விலை மகள்

  • 9

இராப் பகலுக்கு புரியாத
பொழுதொன்று போர்த்திக்
கொண்ட போக்கத்தவள்
இரவின் மடியிலும்
பகலின் பகட்டிலும்
பதுங்கிக் கொண்டவள்

விலை பேசி விற்கப்பட்ட
பொருளொன்றாய்
வீதியிலும் விடுதியிலும்
காமுகனின் விளையாட்டு
பொம்மையானாள்
பெண்மை பறி போனது
அறிந்தே தான் தொலைந்தாள்

நேரத்திற்கு விருந்துண்டு
நேரகாலமின்றி விருந்தானாள்
விரும்பாமலே வந்து மாட்டிக் கொண்டாளோ…?
விலை மகளாய் விரும்பியே தான்
வதைகிறாளோ..?

விதியும் நொந்து கொள்ள
சதியும் சூழ்ந்து கொள்ள
பத்தினித் தன்மை இழந்தாள்
பணம் தான் காரணமோ..?
பசிதான் வயிற்றை நிரப்பியதுவோ.

பேதையவளின் பேச்சு பூமியெதிலும்
தாரம் கொள்ள துணையில்லா
தரணியில் விலையாகிப் போனாள் விருந்தாக்கி மகிழ்ந்தார்கள்.

ஏரூர் நிலாத் தோழி

இராப் பகலுக்கு புரியாத பொழுதொன்று போர்த்திக் கொண்ட போக்கத்தவள் இரவின் மடியிலும் பகலின் பகட்டிலும் பதுங்கிக் கொண்டவள் விலை பேசி விற்கப்பட்ட பொருளொன்றாய் வீதியிலும் விடுதியிலும் காமுகனின் விளையாட்டு பொம்மையானாள் பெண்மை பறி போனது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *