக அவர்களது குரல்களும் நினைவுகளும் நமக்கு முன்னே இருக்கின்றன. காலம் நினைவுகளை மட்டுமே மீட்டுத் தருகிறது.

என் சின்ன வயதில் கடைத்தெருவிற்கு செல்லும்போது அதிகமான முதியவர்களை கண்டு புன்னகைப்பேன். இன்று அவர்களை நினைத்து பார்க்கிறேன் ஒரே இருண்டது போல தெரிகிறது. பெரியவரே (அப்பா) என்று நெஞ்சு நிறைய அவர்களை அழைக்கும்போது ஒப்பற்ற சுகம் மனதில் குடிகொள்ளும்.

எப்போதும் என்னுடன் அன்பு பாராட்டும் ஒரு முதியவர் ஊரில் இருந்தார். என்னுடன் முகமலர்ந்து என் தோள்களைத் தட்டி மரியாதையுடன் கதைப்பார் சில போது அவரை காண்பதற்காகவே காத்திருப்பேன். திடீரென ஒரு நாள் அவரது மரணச் செய்தி கேட்டு அதிர்ந்து போனேன் இன்னும் அவர்கள் புன்னகையும் முகமும் என் கண்களுக்குள் ஒரு அழகிய புகைப்படம் போல தெரிகிறது.

ஒவ்வொரு பயணத்தின் போதும் வாழ்க்கையை முடித்துக்கொள்ள காத்திருக்கும் முதியவர்களை பரிதாபத்தோடு நோக்குகிறேன். முகமெங்கும் வாழ்வை வழியனுப்பும் தடயங்கள் வாழ்ந்து முடித்து விட்டோம் என்று பிரியாவிடை வார்த்தையை அவர்கள் உதடுகள் தயங்கித் தயங்கி உச்சரிக்கின்றன.

புதுமை வாழ்வின் தவிர்க்க முடியாத ஒரு பருவம். உயிருடன் இருப்பவர்கள் அதை நிச்சயம் அடைகிறார்கள். நிதானமும் பக்குவமும் நிறைந்த பருவம் அது ஒருவரின் குழந்தை பருவத்தில் கிடைக்கும். அங்கீகாரம் முதுமையில் பெரும்பாலோருக்கு கிடைப்பதில்லை. அவர்களது எல்லா கருத்துக்களும் மறுக்கப்படுகின்றன அல்லது புறக்கணிக்கப்படுகின்றன. அவர்களது வளர்ச்சி நின்று விட்டதனால் நவீன உலகோடு அவர்களது எந்த செயலும் செல்வதில்லை என நாம் நம்புகிறோம்.

ஒவ்வொரு வீட்டிலும் வயதில் மூத்த முதியவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் தமது பொழுதைப் போக்க எவ்வளவு சிரமப்படுகிறார்கள். புதிய தாளங்களுடன் அவர்களது ராகங்கள் சேர்வதில்லை புறக்கணிப்பின் நிழல்கள் அவர்கள் மேல் விழுகின்றன. அந்த நிழல் தரும் காயங்களுக்கு மருந்து ஏதும் இல்லை. முதுமையில் வாழ்க்கையின் விசித்திர கனவுகளை நனவாக்க எல்லாம் முதியவர்களும் முடிவதில்லை அவர்கள் தமது கனவுகளை சுருட்டப்பட்ட கைகளுக்கும் கால்களுக்கும் மறைத்து வைத்திருக்கிறார்கள்.

“எங்களுடைய பேச்சு எங்கே அவர்கள் கேட்கப் போகிறார்கள்” என்று வயது முதிர்ந்த எத்தனையோ பெற்றோர்கள் தமக்குள் பேசிக் கொள்கிறார்கள். “உங்களுக்கு அது விளங்காது” என்று ஏகப்பட்ட மறுப்புரைகள் நாம் முதியவர்களின் மனதில் ஆணி அடித்து கொண்டிருக்கிறோம். ஒரு எதிரில் ஒரு முதியவர் காயப்படும் தருணமானது வாழ்க்கையின் முதுகில் ஒருவர் ஏறி மிதிப்பது சமம். ஒரு முதியவர் மதிக்கப்படாமல் விடப்படும்போது உறவுகள் உணர்வுகளின் அனர்த்தத்தை ஒரு தடவை இழந்து கொள்கிறது.

முதியவர்கள் எப்போதும் விசித்திரமான ஆசைகளை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். பல போது அவர்கள் அதனை வெளிப்படுத்துவதில்லை. இன்றைய இளைஞர்களால் அதனை புரிந்து கொள்ளவும் முடிவதில்லை. எமது ஆசைகளை அவர்கள் ஏன் தீர்மானிக்க வேண்டும் என்று பலமான வார்த்தைகளால் நாம் அவர்களை கட்டுப்படுத்துகிறோம் உணர்வுகளை ஆசைகளை தனிமையோடு சேர்த்து அவர்கள் கரைத்து கொள்கிறார்கள்.

வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் உழைப்புடன் தியாகத்துடனும் வரிகளுடனும் கழித்த மனிதர்கள் தம் அந்த கட்டத்தில் படும் அவலங்களை காண்கையில் கண்களில் ஈரத்தை அளிக்கின்றன. கிராமத்திலிருந்து மாநகரம் வரை நான் கடைகளில் பல நூறு முதியவர்களை கடந்து செல்கின்றன ஒவ்வொருவரும் ஒரு துயரக் கதையை சுமந்துகொண்டிருக்கிறார்கள். நோயினாலும் வறுமையினாலும் பாடும் முதியவர்களே அதிகம் இருக்கிறார்கள்.

மாநகரங்களில் கொளுத்தும் வெயிலில் அலைந்து திரிந்து கையேந்தி உணவு கேட்டு பாதையோரங்களில் உறங்கும் முதியவர்கள் எங்கிருந்து வந்தார்கள் அவர்களது சொந்தங்கள் ஏன் அவர்களை பராமரிப்பதில்லை நடுத்தெருவில் நாய்களுக்கு சமமாக நடத்தப்படும் இவர்கள் வாழ்க்கையில் என்ன குற்றம் செய்தார்கள் அழுக்கு நிறைந்த ஆடைகளுடன் இதற்கான தோற்றங்களில் நொந்துபோன இதயங்களுடன் இத்தகையவர்களை சுமை என்று கருதி நடுத்தெருவில் விட்டுச்செல்லும் குழந்தைகள் எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.சொத்துகளைப் பங்கிட்டுக் கொள்ளவும் வீடுகளை எழுதிக்கொள்ளவும் வயோதிப பெற்றோர்களின் மரணத்துக்காய் நாள் பார்த்து இருப்பவர்களும் இந்த உலகத்தில் இல்லாமல் இருக்க முடியாது.

மழை கொட்டும் நாளொன்றில் வீதி ஓரமாக குளிர் காற்றில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, ஒரு போர்வை இல்லாது உறங்கி தவிர்க்கும் ஒரு முதியவரை அண்மையில் நான் பார்த்தேன் மழை நீரோடு மனிதமும் கரைந்து கொண்டிருக்கிறது.

ஒரு முதியவர் இருக்கும் வீடு வெளிச்சம் உள்ளவரை போன்றது. அந்த வெளிச்சம் இல்லாமல் போகும் போதுதான் அதன் அருமையை நான் உணருகிறோம். ஒரு முதியவர் என்பவர் வெறுமனே உடம்பு மாத்திரமல்ல அவர் கடந்த காலத்தின் சாட்சியமாக நம் முன் நிற்கிறார். வாழ்க்கையின் அனுபவம் எனும் அற்புதத்தை தனக்குள் சுமந்து கொண்டு மௌனமாக அவர் காட்சி தருகிறார் அவர்கள் வாழ்க்கையில் கடந்து வந்த பாதையும் அதன் சுவடுகளும் நம் கண்களுக்குத் தெரிவதில்லை

முதியவர்களின் தனிமையை போக்குவதற்கு நாம் ஏதாவது செய்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறோம். தனிமையோடு தம்மை அவர்கள் கரைத்துக் கொள்ளும் பொழுதுகள் மிகவும் துயரம் வாய்ந்தவை நான் சந்திக்கும் பெரும்பாலான முதியவர்களை இப்படி கண்டிருக்கிறேன். பேச்சுத் துணைக்கு ஆள் இல்லாதவர்கள் ஒருபுறம் இவர்களது பேச்சை காது தாழ்த்திக் கேட்க ஆளில்லாமல் மறுபுறமும் அவர்கள் அவதிப்படுகிறார்கள்.

மனதில் இருக்கும் சுமைகளை நோய்களைப் பற்றிய அச்சத்தை தமது நிலைப்பாடுகளை அவர்கள் பேச விரும்புகிறார்கள் நிஜவாழ்க்கையில் பலருடன் எனக்கு இதில் அனுபவம் இருக்கிறது மௌனம் மட்டுமே அவர்களை உள்வாங்கும் பொறுமையுடன் இருக்கிறார்கள்

இன்னும் ஒருவருடைய உதவியை எதிர்பார்த்து நிற்கும் குழந்தையைப்போல் முதுமையும் மற்றவர்களுடைய நீட்டப்பட்ட கரங்களும் காத்திருக்கின்றன வாழ்க்கை ஒரு சிறிய பயணம் என்று ஒரு நாள் அது முடிந்து விடுகிறது அதற்குள் தான் வாழ்க்கையின் எல்லா வர்ணங்களும் கரைந்து சேகரமாகிறது அடுத்தவரை மதிப்பதும் பராமரிப்பதும் வாழ்க்கையில் உயர்ந்த செயல்

முதுமை ஒரு ததும்பும் அனுபவம் குழந்தைகளின் மனதில் நடமாடி திரியும் முதியவர்களின் குரல்களை கேட்கும்போது வாழ்க்கை மேலிருக்கும் பிடிமானம் சற்றே தளர்ந்து விடுகிறது முதியவர்கள் இல்லாத வீட்டு வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கப்போவதில்லை.

முதுமையின் கொடுமைகளால் தவிர்க்கும் மனிதர்களை நினைத்து உள்ளம் வாடுகிறது. அந்த வயதில் இயலாமைகளின் பள்ளத்தாக்கில் வாழ்க்கை விழுவதை யாரும் விரும்புவதில்லை” யாரும் முதியவர் ஆவதில்லை அவர்கள் வளர்வதை நிறுத்திக் கொள்ளும் போதுதான் வயதானவர்கள் ஆகிறார்கள்” என்றால் எமர்சன் என்ற தத்துவ ஞானி.

ஒரு குழந்தையை கொண்டாடும் அளவுக்கு ஒரு முதியவரை யாரும் கொண்டாடுவதில்லை ஒரு குழந்தை சிரிப்பில் நம்மை சந்தோஷப்படுத்துகிறது ஒரு முதியவர் தனது பிள்ளையை சிரிக்க வைப்பதற்காக தன் சந்தோஷத்தை இழக்கிறார் அவர்களை சிரிக்க வைப்பது தான் அவர்களது இறுதிக் காலத்தை நாம் அவர்களுக்கு கொடுக்கும் பரிசு முதுமை என்பது நோய் அல்ல அது ஒரு பருவம் என்பதை நாம் உணர வேண்டும். எமது வாழ்க்கை பாதையில் நரைத்த முடியுடன்கையில் ஒரு குடையுடன் நம்மை கடக்கும் ஒரு முதியவரின் புன்னகையை பெற்றுக்கொள்ளாத வாழ்வில் என்ன சுகம் இருக்கப் போகிறது

ஒருநாள் அனைவரும் குழந்தையாக மாறுவார்கள் மாறித்தான் ஆக வேண்டும்.

Zariq Ameen Irfani
Madawala bazaar
Madawala
வௌியீடு: வியூகம் வெளியீட்டு மையம்

ஒரு முதியவர் இறக்கும் போது ஒரு உலகம் முடிந்து போகிறது என்பார்கள். வயோதிபம் ஒரு காவியத்தின் முடிவுறும் தருணம் போன்றது. அவ்வளவு அறிவு மிகுந்த அந்த வயதில் இயல்புகளை சாதாரணமாக புரிந்து கொள்ள முடியாது.…

ஒரு முதியவர் இறக்கும் போது ஒரு உலகம் முடிந்து போகிறது என்பார்கள். வயோதிபம் ஒரு காவியத்தின் முடிவுறும் தருணம் போன்றது. அவ்வளவு அறிவு மிகுந்த அந்த வயதில் இயல்புகளை சாதாரணமாக புரிந்து கொள்ள முடியாது.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *