மொழிகளைக் கற்பதன் அவசியம்

  • 10

மொழி என்பது பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொருவரிடமும் இயல்பானதாகக் காணப்படும் ஓர் தொடர்பாட்டு ஊடகமாகும். இதன்மூலமே எமது உணர்வூகள், எண்ணங்கள், அபிலாஷைகள், தேவைகள் என்பவற்றை வெளிப்படுத்த முடியூம். அந்தவகையில் ஒவ்வொரு மனிதரும் ஏதோவொரு வகையில் தமக்கான தாய்மொழியொன்றைக் கொண்டிருப்பான் என்பதில் யாருக்கும் எவ்வித மறுப்புமில்லை. காரணம் பிறப்பில் ஊனமுற்றௌராய் பிறந்தவர்கள் கூட தமக்கான சைகை மொழி மூலமாக பிறருடன் உறவாடுவதனை நாம் எம் நடைமுறை வாழ்வினூடாகக் கண்டு கொள்ள முடிகின்றது. ஒருவர் இம் மொழியெனும் ஊடகம் மூலமே தமது கருத்துக்களை பிறருக்கு அறியப்படுத்தவூம் பிறரது கருத்துக்களை நாம் தௌிவாக விளங்கிக் கொள்ளவூம் முடியும்.

இன்று உலகில் 6800 இற்கும் மேற்பட்ட பல மொழிகள் பேசப்படுகின்றன. இருப்பினும் இதில் 2000 வரையான மொழிகளே எழுத்து மற்றும் பேச்சு வழக்குகளைக் கொண்ட திருந்திய மொழ்களாகக் கருதப்படுகின்றன. எனினும் உலகில் ஆறு மொழிகளே பழமையான மொழிகளாகக் கொள்ளப்படுகின்றன. அவை அரபு, தமிழ், சீன மொழி, சமஸ்கிருதம், கிரேக்கம், இலத்தீன் என்பவையாகும். இவற்றில் உலகில் பொது மொழியாக ஆங்கிலம் பேசப்படும் அதேவேளை எம் இலங்கை நாட்டைப் பொறுத்த வரையில் சிங்கள மொழியானது மிக முக்கியமானதொன்றாகக் காணப்படுகின்றது. அந்தவகையில் ஆரம்பமாக மொழிகளுக்கு இஸ்லாம் வழங்கியூள்ள முக்கியத்துவத்தை இக்கட்டுரையினூடாகப் பார்ப்பது சாலச் சிறந்தது என நினைக்கின்றேன். ஏனெனில் அதனூடாக மொழிகளைக் கற்பதற்கான ஆர்வமும் கூட எம்மில் உருவாகலாம்.(இன்ஷா அல்லாஹ்)

அந்தவகையில் இம் மொழிகள் குறித்து அல்லாஹ் அருள்மறையாம் திருமறையிலே குறிப்பிடும் போது,

வானங்களையூம் பூமியையூம் படைத்திருப்பதிலும் உங்களது மொழிகளும் நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளது. அறிவூடையோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (30:22)

என்கின்றான். அதுமட்டுமல்லாது ரிஸாலத்தின் அடிப்படைகளில் பிரதானமானதும் மொழியே!

எந்த தூதரையூம் அவருடைய சமுதாயத்தினரை பேசும் மொழியை உடையவராகவேதான் நாம் அனுப்பி வந்திருக்கின்றோம். (14:04)

எனும் அல்குர்ஆன் வசனமும் இதற்கு சிறந்த சான்றாகும். அதுமட்டுமல்லாது நபியவர்களுக்கு முன் அனுப்பப்பட்ட பல நபிமார்களும் அவர்களது மொழியிலேயே தமது இறைச் செய்தியை மக்களுக்கு எடுத்துரைத்ததோடு அவர்களது மொழிகளிலேயே வேதங்களையூம் அல்லாஹ்விடமிருந்து பெற்றுக் கொண்டனர். இன்னும் ஸுலைமான் (அலை) அவர்களும் அவருக்கு வழங்கப்பட்ட அற்புதத்தைக் கொண்டு பல்வேறு உயிரினங்களுடனும் அதனது மொழிகளில் உரையாடியூள்ளார்கள்.

எனவே மொழியென்பது அல்லாஹ்வினால் வழங்கப்பட்ட அருளாகும். இதனை நாம் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். இது குறித்தும் நாம் நாளை மறுமையில் விசாரிக்கப்படுவோம். காரணம் இன்று பல்வேறு வழிமுறைகளின் ஊடாக நாம் மொழிகளைக் கற்பதற்கான வாய்ப்புக்களைப் பெற்றுள்ளோம். அந்தவகையில் மொழித்துறை சார்ந்த பல நூல்களை நாம் இன்று கொள்வனவு செய்யக் கூடிய சூழல் காணப்படுவதோடு வீட்டில் இருந்தவாரே எம் மொபைல் போன்களை உபயோகித்து Online மூலமாகவ[ம், தரவிறக்கம் செய்வதனூடாகவூம், மொழித்துறையில் புலமை பெற்றவர்களை சந்தித்து அவர்கள் ஊடாகவும் எம் மொழிப் புலமைகளை வளர்த்துக் கொள்ள முடியும். ஆனாலும் எம்மில் பலர் தயாரில்லை என்பதே கவலைக்குரிய விடயமாகும்.

உங்களில் சிறந்தவர் மக்களுக்குப் பயனுள்ளவரே என்ற இஸ்லாத்தின் போதனைக்கமைய நாம் பிறமொழிகளைக் கற்று அதனூடாக நாட்டிற்கும் சமூகத்திற்கும் பிரயோஜனமளிக்கக் கூடியவர்களாள நாம் மாற வேண்டும. முதலில் நாம் எம் தாய் மொழியில் தேர்ச்சி பெற வேண்டும். குறிப்பாக எழுதுதல், பேசுதல் போன்றவற்றில் தேர்ச்சி பெறுவதோடு அதனை பிறருக்கு சிறந்த முறையில் எடுத்துக் கூறுவதிலும் அவர்கள் கூறும் கருத்துக்களை தௌிவாக விளங்கிக் கொள்வதிலும் நாம் சிறந்த மொழித் தேர்ச்சியூடையவர்களாக இருக்க வேண்டும்.

இதேபோன்றே அரபு மொழியிலும் நாம் தேர்ச்சியூடையவர்களாக இருப்பதும் மிகவூம் அவசியமானதாகும். ஏனெனில் அல்குர்ஆனின் மொழி அரபாகும். எனவே அல்குர்ஆனை தௌிவான முறையில் விளங்கிக் கொள்வதற்கும் அதனடிப்படையில் எம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கும் அரபு மொழியைக் கற்பது அவசியமாகும். இன்னும் மார்க்க விஷயங்களை நாம் சரியான முறையில் அறிந்து கொள்வதற்கான பல மூல நூல்கள் அரபு மொழியிலேயே காணப்படுவதால் அதனைக் கற்பது நம் ஒவ்வொருவர் மீதும் சன்மார்க்கக் கடமையாக இருக்கும் அதேவேளை காலத்தின கட்டாயத் தேவையாகவூம் காணப்படுகின்றது.

அதற்கடுத்ததாக எம் சகோதர மொழிகளைக் கற்பதிலும் நாம் கூடியளவு கரிசனை கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்களது மொழிகளைக் கற்பதன் மூலம்தான் இஸ்லாம் குறித்தும், முஸ்லிம்கள் குறித்தும் அவர்கள் கொண்டுள்ள தவறான கருத்துக்களைக் களைந்து எமது கருத்துக்களையூம் நிலைப்பாடுகளையூம் சரியான முறையில் விளக்க முடிவதோடு எம் மார்க்கம் பற்றிய தௌிவானதோர் விழிப்புணர்வையும் அவர்களுக்கு வழங்கலாம். அத்தோடு அவர்களது மதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நாம் சரியான முறையில் விளங்கிக் கொள்வதற்கும் அதனூடாக அவர்களது பண்பாடுகள், நடைமுறைகள் என்பவற்றை விளங்கி அவர்களுடன் புரிந்துணர்வூமிக்க வாழ்க்கையை வாழ்வதற்கும் சகோதர மொhழிகளைக் கற்பது காலத்தின் கட்டாயத் தேவையாகும்.

அந்தவகையில் நபியவர்களும் தம் மொழி வளத்தை இஸ்லாமிய வளர்ச்சிக்குப் பயன்டுத்திய சிறந்த முன்னுதாரணப் புருஷராகத் திகழ்ந்துள்ளார்கள். எனவேதான் ஹுதைபியா உடன்படிக்கையின் பின் உலக நாடுகள் அனைத்திற்கும் இஸ்லாத்தின் ஏகத்துவத்தைக் கொண்டு செல்ல பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்கள். அதன் ஒரு பகுதியாகத்தான் அன்றைய பாரசீக, கிஸ்ரா, ரோம், பஹ்ரைன், அபீஸீனியா, மிஸ்ர் போன்ற தேசங்களின் மன்னர்களுக்கும் தன்னைச் சூழவூள்ள சிற்றரசர்களுக்கும் கடிதத்தின் மூலமாக ஏகத்துவ அழைப்பை கொண்டு செல்ல முடிவெடுத்து அதற்காக உலக நாடுகளின் மொழிகளைக் கற்றறிந்த அந்தந்த மொழிகளில் மிகவூம் புலமை பெற்ற நபித்தோழர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.

  • திஹ்யத்துல் கல்பீ(ரழி) – ரோம்
  • இப்னு ஹுதாஃபா(ரழி) – பஹ்ரைன்
  • ஹாதப் இப்னு அபீ புல்தஃ(ரழி) – மிஸ்ர்
  • அம்ர் இப்னு உமையா(ரழி) – அபீஸீனியா
  • ஹபீப் இப்னு ஜைத்(ரழி) – ரோமின் மற்றொரு பிரதேசம்

மேலும் நபியவர்கள் தன்னோடிருந்த ஸைத் இப்னு ஸாபித்(ரழி) அவர்களையூம் பிறமொழிகளைக் கற்குமாறு தூண்டினார்கள். இவ்வாறு நபியவர்களது அறிவூரைக்கேற்ப ஸைத் இப்னு ஸாபித்(ரழி) அவர்களும் யூதர்களின் மொழியை 15 நாட்களிலும் சிரிய மொழியை 17 நாட்களிலும் கற்றுத் தேர்ந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே மொழியைக் கற்பதன் முக்கியத்துவத்தையும் அதற்கான வழிகாட்டல்களையும் இஸ்லாத்தை விட வேறெந்த மதமோ கோட்பாடுகளோ தௌிவான அமைப்பில் முன்வைக்கவில்லை என்பதை இது தொடர்பான ஆய்வூகளை மேற்கொள்ளும் எவரும் விளங்கிக் கொள்வர். எனவே இஸ்லாம் காட்டிய பிரகாரம் நாமும் எம் சகோதர மொழிகளைக் கற்று அதனூடாக எம் மார்க்கம் பற்றிய தௌிவுகளை அவர்களுக்கும் வழங்கி இன நல்லிணமிக்கதோர் சூழலை ஏற்படுத்தி அதனூடாக சுபீட்சமான எதிர்காலத்தை நோக்கி பயணிப்போமாக! (இன்ஷா அல்லாஹ்)

Jafeer Noorul Shifa (Jaffna)
2nd Year
South Eastern University of Srilanka

மொழி என்பது பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொருவரிடமும் இயல்பானதாகக் காணப்படும் ஓர் தொடர்பாட்டு ஊடகமாகும். இதன்மூலமே எமது உணர்வூகள், எண்ணங்கள், அபிலாஷைகள், தேவைகள் என்பவற்றை வெளிப்படுத்த முடியூம். அந்தவகையில் ஒவ்வொரு மனிதரும் ஏதோவொரு…

மொழி என்பது பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொருவரிடமும் இயல்பானதாகக் காணப்படும் ஓர் தொடர்பாட்டு ஊடகமாகும். இதன்மூலமே எமது உணர்வூகள், எண்ணங்கள், அபிலாஷைகள், தேவைகள் என்பவற்றை வெளிப்படுத்த முடியூம். அந்தவகையில் ஒவ்வொரு மனிதரும் ஏதோவொரு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *