Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
வெள்ளிக்கிழமையும் இறைச்சிவாங்கலும் 

வெள்ளிக்கிழமையும் இறைச்சிவாங்கலும்

  • 8

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

இறைச்சி வாங்கல் ஒரு போராட்டம்
இந்தப்போராட்டத்தில்
சாரன் அவிழலாம்
கழிசன் கழரலாம்
கால் மிதி பட்டு
செருப்பும் அறுந்து போகலாம்
கண்ணாடியும் கழண்டு விழலாம்
ஆனாலும் நமது
இறைச்சிக் கறியெனும் இலட்சியமே
இறுதிவரை இருக்கவேண்டும்

மாட்டிறைச்சிக்கான
நமது மறியல் போராட்டத்தில்
ஊமையாகி நிற்றலும்
உறுதியில்லாமல் நிற்றலும்
குந்தியிருத்தலும்
குனிந்து நிற்றலும்
அன்றைய இறைச்சிக் கறியை
இல்லாமல் செய்யலாம்
அவதானம் முக்கியம்

இறைச்சி கேட்டலில் இத்தனை ரகம்
சொந்தம் சொல்லி கேட்டல்
தூசணம் சொல்லி கேட்டல்
கெஞ்சும் குரலில் கேட்டல்
கொஞ்சும் குரலில் கேட்டல்
குழைந்து குழைந்தும் கேட்டல்

கடையின் தட்டி திறந்ததும்
களத்தின்
முன்னனி வீரர்கள் சாகசம்
செய்வது முக்கியமானது
இடையில் புகுந்து நீட்டிக் கேட்டல்
கடைக்குள் தலையை போட்டும் கேட்டல்
கத்திக் கத்தி கேட்டல்
கதைக்காமலே கடைசிவரை நிற்றல்
நான்குபேரை நசுக்கி தள்ளல்
என்று நம்சாகசம் தொடர வேண்டும்

இறைச்சிவாங்கும் நம்
வீரர்களின் வீரப்பார்வையின்
ரகத்தைப் பாருங்கள்
குடலில் மேலொரு காமப்பார்வை
பாபத்தின் மீதொரு வக்கிரகப்பார்வை
ஈரலின் மீது சில ஏக்கப்பார்வை
இறைச்சியின் மீதொரு இன்பப்பார்வை
எலும்பைக்கண்டால் இகழ்ச்சிப்பார்வை
கொழுப்பைக் கண்டால் கொலஸ்ரோல் பார்வை

இறைச்சிக் கறியில்லா வெள்ளியும் வெள்ளியா?
ஜும்ஆவின் பர்ளுகளில் இறைச்சிக்கறியும்
பிரியாணியும் இணைந்த கதை
தெரியாத சிலர் மீனோடும் மரக்கறியோடும்
வீடு செல்கிறார்கள்.

அடுத்த வெள்ளியில் போராட்டத்திற்காய்
தயாராவோம்
அதுவரை கொஞ்சம் ஓயவெடுத்துக் கொள்ளட்டும்
நம் வீரர்கள்

றிஸான் சுபைதீன்

இறைச்சி வாங்கல் ஒரு போராட்டம் இந்தப்போராட்டத்தில் சாரன் அவிழலாம் கழிசன் கழரலாம் கால் மிதி பட்டு செருப்பும் அறுந்து போகலாம் கண்ணாடியும் கழண்டு விழலாம் ஆனாலும் நமது இறைச்சிக் கறியெனும் இலட்சியமே இறுதிவரை இருக்கவேண்டும்…

இறைச்சி வாங்கல் ஒரு போராட்டம் இந்தப்போராட்டத்தில் சாரன் அவிழலாம் கழிசன் கழரலாம் கால் மிதி பட்டு செருப்பும் அறுந்து போகலாம் கண்ணாடியும் கழண்டு விழலாம் ஆனாலும் நமது இறைச்சிக் கறியெனும் இலட்சியமே இறுதிவரை இருக்கவேண்டும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *