Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
16.11.2019 அடுத்த ஜனாதிபதி யார்? முடிவெடுப்பது யார் கையில்? 

16.11.2019 அடுத்த ஜனாதிபதி யார்? முடிவெடுப்பது யார் கையில்?

  • 14

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அவன் அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அதை அவன் அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை. (அல்குர்ஆன்:6:59)

உலகைப் படைப்பதற்கு முன் அல்லாஹ் ஒரு ஏட்டைத் தயாரித்து அதில் உலகம் அழியும் காலம் வரை நடக்க இருக்கும் அனைத்தையும் தனது கட்டளையால் பதிவு செய்தான். உலகில் எது நடந்தாலும் அந்தப் பதிவேட்டில் எழுதப்பட்டு இருக்கும். ஒரு இலை உதிர்ந்தாலும் அது எந்த நேரத்தில் விழும் என்ற விபரம் அந்தப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு இருக்கும். இந்த ஏடு லவ்ஹூல் மஹ்ஃபூல் என்று சொல்லப்படுகிறது.

பதிவுப் புத்தகம், பாதுகாக்கப்பட்ட ஏடு, மறைக்கப்பட்ட ஏடு, தெளிவான ஏடு என்ற வார்த்தைகளாலும் இந்தப் பதிவுப்புத்தகம் குறிப்பிடப்படுகிறது. ஒருமனிதன் நல்லவனாக வாழ்வதும், கெட்டவனாக வாழ்வதும் அந்தப் பதிவேட்டில் உள்ளபடிதான் நடக்கிறது. ஒருவன் பிறப்பதும், மரணிப்பதும் அந்தப் பதிவேட்டில் உள்ளபடி தான் நடக்கின்றன. ஒருவன் செல்வந்தனாவதும், ஏழையாவதும் அந்தப் பதிவேட்டில் உள்ளபடி தான் நடக்கின்றன. உண்மையான விஷயம் இப்படியிருக்க இன்று முஸ்லிம்கள் “மறைவான விடயங்கள்” அனைத்தையும் அறிந்தவர்கள் மாதிரி முகநூலில் பதிவுகளை எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

எதிர்கால ஜனாதிபதி யார் என்று கணிப்பீடுகளைச் செய்வதில் தவறில்லை. ஆனால் அந்தக் கணிப்பீடு தான் நடக்கும், அதுதான் ஜெயிக்கும் என பதிவிட்டு விட்டு, அடுத்த வேட்பாளர்களைத் தாக்குவதும், விமர்சிப்பதும், முஸ்லிமுக்கு முஸ்லிம் முரண்படுவதும், விதண்டாவாதம் புரிவதும், அடுத்த கட்சி அபேட்சகரையும் ஆதரவாளர்களைத் திட்டித் தீர்ப்பதும் நமது சமூகத்திற்கு பின்னடைவை மட்டுமல்ல நமது ஈமானிக்கும் பங்கம் விளைவிக்கும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. இதைத் தான் மேலுள்ள வசனம் எடுத்துக்காட்டுகிறது…!

இதை யாரும் advice ஆக எடுத்துக் கொள்ளாமல் அல்லாஹ்வின் நியதியையும், அவனது மறைவான ஆற்றலையும் நமது மனதில் நிலை நிறுத்தி நமது பதிவுகளை மேற்கொள்வதே அறிவுடமையாகும்..! நமது (இஸ்லாமிய) செயல்கள் (அமல்கள்) தான் நமக்கு சிறந்த தலைமையை நிர்ணயிக்குமே தவிர நமது எண்ணங்களும், மனமுமல்ல என்பது கசப்பான உண்மையாகும்..!

முஹம்மத் நளீர்
அக்குறணை

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அவன் அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அதை அவன் அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில்…

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அவன் அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அதை அவன் அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *