அன்டிஜென், பொருளாதார அவசரகாலச் சட்டம், நுகர்வோர் விவகார திருத்தச் சட்டமூலம் என சூடுபிடிக்கவுள்ள பாராளுமன்றம்

பாராளுமன்ற அமர்வுகள் நாளை மற்றும் நாளை மறுதினம் (06/07.09.2021) இடம்பெறவுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர், ஊடகவிளாளர்களுக்கு அன்டிஜென் பரிசோதனை சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாளைய தினம் அன்டிஜென் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன்போது, நாடாளுமன்ற பணியாளர்கள் மற்றும் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கும் ஊடகவியலாளர்களும் கலந்துக்கொள்ள முடியும் என அவர் அறிவித்துள்ளார். இதற்கமைய, நாளை முற்பகல் 9.30 மணி முதல் 12.30 மணி வரையான காலப்பகுதியில் இவ்வாறு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. … Read moreஅன்டிஜென், பொருளாதார அவசரகாலச் சட்டம், நுகர்வோர் விவகார திருத்தச் சட்டமூலம் என சூடுபிடிக்கவுள்ள பாராளுமன்றம்

நான்கு மாவட்டங்களில் இளைஞர், யுவதிகளுக்கான தடுபூசி ஏற்றும் நடவடிக்கை நாளை ஆரம்பம்

 நான்கு மாவட்டங்களில் 20 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான தடுபூசி ஏற்றும் நடவடிக்கை நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் 20-29 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி நாளை (06) ஆரம்பிக்கபடும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். இந்த மாவட்டங்களில் தற்போது தடுப்பூசிகள் வழங்கப்படும் அதே இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. கொழும்பு மாவட்டத்தில் தற்போதுள்ள தடுப்பூசி தளங்களுக்கு மேலதிகமாக, 20-29 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்காக விஹாரமஹா தேவி பூங்கா, தியத … Read moreநான்கு மாவட்டங்களில் இளைஞர், யுவதிகளுக்கான தடுபூசி ஏற்றும் நடவடிக்கை நாளை ஆரம்பம்

Pulse Oximeter உச்சபட்ச விலை வர்த்தமானி வெளியீடு

Pulse Oximeter இற்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அது தொடர்பான அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. தற்கமைய  பிங்கரிப்ஸ் பல்ஸ் ஒக்சிமீட்டர் ஒன்றின் உச்சபட்ச சில்லறை விலை  ரூ. 3,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 2021ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க, மருத்துவ (மருத்துவ உபகரணங்களுக்கு விலைகுறித்தல்) ஒழுங்குவிதிகள் எனும் 10 ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2015 ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் 142ஆம் பிரிவின் கீ ழ் … Read morePulse Oximeter உச்சபட்ச விலை வர்த்தமானி வெளியீடு

திடீர் காலநிலை மாற்றத்தால் கல்முனை கடலில் பிடிபடும் பாரிய மீன்கள்

பாறுக் ஷிஹான் திடீர் காலநிலை மாற்றம் காரணமாக பாரிய மீன்கள் கல்முனை பிராந்திய கடற்கரைகளில் பிடிபடுகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் 4 பாரிய சுறாக்கள் மற்றும் திருக்கை போன்ற மீன்கள் தூண்டில் மூலம் பிடிக்கப்பட்டு ரூபா 8 இலட்சம் வரை விற்பனை செய்யப்பட்டன. இன்றும் 12 அடி நீளமான கொப்பறா மீன் ஒன்றும் அப்பகுதி மீனவர்களுக்கு பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த கொப்பறா மீனின் பெறுமதி சுமார் மூன்று இலட்சம் ரூபா எனவும் இதேவேளை குறித்த மீனவரின் வலையில் … Read moreதிடீர் காலநிலை மாற்றத்தால் கல்முனை கடலில் பிடிபடும் பாரிய மீன்கள்

கொழும்பில் வசிக்கும் இளைஞர் யுவதிகளுக்கான அறிவிப்பு

கொழும்பில் நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாக வசிப்பீர்களாயின் இதனை கொஞ்சம் கவனிக்கவும். 20 வயதுக்கும் 20 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்தும் செயற்றிட்டம் நாளை (06) முதல் முன்னெடுக்கப்படவுள்ளது. கொழும்பு-01 முதல் கொழும்பு-15 வரையிலும் வசிக்கும் மேலே குறிப்பிட்ட வயதுக்கு இடைப்பட்ட சகலரும் இந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும். 2001 ஆம் ஆண்டு பிறந்தவராக இருத்தல் அவசியம். காலை 9 மணிமுதல் மாலை 3 மணிவரையிலும் தடுப்பூசிகள் ஏற்றப்படும் ஆகையால், எவ்விதமான அச்சமும் இன்றி, தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளுமாறு … Read moreகொழும்பில் வசிக்கும் இளைஞர் யுவதிகளுக்கான அறிவிப்பு

மணமகன் தேவையால் விழிப்பிதுங்கும் ஆண்கள்

கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. 18 வயது முதல் 30 வ​யது வரையிலானோருக்கு ​தடுப்பூசிகளை ஏற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் 30 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றபட்டுள்ளது. இன்னும் சிலர் ஏற்றிக்கொள்ளாமல் இருக்கின்றன. இந்நிலையில், ஒருவகையான தடுப்பூசியின் பெயரைக் குறிப்பிட்டு, அந்த வகையைச் சேர்ந்த தடுப்பூசியை ஏற்றி​க்கொண்ட ஆண்கள் மட்டுமே தேவையென மணமகன் தேவையில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இந்த விளம்பரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

காதி நீதிமன்ற ஒழிப்பும் முஸ்லிம் சட்டத்திற்கு எதிராக முதல் துப்பாக்கி நீட்டும் முஸ்லிம்களும்

பேருவளை ஹில்மி முஸ்லிம் தனியார் சட்டத்தில் இருந்த, சில திருத்தப்பட வேண்டிய குறைபாடுகளை சந்தர்பமாக பயன்படுத்தி, முஸ்லிம் பெண்களுக்கு அநியாயம் நடப்பதாக, ஆடு நனையுது என சில ஓநாய்கள் ஒப்பாரி வைத்ததை நாம் கண்டோம். தேர்தல் காலங்களில் இந்த இனவாத சக்திகளுக்கு சாதகமாக, முஸ்லிம் சமூகத்தின் பாசறைக்குள் வாழும், சில பெயர் தாங்கி முஸ்லிம்களும், இனவாத மீடியாக்களில் தோன்றி, இனவாதிகளுக்கான பங்களிப்பைச் செய்ததையும் அக்காலங்களில் அவதானிக்க முடிந்தது . இதனை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம் தனியார் சட்டம் … Read moreகாதி நீதிமன்ற ஒழிப்பும் முஸ்லிம் சட்டத்திற்கு எதிராக முதல் துப்பாக்கி நீட்டும் முஸ்லிம்களும்

Analysis: Believe the hype. New-look Alabama stronger than ever in rout of Miami.

No. 1 Alabama’s 44-13 win against No. 16 Miami to open the 2021 season was beyond the sort of predictable dismantling of a Power Five non-conference opponent we’ve come to expect from the Crimson Tide. With new starters at several key spots and a new offensive coordinator, Alabama put on a show against the not-ready-for-prime-time Hurricanes … Read moreAnalysis: Believe the hype. New-look Alabama stronger than ever in rout of Miami.

நியாயமான விலையில் அத்தியாவசியப் பொருட்களை அவசரகால விதிகளின் கீழ்தான் வழங்க வேண்டுமா?

கலாநிதி எம். கணேசமூர்த்தி பொருளியல் துறை கொழும்பு பல்கலைக்கழகம் கடந்த வாரம் சர்வதேச ஊடகங்களில் இலங்கையில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு நெருக்கடியான ஒரு சூழலில் மக்களின் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குரியதாக மாறியுள்ளதாக தலைப்புச் செய்திகள் வெளிவந்தன. இலங்கை அரசாங்கம் இலங்கையில் உணவுப்பற்றாக்குறை எதுவும் ஏற்படவில்லை என உடனடியாக மறுத்தது. இவ்வாறு சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளிவரக்காரணமாக அமைந்தது இலங்கை உணவுப்பொருள் விநியோகம் தொடர்பாக அவசரகால விதிகளின் கீழ் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல்களாகும். அவசரகால விதிமுறைகள், சமாளிக்க முடியாத … Read moreநியாயமான விலையில் அத்தியாவசியப் பொருட்களை அவசரகால விதிகளின் கீழ்தான் வழங்க வேண்டுமா?

16 வருடம் சிறையில் கழித்து கொரோனாவுக்கு பலியான பொட்ட நவ்பர்

எம்.எஸ்.முஸப்பிர் பாதாள உலகம் எந்தளவுக்கு பலமானது எனச் சொன்னாலும் அவர்களில் அனேகமானவர்களின் ஆயுட்காலம் அவர்கள் செய்த குற்றச் செயல்களுக்கான பலனை அனுபவித்து பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியோ அல்லது எதிர் தரப்பினராலோ இளம் வயதிலேயே முடிவடைந்து விடுகின்றது. என்றாலும் ஓரிருவர் சில காலம் உயிர் வாழும் அதிர்ஷ்டத்தைப் பெற்றிருப்பது அவர்கள் இந்நாட்டிலிருந்து தப்பிச் சென்று அல்லது சிறையில் அடைக்கப்பட்டவர்களாக இருப்பதனாலாகும். அவ்வாறு கடந்த 16 வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்ததால் சில காலம் உயிர் வாழும் அதிர்ஷ்டத்தைப் பெற்றிருந்த … Read more16 வருடம் சிறையில் கழித்து கொரோனாவுக்கு பலியான பொட்ட நவ்பர்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் வைத்திய பீடத்தினை அமைப்பதே இலட்சியம் – உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர்

சுலைமான் றாபி இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில், எதிர்காலத்தில் வைத்திய பீடம் அமைப்பதே தன்னுடைய இலட்சியமாகும் என இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்தார். நிந்தவூர் பிரதேச இளைஞர் தன்னார்வ அணியினர், உபவேந்தருடன் கல்வி அபிவிருத்தி முறைபற்றி கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்பொழுது கிழக்கு மாகாண ஆயுர்வேத திணைக்கள வைத்தியர்கள் தன்னை சந்தித்து, இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் யுனானி மருத்துவ டிகிரி கற்கை நெறியினை ஆரம்பிப்பதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளனர். இது வரவேற்கத்தக்கக்கூடிய … Read moreதென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் வைத்திய பீடத்தினை அமைப்பதே இலட்சியம் – உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர்

தொடரை சமப்படுத்திய தென்னாபிரிக்கா

சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில், டக்வெத் லூயிஸ் முறையில் தென்னாபிரிக்க அணி 67 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.  இவ்வெற்றியுடன் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரினையும் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க 1-1 என சமநிலைப்படுத்தியிருக்கின்றது. நேற்று (04) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்திருந்தது. இலங்கைக்கு … Read moreதொடரை சமப்படுத்திய தென்னாபிரிக்கா

Select your currency
LKR Sri Lankan rupee