அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 34

  • 10

மூன்று நாட்கள் வேறெந்த பிரச்சினையும் இல்லாமலே நமது குழுவினர் பயணித்தனர். முடிவில் ஒரு ஆறு தென்பட்டது.

“இந்த ஆறு நாம பயணம் ஆரம்பித்தது முதல் கேட்டுட்டு இருந்த சத்தம் தானே. இதுக்கு ஒரு முடிவே இல்லியா?” என அலைஸ் கேட்டாள்.

“முடிவா… இது பெயரே முடிவில்லா ஆறுதானே!” என்றான் சின்.

“ஒஹ் அப்படியா?”

“ஆமா.., குளிச்சிட்டு போகலாமே!” என்றான் ரியூகி.

பெண்கள் முதலில் குளிக்க ஆயத்தமானார்கள். அவர்கள் எல்லோரும் உடைமாற்றி கொண்டிருந்த போது நயோமி கண்களில் அது தென்பட்டது.

“வாவ்.. அது.. அது.”

“எதை பார்த்து பேசுறா இவ?”

அது ஒரு காட்டு ரோஜா மலர். நல்ல சிவப்பு நிறத்தில் மிக அழகான தோற்றம் கொண்டது. காட்டுக்குள் கொஞ்சம் தூரம் நடந்தால் அந்த பூவை அடைய முடியும்.

“எங்க போறெ நயோமி”

“இரு வந்துர்றேன்.”

நயோமிக்கு ரோஜா மலர்கள் என்றாள் கொள்ளை ஆசை அதன் அருகே சென்று அதன் இதழை தொட்டதும் உடனே ரோஜா மறைந்து அங்கே குவெண்டல் நின்றுகொண்டிருந்தான். அவள் தனது சக்திகளை பயன்படுத்த முன்னர் ஏதோ ஒரு மயக்கும் புகையை அவள் முகத்தில் காட்டி நயோமியை கடத்தி சென்றுவிட்டான்.

“என்ன நயோமியை காணும்?” என நுரீகோ வினவினாள்.

“அதானே அதுக்குள்ள எங்க போனா?” என்று அலைஸ் கேட்க ஆண்களும் அங்கு வந்து சேர்ந்தனர்.

“ஒன்று, ரெண்டு, மூணு, நாலு.. எங்க ஒரு ஆளை காணும். ஒரு வேளை நான் எண்ணினது தப்போ?” என்று கியோன் கேட்டான்.

“விளையாடாதே கியோன் உண்மையிலேயே இளவரசி நயோமியை காணும்.” என்றாள் சோஃபி.

“காணுமா?” என லீ அதிர்ச்சியில் கேட்டான்.

“ஆமா, இருங்க இதோ வந்துர்றேன். என்று கிளம்பினாள்.” என அலைஸ் சொன்னாள்.

“சோஃபி உன்னோட சக்தியை பயன்படுத்தி இங்க யாராவது பேசுற சத்தம் கேக்குதா என்னு கேளு.” என்றாள் கோரின்.

“கொஞ்சம் நீங்கல்லாம் எதுவும் பேசாம இருங்க” என்ற சோஃபி கண்களை மூடி கூர்ந்து கேட்டாள். கொஞ்ச நேரத்தில்.

“யாரோ ஒரு அம்மாவும் பையனும் இந்த பக்கம் பழங்கள் பறிக்க வந்து இருக்காங்க. அவங்க பேசுறது தான் கேக்குது.” என்றாள் வருத்தத்துடன்.

“இந்த காட்டுலயே அவ குரல் கேக்கலன்னா… இருங்க.” என்று கோரின் அவளது சக்தியை பயன்படுத்திய போது அதிர்ச்சி அடைந்தாள்.

“கடவுளே! அவ இந்த காட்டுல மட்டும் இல்ல இந்த உலகத்திலேயே இல்லை. அவ இப்போ ஷாடோ உலகத்தில் இருக்கா?”என்றாள் கோரின்.

“என்ன?”

“அவளை அங்க இருந்து காப்பாற்றி ஆகணும். நமக்கு அதிக நாட்களும் இல்ல. இந்த சிக்கலால யாருக்கு என்ன நடக்கும் என்றும் சொல்ல முடியாது. உங்க எல்லோரையும் சேர்த்து கொண்டுதான் அரண்மனைக்கு போகணும் ஒருத்தர் இல்லேன்னாலும் அந்த பூஜைக்கு பலன் இருக்காது” என்றான் ரியூகி.

“அப்படின்னா நீங்க உங்க பயணத்தை தொடருங்க.” என்றான் சின்.

“என்ன சொல்றீங்க அதெப்படி முடியும் நயோமி இல்லாம.”

“நமக்குள்ள ஒருத்தரை கடத்தி இருக்காங்க. அதற்கான நோக்கம் நாம எல்லோரும் அவளை காப்பாற்ற அங்க போவோம். அப்போ பிடிக்கலாமுன்னு தான் அதனால் சொல்லுறேன். நீங்க போங்க அரண்மனைக்கு. இந்த பயணத்தோட ஏழாவது நாள் நீங்க மரணப் பாலத்தை அடைஞ்சி இருப்பீங்க. அதுக்குள்ள நான் இளவரசியை மீட்டு கொண்டுவறேன். ஆனா இங்கிருந்து யாரு என்னை ஷாடோ உலகத்துக்கு அனுப்பி வைக்க போறது ?”என்று கேட்டான் சின் கே.

“நான் முயற்சி பண்ணுறேன்.” என்றாள் அலைஸ்.

“இல்ல… நீ வீக் ஆயிடுவே. பயணம் தடைபடும்.” என்றான் ரியூகி.

“பரவாயில்லை ரியூகி. நாயோமிக்காக தானே.” என்றவள் வானை நோக்கி கையை உயர்த்தி மறுபடி சின் கேவை சுட்டி காட்ட உடனே சின் மறைந்து போனான். அலைஸ் மயங்கி விழுந்தாள்.

*******************

திடீரென ஷாடோ உலக அரண்மனையில் ஏதோ ஒரு இடத்தில் சின் தோன்றினான். உடனே யாரோ வருவது போல ஓசை கேட்க ஒளிந்து கொண்டான். அந்த பக்கமாக வந்த இரு காவலாளிகளை கொன்று அவர்களின் உடையை அணிந்து கொண்டு உள்ளே சென்றான்.

“எங்க கொண்டு போய் வெச்சிருப்பாங்க?”என்று தேடினான்.

தொடரும்……
ALF. Sanfara.

மூன்று நாட்கள் வேறெந்த பிரச்சினையும் இல்லாமலே நமது குழுவினர் பயணித்தனர். முடிவில் ஒரு ஆறு தென்பட்டது. “இந்த ஆறு நாம பயணம் ஆரம்பித்தது முதல் கேட்டுட்டு இருந்த சத்தம் தானே. இதுக்கு ஒரு முடிவே…

மூன்று நாட்கள் வேறெந்த பிரச்சினையும் இல்லாமலே நமது குழுவினர் பயணித்தனர். முடிவில் ஒரு ஆறு தென்பட்டது. “இந்த ஆறு நாம பயணம் ஆரம்பித்தது முதல் கேட்டுட்டு இருந்த சத்தம் தானே. இதுக்கு ஒரு முடிவே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *