Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
வாழக் கற்றுக் கொள் 

வாழக் கற்றுக் கொள்

  • 13

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

உலகம் உன்னை தூற்றும் முதலில்
அதே உலகம் உன்னைப் போற்றும் முடிவில்

ஏக்கங்களும், துயரங்களும்
நிறைந்து விட்டதே என எண்ணி
வாழ்க்கையை வீணடிப்பதற்கா
இந்த வாழ்க்கை?
இருப்பதுவோ கொஞ்ச காலம்!
அதனைக் கழிக்க ஏன் இத்தனை ஏக்கம்?

உலகில் பொய்கள் இல்லா இடமே இல்லை
கல்நெஞ்சங்களுக்கு இங்கு அளவேயில்லை
கண்ணீர்தனை வடிக்காத கண்கள் எதுவுமில்லை

தானாக வந்து வீணாக்கிப் போகும்
படுபாவிகள் வாழும்
பொல்லாத உலகமடி இது
ஏமாந்து, துன்பமடைந்து
போகாதே நீயும்
இது கண்ணீர்தனை ஓயாது
வடிக்கச் செய்யும் என்
கண்களின் சிறு கருத்து

ஏமாற்றத்தையும், இறக்கத்தையும்
கடந்து தான் செல்ல வேண்டும்
வாழ்க்கையில்
உயர்வென்ன, தாழ்வென்ன
உன்னை மட்டும் நீ சிந்தனை செய்
வீணான எண்ணங்கள் உனக்கு எதற்கடி

முன்னேற்றமடைய ஆயிரம் வழியிருந்தும்
முடங்கிக் கிடக்கிறாய்
முடக்கத்தை தகர்த்தெறியடி

உன்னை இழிவுபடுத்தி விட்டுச் சென்றவன் முன்னே
உன்னை விட சிறந்தவள் யாரும் இல்லை என
ஒரு வாழ்க்கை வாழ்ந்து காட்டடி!
அவன் தானாக உன் காலடி வந்து சேருவான்!

பொறுமையும், ஒழுக்கமும், பணிவும்
உனக்கு போதுமடி!
ஒரு தனி வழிப்பாதை உனக்காக
அமைத்துக் கொள்!

மாற்றார் எதைக் கூறினால் என்ன
அவர்களா உன் வாழ்க்கையை வாழ்வது?
நீ தானாக தடைகளை தகர்த்து
எழுந்து நில்
தலையை நிமிர்த்தி,
நேர்கொண்ட பார்வையுடன்
நீ நடந்து வா!

உன்னை தூற்றிச் சென்றவன்
உன் பக்கமாக செல்கையில்
அவனை தலை குனியும் படி செய்!
வாழ்க்கையில் எப்பொழுதும்
முடங்கிக் கிடப்பவனை தீண்டத் தான்

தீய பாம்பும் துரத்தும்!
தடைகளை தகர்த்தெறி நீயும்
வீர் கொண்டு நட!
சிலந்தி வலையும் தன் வலை தனை
கிழித்து உன் தேடலுக்கான
வழியை செய்து கொடுக்கும்!

சரித்திரம் படைத்தோர்
சிரித்துச், சிறப்பாக வாழ்ந்தவர்கள்
என்று எங்கும் சரித்திரங்கள் இல்லை

தைரியம் கொண்டு நீ எழுந்திடு!
உனக்கான பாதையை நீ தேர்ந்தெடு!
அதிலே உன் இலக்கினை நோக்கி நீ சென்றிடு!

இறுதியில் உன்னை நீயே அடைந்திடு!
உன் முன்னே இருக்கும் அத்தனை
வாய்ப்புக்களும் உனக்கு தான்!
வாழ்க்கை என்பது வாழ்வதற்கே!
நீ வாழக் கற்றுக் கொள்!

Fathima Badhusha Hussain Deen
Faculty of Islamic Studies and Arabic Language
South Eastern University of Sri Lanka.

உலகம் உன்னை தூற்றும் முதலில் அதே உலகம் உன்னைப் போற்றும் முடிவில் ஏக்கங்களும், துயரங்களும் நிறைந்து விட்டதே என எண்ணி வாழ்க்கையை வீணடிப்பதற்கா இந்த வாழ்க்கை? இருப்பதுவோ கொஞ்ச காலம்! அதனைக் கழிக்க ஏன்…

உலகம் உன்னை தூற்றும் முதலில் அதே உலகம் உன்னைப் போற்றும் முடிவில் ஏக்கங்களும், துயரங்களும் நிறைந்து விட்டதே என எண்ணி வாழ்க்கையை வீணடிப்பதற்கா இந்த வாழ்க்கை? இருப்பதுவோ கொஞ்ச காலம்! அதனைக் கழிக்க ஏன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *