அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 32

  • 8

“இப்போ நமக்கு வேற வழி ஒன்னும் இல்லை… ஆபத்தே ஆனாலும் அந்த ரூட்டில் தான் போகணும்.” என்றாள் கோரின்.

“இப்போ என்ன பண்றது?” என கேட்டாள் அலைஸ்.

“லீ சொன்னது போலவே அந்த திசையில் பயணிப்போம். எவ்வளவு ஆபத்து வந்தாலும் சமாளிப்போம். நான் உங்க கூட இருக்கேன்.” என்றான் சின்.

“கண்டிப்பா… உங்க நாலுபேருக்கும் எந்த ஆபத்தும் இல்லாம அரண்மனைக்கு கொண்டுபோய் சேர்க்க வேண்டியது எங்க பொறுப்பு” என்றான் ரியூகி.

எல்லோரும் குதிரைகளில் ஏறி கான் மன் அரண்மனைக்கு பயணமானார்கள். வடக்கு எல்லையின் காட்டு வழியே நுழைந்தனர்.

“வாவ் இந்த காடே இவ்வளவு அழகா இருக்கு.” என்றாள் அலைஸ்.

“அதனால் தான் ஷாடோ ஏஞ்செல்ஸ் வாழுதுங்க” என்றாள் கோரின்.

“எந்தப்பிரச்சினையும் இருக்குற மாதிரி தெரியலையே?” என்றான் கியோன்.

சொல்லிக்கொண்டு இருக்கும் போதே பக்கத்தில் ஓநாய்களின் உறுமல் சத்தம் கேட்டது.

“அது என்ன சத்தம்?”

“ஓநாய்களோடது “என்றாள் சோஃபி.

“நல்ல வாய் கியோன் உன்னது. எப்போ பிரச்சினை இல்லை என்றாயோ அப்பவே ஆரம்பிச்சிட்டு.” என்றான் ரியூகி.

புதர்களில் இருந்து ஓநாய்கள் சூழ்ந்து கொண்டன. வெறியோடு அவர்களை தாக்குவதற்கு வந்தன.

“பார்க்கவே பயங்கரமா இருக்கே?” என்றாள் நயோமி.

“அப்போ பார்க்காதே.” என்ற அண்ணன் லீ எதிர்த்து தாக்க தயாரானான்.

ரியூகியும் கியோனும் தங்கள் வாள்களை பயன்படுத்தினார்கள். லீ அவனோட க்ரேவிட்டி சக்தியை பயன்படுத்தினான். சின் கே தன்னோட விரல்கள் மூலம் கூரிய நூல்களை வருவித்து தாக்கினார்கள். அவை அனைத்தும் இறந்து விழுந்தன. ரியூகிக்கும் லேசான காயம்.

நாகடோ முதுகுக்கு பின்னாடி இரு ஓநாய்கள் பாய நுரீகோ அவனை எச்சரித்தாள். சோஃபி பதற்றத்தில் “நோ”என்று கத்தினாள். எல்லோரும் காதுகளை மூடிக்கொண்டனர். அந்த இரு ஓநாய்களும் காது வெடித்து இறந்து போயின. அவ்வளவு கடுமையான ஒலியை அவள் எழுப்பி இருந்தாள்.

“கொஞ்சம் விட்டிருந்தா நீயே எங்க எல்லோரையும் கொன்னு இருப்பே…” என்றான் கியோன். அவள் சக்தியை எண்ணி அவளே ஆச்சர்யப்பட்டாள்.

“வர வர உன்னை பார்த்தாலே எனக்கு பயமா இருக்கு.” என்றான் ரியூகி.

“இவ நம்ம கூட இருக்குறது. நமக்கு அதிஷ்டம். இல்லன்னா இந்த நிலைமையை யாரும் சமாளிச்சிருக்க முடியாது.” என்றாள் கோரின்.

“ரொம்ப நன்றி சோஃபி”என்றாள் அலைஸ்.

“எதுக்கு நன்றி எல்லாம். நாம சீக்கிரமே இங்கிருந்து போயிடலாம்.” என சோஃபி சொன்னாள்.

“இருட்டுறதுக்குள்ள இந்த இடத்தை கடந்து போய்டனும் அப்போதான் கொஞ்ச நேரம் எங்கயாவது தரிக்க முடியும்” என்றான் ரியூகி.

அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு இரவில் ஓரிடத்தில் சிறிய கேம்ப் ஒன்றை கொண்டுபோன துணிகளை பயன்படுத்தி செய்து கொண்டனர். கேம்பிற்கு வெளியே தீமூட்டப்பட்டு இருந்தது. அங்கே சோஃபி தனியாக உட்கார்ந்து எதையோ யோசித்து கொண்டு இருந்தாள். அப்போது ரியூகி வந்தான்.

“என்ன மேடம் ரொம்ப யோசிக்குறீங்க?”

“எனக்கு குழப்பமா இருக்கு அண்ணா!”

“எது இந்த சக்திகளை பற்றியா?”

“ஆமா…”

“இதுக்கு எதுக்கு நீ டென்ஷன் ஆகணும்… நாங்க தான் பயப்படனும். ஏன்னா எப்போ எங்க காது வெடிக்கும் என்று சொல்ல முடியாதே!” என்று கிண்டலடித்தான்.

அவனை முறைத்து கொண்டே.

“விளையாடாதே… நான் உண்மையிலேயே குழம்பி போய் இருக்கேன். எனக்கு எப்படி இப்படி சக்திகள் இருக்க முடியும். ஒரு வேளை நம்ம அப்பா அம்மா மந்திரவாதிகளா இருப்பார்களா?”

“என்னடி ஒளர்ரே?”

“எனக்கு நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து நீதான் எனக்கு அப்பா அம்மா எல்லாமே. அவங்கள நான் பார்த்தது கூட இல்ல” என்றாள்.

“நான் கூடத்தான் நம்ம அப்பா அம்மாவ பார்த்ததில்லை. மாஸ்டர் ஷா தானே நம்மள வளர்த்தது.”

“சாதாரணமாக ஒரு பெண்ணுக்கு இப்படி சாத்தியமே இல்லை. எனக்கென்னவோ நம்ம அப்பா அம்மாவ பத்தி தெரிஞ்சிக்க ஆவலா இருக்கு.” என்றாள்.

“சோஃபி.. .அவங்கள பத்தி தெரியணும் என்னு விதி இருந்தா கண்டிப்பாக அது தெரிய வரும். நீ மனச போட்டு குழப்பிக்கொள்ளாமல் போய் தூங்கு” என்று சொல்லி அவளை அனுப்பினான்.

விதி என்று இவர்கள் இங்கு பேச கோரின் சிரித்து கொண்டே தூங்கினாள்.

“ஸ்.. ஸ்… ரியூகி. ரியுயூக்கி.. இங்க” என்று அலைஸ் அழைத்தாள்.

“நீ இன்னுமா தூங்கல.”

“தூக்கம் வரவில்லை… நாம கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம்.” என்றாள்.

தொடரும்……
ALF. Sanfara.

“இப்போ நமக்கு வேற வழி ஒன்னும் இல்லை… ஆபத்தே ஆனாலும் அந்த ரூட்டில் தான் போகணும்.” என்றாள் கோரின். “இப்போ என்ன பண்றது?” என கேட்டாள் அலைஸ். “லீ சொன்னது போலவே அந்த திசையில்…

“இப்போ நமக்கு வேற வழி ஒன்னும் இல்லை… ஆபத்தே ஆனாலும் அந்த ரூட்டில் தான் போகணும்.” என்றாள் கோரின். “இப்போ என்ன பண்றது?” என கேட்டாள் அலைஸ். “லீ சொன்னது போலவே அந்த திசையில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *