அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 42

  • 18

“இங்க ஒரு பெரிய ஆபத்து ஏற்படப்போகுது… அதுங்க வர்ர சத்தம் எனக்கு கேக்குது.” என்றாள் சோஃபி.

“சீக்கிரம் முடிக்கனும்… அவங்க வந்துட்டாங்க.” என சொல்லி முடிப்பதற்குள் மைதானத்தில் திடீரென தோன்றினார்கள் ட்ராகன்களும் நிழல் தேவதைகளும்.

“யாரும் பதட்டப்பட வேணாம்… இன்னும் ஒரு மணி நேரம் சமாளிக்க பாருங்க. நான் மந்திரங்களை சொல்லிட்டே இருக்கேன்.” என்றார் ஷா.

சடங்கை கண்டுகளிக்க வந்த பொதுமக்கள் எல்லோரும் ஆளுக்கொரு திசையில் ஓடினார்கள். ஒரு ட்ராகன் நெருப்பை கக்கியது.

“கோரின் ஜாக்கிரதை!” என்று கத்திகொண்டே சின் கே அவளை பிடித்து பாய்ந்து காப்பாற்றினான்.

“உனக்கு நெருப்போட விளையாடனுமா? அப்போ என் கூட மோது.” என்ற நயோமி தன் கைகளால் நெருப்பை வீசி அந்த ட்ராகனை கொன்றாள்.

மன்னர் பீட்டர் முன்னிலையில் தோன்றிய சோஜோ…

“பீட்டர் எனக்கு சொந்தமான பெண்ணை எனக்கே கொடுத்துடு.” என்றான்.

“அது நான் உயிரோட இருக்கும் வரை நடக்காது.” என்றார் பீட்டர்.

“அப்போ முதலில் உன்னை கொல்லுறேன்.” என்றவன் பீட்டரோடு சண்டையிட்டான்.

“அலைஸ் உன்னோட மொத்த சக்தியையும் பயன்படுத்த வேண்டிய நேரம் வந்திடுச்சு.” என்றான் ரியூகி.

“புரியுது.”

அலைஸ் தனது சக்திகளை பயன்படுத்தி தேனீக்களை வெள்ளம் வெள்ளமாக கொண்டுவந்து ட்ராகன்களை தாக்க அனுப்பினாள். சின் கே தன் பங்கு வேலையை கச்சிதமாக செய்தான். கோரின் ஒருவாறாக தப்பித்து கொண்டே இருந்தாள். மந்திரத்தை விடாது சொல்லி கொண்டிருந்தார் மாஸ்டர் ஷா.

“சோஃபி நாமளும் ஏதாவது செய்யணும்..” என்றான் கியோன்.

“அதுக்குத்தான் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்.” என்றாள்.

ரியூகி அவனது தங்க நிற ஒளிக்கீற்றுகளை பயன்படுத்தி அனைத்து ட்ராகன் களையும் கொன்றான். அப்போது சோஜோ,

“கண்ணுக்கு தெரிஞ்சதால அதுங்களை கொன்னுடீங்க… எங்களை என்ன பண்ண போறீங்க.” என்று சொல்லிக்கொண்டே மறைந்து தாக்கினார்கள் .

“அவங்கல்லாம் எங்க போனாங்க…”

“இங்க தான் இருக்காங்க பார்த்து..”

சோஃபி எதையோ கண்டுபிடித்து இருக்க வேண்டும். அவள் அவளது சக்திகளை சரியாக பயன்படுத்த கற்றுக்கொண்டாள். இம்முறை அவள் கத்தியது நிழல் தேவதைகளுக்கு மட்டுமே கேட்டது. அவை மறைந்த நிலையில் இருந்து காதுகளை பொத்தி கொண்டே தோன்றி தோன்றி மறைய சந்தர்ப்பம் பார்த்து அவற்றை தாக்கினார்கள் இவர்கள்.

“ஹேய் நீ கத்தினது எப்படி எங்களுக்கு கேட்காம போனது?”

“அது ரகசியம்”

சோஜோ பீட்டருக்கு பெரிய வாளால் வீச அவருக்கு காயம் ஏற்பட்டது. அவர் கீழே விழ மீண்டும் கொல்லும் முயற்சியில் வாளை ஓங்கினான் சோஜோ.

“ஹலோ..”

என்று ஒரு பெரிய கல்லை எடுத்து சோஜோ மீது வீசிய ரியூகி அவன் பக்கம் சோஜோவை திசை திருப்ப அவர்கள் இருவரும் சண்டையிட ஆரம்பித்தனர். பீட்டரை தூக்குவதற்காக சின் கே ஓட அதற்குள் குறுக்கே வந்து நின்றான் குவெண்டல்.

“ஒஹ் நீயா…”

இனி அவர்கள் இருவரும் சண்டையிட்டு கொண்டனர். ஆசுகி வந்து மன்னரை தூக்கி வேறொரு பக்கமாக சென்றார்.

“இன்னும் பதினைந்து நிமிடங்கள் மட்டுமே இருக்கு.” என்று மாஸ்டர் ஷா எச்சரித்தார்.

ரியூகி தனது சக்திகளை அதிகம் பிரயோகித்து சோஜோவை கொன்றொழித்தான். சின் கே, குவெண்டல் சண்டையில் மைதானத்தில் நடுவில் இருந்த அந்த பெரிய தூண் அலைஸ் மீது விழப்போன போது குவெண்டலை கொன்றுவிட்டு சின் கே ஓடிப்போய் அலைஸை தள்ளி விட தூண் அவன் மீது விழுந்தது.

“இல்லை….”

அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். தாங்க முடியாமல் அதை தங்கியவாறே ,

“உங்களுக்காக உயிர் போகுதே என்று சந்தோசமா தான் இருக்கு.” என்றான் பலத்த காயங்களுடன். நயோமி அழுது புரண்டாள்.

தொடரும்……
ALF. Sanfara.

 

“இங்க ஒரு பெரிய ஆபத்து ஏற்படப்போகுது… அதுங்க வர்ர சத்தம் எனக்கு கேக்குது.” என்றாள் சோஃபி. “சீக்கிரம் முடிக்கனும்… அவங்க வந்துட்டாங்க.” என சொல்லி முடிப்பதற்குள் மைதானத்தில் திடீரென தோன்றினார்கள் ட்ராகன்களும் நிழல் தேவதைகளும்.…

“இங்க ஒரு பெரிய ஆபத்து ஏற்படப்போகுது… அதுங்க வர்ர சத்தம் எனக்கு கேக்குது.” என்றாள் சோஃபி. “சீக்கிரம் முடிக்கனும்… அவங்க வந்துட்டாங்க.” என சொல்லி முடிப்பதற்குள் மைதானத்தில் திடீரென தோன்றினார்கள் ட்ராகன்களும் நிழல் தேவதைகளும்.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *