மனித பாவனைக்கு உதவாத 40,000 Kg உருளைக்கிழங்கு தம்புள்ளையில் மீட்பு

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை அண்டிய களஞ்சியசாலையில் இருந்து மனித பாவனைக்கு தகுதியற்ற 40 ஆயிரம் கிலோ கிராம் எடையுள்ள உருளைக்கிழங்குகள் அடங்கிய கொள்கலன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தம்புள்ளை மாநகர சபையின் சுகாதார அதிகாரிகள் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின்போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த உருளைக்கிழங்கு இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளதாக, இதன்போது அவை முளைத்த நிலையில் இருந்துள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளின்போது அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முளை நிலையில் இருந்த உருளைக்கிழங்குகளை சந்தைக்கு விற்பனைக்காக அனுப்பத் தயாராகும்போது அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையத்தில் கைதி தற்கொலை தொடர்பில் இரு பொலிசார் பணிநீக்கம்

எம்.மனோசித்ரா இரத்தினபுரி – பணாமுர பிரதேசத்தில் எம்பிலிபிட்டி பொலிஸார் கைது செய்யப்பட்ட சந்தேநபரொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கமைய மேலதிக பொலிஸ் அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் எம்பிலிபிட்டி குற்ற விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய இன்றைய தினம் பணாமுர பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் குறித்த நபர் …

நல்லாட்சிக்கால இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சு தொடர்பான கோப் அறிக்கை

யொவுன்புர வேலைத்திட்டத்துக்கு அனுமதிக்கப்பட்ட மதிப்பீடான 350 மில்லியன் ரூபாவையும் விஞ்சி 80,560,914 ரூபா ஒதுக்கப்பட்டமை தொடர்பில் கோப் குழுவில் தெரியவந்தது. நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்புநாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளது என அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார். இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் சேவைகள் தனியார் நிறுவனத்தின் தலைவர் ஆகியோர் ஒத்துழைப்புடன் செயற்பட …

நடைமுறைக்கு வந்த ஊழியர் தொடர்பான புதிய இரு சட்டமூலங்கள்

வேலையாளர்களின் குறைந்தபட்ச ஓய்வுபெறும் வயது மற்றும் வேலையாட்களின் வேலையை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) (திருத்தம்) ஆகிய இரு சட்டமூலங்களையும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நேற்று (17) சான்றுரைப்படுத்தினார். இந்த இரு சட்டமூலங்களும் கடந்த 11ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. தனியார் துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 வயது வரை அதிகரிப்பது இந்தச் சட்டமூலங்களின் நோக்கமாகும். இதுவரை தனியார் துறையில் பணியாற்றும் பல்வேறு ஊழியர்களின் ஓய்வுபெறும் குறைந்தபட்ச வயது நிர்ணயிக்கப்பட்டிருக்கவில்லை. பெரும்பாலும் தனியார்துறை ஊழியர்கள் ஓய்வுபெறுவது …

அன்பு

கதிரவன் தன் இறக்கையை காலையில் விறிக்கையில் காலைக்கடனை நான் கடந்திருக்கவேண்டும் சூரியன் உச்சம் கொடுக்கையில் சுற்றுச்சூழலை முழுதாய் சுத்தம் செய்து சிறப்பாய் உணவுண்ண மேசைக்கு சென்றிருக்க வேண்டும் துளித்துளி மழையை துச்சமாய் நினைக்காமல் தூதுவன் அனுப்பும் காதலாய் துள்ளிக்குதித்துக் கொண்டாடி தெம்பாய் இருக்கவேண்டும் அந்திவானின் அற்புதம் கண்டு ஆயிரம் கவிதை வடிக்கவேண்டும் இவ்வுலகை நிலைபெறச்செய்யும் ஈரமான அன்பை உலகெங்கும் பரப்பவேண்டும் Binth Ameen