Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
விஞ்ஞானத்தின் விந்தைகள் 

விஞ்ஞானத்தின் விந்தைகள்

  • 1123

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

இருபதாம் நூற்றாண்டின் கடைக்காலில் நாம் வாழ்கிறோம். இது விஞ்ஞான வளர்ச்சியின் உச்சமான காலம் எனலாம். தற்காலத்தில் விஞ்ஞானம் செய்யும் விந்தைகளோ எண்ணற்றவை.

இலத்திரனியல் ஊடாக பல நன்மைகள் கிடைத்துள்ளன. “ரோபோ” என்னும் பொறி மனிதனை உருவாக்கி அணுவளவு கூட பிழையற்ற செய்கைகளை அவன் மூலம் செய்விக்கின்றனர். கூட்டல்¸ கழித்தல்¸ பெருக்கல்¸ பிரித்தல் கணக்குகளை கணனிகள் என்ற பொறிகள் மூலம் குறுகிய கால இடைவெளியில் செய்விக்கலாம்.

விண்வெளிப்பயணம்¸ சந்திர மண்டலத்தில் கால் பதித்தல்¸ பூமியிலும், வானத்திலும் கடுகதியில் வாகனங்கள் செல்லல் எல்லாம் விஞ்ஞானத்தின் விந்தைகளே. மக்கள் சமுதாயத்தை அச்சுறுத்தும் கண்டம் விட்டு கண்டம் பாயம் ஏவுகணைகள் கணநேரத்தில் பல்லாயிரம் மக்களை அழிக்க வல்ல அணுகுண்டுகள் என்பனவும் விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புக்களே!

செய்கை கோள்களை விண்வெளியில் நிறுவ விஞ்ஞானம் உதவுகின்றது. இவை மூலம் தொலைக்காட்சிகள்¸ செய்திப்பரிமாற்றம் என்பன எளியனவாகியுள்ளன.

உலகிலே சனப்பெருக்கம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் பல பிரச்சினைகள் உருவாகியுள்ளன. வாழ்வதற்கான இட வசதிகள் குறைவு. உணவு போதாமை என்பன இவற்றுள் முதன்மையானவை. இவற்றை நிறைவு செய்ய கடலினுள் வதிவிடம் அமைத்தல். கடற்பாசிகளை உணவாக மாற்றுதல் முதலிய ஆராய்ச்சிகளும் நடைபெறுகின்றது. இவ்வாறு விஞ்ஞானத்தின் விந்தைகளால் உலகம் முன்னேறி வருகின்றது.

M.A.S. Rafeeka
Grade 10 (1995)
As Sadhath
Diamond Jubilee Magazine

இருபதாம் நூற்றாண்டின் கடைக்காலில் நாம் வாழ்கிறோம். இது விஞ்ஞான வளர்ச்சியின் உச்சமான காலம் எனலாம். தற்காலத்தில் விஞ்ஞானம் செய்யும் விந்தைகளோ எண்ணற்றவை. இலத்திரனியல் ஊடாக பல நன்மைகள் கிடைத்துள்ளன. “ரோபோ” என்னும் பொறி மனிதனை…

இருபதாம் நூற்றாண்டின் கடைக்காலில் நாம் வாழ்கிறோம். இது விஞ்ஞான வளர்ச்சியின் உச்சமான காலம் எனலாம். தற்காலத்தில் விஞ்ஞானம் செய்யும் விந்தைகளோ எண்ணற்றவை. இலத்திரனியல் ஊடாக பல நன்மைகள் கிடைத்துள்ளன. “ரோபோ” என்னும் பொறி மனிதனை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *