Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
வெள்ளத்தடுப்பு அணைகள் 

வெள்ளத்தடுப்பு அணைகள்

  • 25

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

பட்ஜட் 2ம் வாசிப்பில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோர் எதிபார்க்கும் நிரந்தர தீர்வுகள்.இம்முறை பட்ஜட்டில் வெள்ளப்பெருக்கு  தடுப்பு பொறிமுறைகளுக்கு சுமார் 49௦௦ மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

என்றாலும் இதில் (2017) இவ்வாண்டு மே மாதம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நில்வள கங்கை பகுதிகளில் எவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம் என தெரிவிக்கவில்லை.

என்றாலும் பட்ஜட்டின் 2ம் வாசிப்பில் இத்திட்டத்தில் நாம் பின்வரும் மாற்றங்களை எதிர் பார்க்கின்றோம். இதில் பாடசாலை, மற்றும் பொதுமக்களுக்கான 4 தீர்வுகள் பேச உள்ளோம்

கடந்த வெள்ளபெருக்கில் பாதிக்கப்பட்ட ஆற்றங்கரையொரத்தில் அமைந்துள்ள ஓர் பாடசாலை மாறை/ கொடப்பிடிய ஸாதாத் மகா வித்தியாலயம். இப்பாடசாலை அதிபருடன் 2016.02.19 அன்று இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியாளர் சந்திப்பில் தமது கருத்துக்களை பின்வருமாறு  பகிர்ந்து கொண்டார்.

“அடிக்கடி ஏற்படும் வெள்ளபெருக்கு காரணமாக அற்றங்கைரையொரம் நாளுக்கு நாள் அறிப்படைகிறது. இதனால் நாளுக்கு நாள் இம்மைதானம் குறைவடைகிறது. 6௦௦கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இந்த ஓர் மைதனே உள்ளது. எனவே இதனை பாதுகாக்க கல்வேலி அமைத்து தரவும்.

வெள்ளத்தடுப்புத் திட்டத்தின் கீழ் அல்லது கிராமிய மைதான பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இந்த மைதானதிற்கும் ஓர் கல்வேலி அமைக்க நிதி ஒதுக்கவும்.

இப்பிதேசத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் இருப்பதற்கு பின்வரும் அபிவிருத்தி திட்டங்களை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஹம்பாந்தோட்டை உலர் வலயத்திற்கு உட்பட்ட ஓர் மாவட்டம் அப் பிரதேச நீர் பற்றாக்குறையை குறைப்பதற்காக நில்வள கங்கை நீரை ஹம்பாந்தோட்டைக்கு திருப்புதல். இது சம்பந்தமாக 2௦15ம் ஆண்டுக்கான பட்ஜட்டில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷா தமது திட்டத்தை முன்வைத்தார். (2014 நவம்பரில் வாசிக்கப்பட்டது)

நில்வள கங்கை கரையோரங்களை அண்மிய குளங்களை விஸ்த்தரித்தல் மற்றும் புது குளங்களை அமைத்தல். இதன் ஊடாக நன்னீர் மீன்பிடித்துறையை அபிவிருத்தி செய்யவும் முடியும்.

1980ம் ஆண்டுகளில் ஆரம்பித்து தற்போது வரை முழுமைப்படுத்தாது உள்ள ஆற்றுப்படுக்கை (BAND) திட்டத்தை பூரனப்படுத்தல். இதை பூரனப்படுத்தமை காரணமாக 3 பிரதான வீதிகளில் ஒவ்வொரு ஆண்டும் கடும் மழை நாட்களில் போக்குவரத்து பாதிப்பு.

ஆற்றுப்படுக்கை (BAND) திட்டத்தை பூரனப்படுத்த விடின் அதை ஆரம்பித்துள்ள பனந்துகம பகுதியில் நன்னீர் மீன்பிடித்துறை விருத்தி செய்யும் விதத்தில் குறித்த மைதானத்தின் மூன்றில் ஓர் பகுதியை உள்ளடக்கி பெரும் குளமொன்று அமைத்தல். இவை 2௦17 வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நில்வள கங்கை கரையோர மக்கள் எதிர்பார்க்கும் நிரந்தர தீர்வுகளாகும்.

Ibnu Asad

பட்ஜட் 2ம் வாசிப்பில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோர் எதிபார்க்கும் நிரந்தர தீர்வுகள்.இம்முறை பட்ஜட்டில் வெள்ளப்பெருக்கு  தடுப்பு பொறிமுறைகளுக்கு சுமார் 49௦௦ மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. என்றாலும் இதில் (2017) இவ்வாண்டு மே மாதம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நில்வள…

பட்ஜட் 2ம் வாசிப்பில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோர் எதிபார்க்கும் நிரந்தர தீர்வுகள்.இம்முறை பட்ஜட்டில் வெள்ளப்பெருக்கு  தடுப்பு பொறிமுறைகளுக்கு சுமார் 49௦௦ மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. என்றாலும் இதில் (2017) இவ்வாண்டு மே மாதம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நில்வள…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *