உயர் கல்வியமைச்சால் தூக்கிவீசப்பட்ட SLIATE

  • 11

இலங்கை பல்கலைக்கழகங்களிற்கு அடுத்ததாக என்ஜினியரிங் கற்கை நெறிகளை மேற்கொள்ளும் ஒரு அரசாங்க அமைப்பு னா அது SLIATE தான்! என்ஜினியரிங் தவிர்ந்து 15 உயர் தொழில்நுற்ப கூடங்கள்ல கிட்டதட்ட 20 மேற்பட்ட கற்கை நெறிகள் நடாத்தப்படுது! இலங்கையில் பல்கலைக்கழகத்தை ஒரு புரம் ஒதுக்கி வச்சிட்டு அதுக்கு பிறகான கல்வி கூடங்கள எடுத்துகிட்டா முதல் இடத்துல இருக்க ஒன்னு தான் SLIATE! Technical Colleges, College of Technologies, Univotech என்று இதுபோல இன்னும் சில கூடங்களும் உண்டு!

SLIATEல் உயர் கல்விய தொடர்வதற்கான minimum qualification உயர் தரத்தில 3 பாடங்கள்ல S இருக்கனும் (3S). இப்போ இருக்க demand காரணமாக Z score உம் சிறந்ததாக இருக்க வேண்டும். ஏனைய Technical colleges மற்றும் இதர அரசு சார் கல்வி கூடங்களிற்கு இவ்வாறான Qualification தேவை இல்லை! சாதாரண தரத்தில் 6 பாடம் சித்தி , 9 ஆம் வகுப்பு சித்தியை வைத்து எல்லாம் மாணவர்கள் உள்வாங்கப்படுவார்கள்!

அதுபோக SLIATE ஆனது உயர்கல்வி அமைச்சின் கீழ் இத்தனை காலம் இயங்கி வந்தது! ஆனால் இரண்டு மூன்று தினங்களிற்கு முன் அது உயர் கல்வி அமைச்சில் இருந்து தூக்கி வீசப்பட்டு இப்போது ஏதோ ஒரு அமைச்சில் இணைக்கப்பட்டுள்ளது! ஏனைய Technical colleges and COT மற்றும் ஏனைய நிறுவனங்ஙள் அவ்வாறு நீக்கப்படவில்லை! மேலும் SLIATE தவிர்ந்த ஏனைய அனைத்து நிறுவனங்களில் உள்ள கற்கை நெறிகளும் டிகிரி தரத்திற்கு உயர்தப்படபோவதாக இப்போது சொல்லப்படுகிறது! ஆனால் SLIATE இல் உள்ள கற்கை நெறிகளை டிகிரி தரத்திற்கு உயர்த்துவதாய் எங்கும் சொல்லப்படவில்லை! சாதாரண தர 6 பாடம் பாஸ் போதும் என சொல்லும் கற்கை நெறி டிகிரி பெறுவதற்கு தகுதி உடையது எனில் உயர்தர 3S உடனான (+) Z score எந்த விதத்தில் தகுதி குறைந்த்து?

இத்தனை காலமாக எமது Syllabus ஐ update செய்து தாருங்கள், எமது ATI களில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து தாருங்கள் என ஆர்பாட்டங்கள் செய்தோம் ஆனால் அவை எதற்கும் இன்னும் பதில் கிடைக்கவில்லை! Syllabus update செய்து கொண்டிருக்கிறோம் என்று ஏமாற்றியது தான் மிச்சம்! இப்போது ஒட்டுமொத்தமாய் புறக்கணிக்கப்பட்டிருக்கிறோம்!

மீண்டும் SLIATE ஐ உயர் கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவர வேண்டும், அதன் கற்கை நெறிகளை டிகிரி தரத்திற்கு உயர்த்த வேண்டும் அல்லது டிகிரி இற்கான வழிகளை அமைத்து தர வேண்டும் என்பது தான் எமது கோரிக்கை! இதை கேட்டு நாம் ரோட்டில் இறங்கி ஆர்பாட்டம் செய்தால் விமர்சிக்க இங்க ஒரு கூட்டமே உண்டு! ஓரிருவர் பற்றிய விடயமல்ல இது. 19 கூடங்களில் கற்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கை!

Fb post copy Saajeeth

இலங்கை பல்கலைக்கழகங்களிற்கு அடுத்ததாக என்ஜினியரிங் கற்கை நெறிகளை மேற்கொள்ளும் ஒரு அரசாங்க அமைப்பு னா அது SLIATE தான்! என்ஜினியரிங் தவிர்ந்து 15 உயர் தொழில்நுற்ப கூடங்கள்ல கிட்டதட்ட 20 மேற்பட்ட கற்கை நெறிகள்…

இலங்கை பல்கலைக்கழகங்களிற்கு அடுத்ததாக என்ஜினியரிங் கற்கை நெறிகளை மேற்கொள்ளும் ஒரு அரசாங்க அமைப்பு னா அது SLIATE தான்! என்ஜினியரிங் தவிர்ந்து 15 உயர் தொழில்நுற்ப கூடங்கள்ல கிட்டதட்ட 20 மேற்பட்ட கற்கை நெறிகள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *