அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 37

  • 12

“இது ரொம்ப பெரிசு.”

அது பார்க்குறதுக்கு ரொம்பவும் கோபத்தில் இருக்குறமாதிரி இருக்கு. நம்மள ஒரு வழி பண்ண போகுது.” என்றான் கியோன்.

“கியோன்!…”

அதற்குள் அது கியோனையும் சோஃபியையும் தன் வாலால் தாக்கியது. அலைஸ் அவளது தேனீக்களை மீண்டும் வரவைக்க முயன்ற போது அது அவளையும் தாக்கியது. அடி பலமாக இருந்ததால் அவள் வீசப்பட்டு ஒரு மரத்தில் அடிபட்டு விழுந்தாள். ரியூகி ஆவேசத்தில் கத்தினான். உடனே அவன் உடல் தங்க நிறத்தில் ஜொலிக்க ஆரம்பித்தது அடிபட்டு விழுந்தவர்கள் எல்லாரும் அவனை ஆச்சர்யத்துடன் பார்க்க அவனோட உள்ளங்கையில் இருந்து லேசர் போன்ற பொன்னிற ஒளி புறப்பட்டு அந்த ட்ராகனை தாக்க அந்த இடத்திலேயே உடல் சிதறி இறந்தது. ரியூகி ஓடிவந்து அலைஸை மடியில் கிடத்தினான். அவளுக்கு எங்கல்லாம் அடிப்பட்டுள்ளது என பார்த்தான்.

“ரியூகி!”

“உனக்கு ஒன்னும் இல்லியே?”

நுரீகோ லீயை எழுப்பிவிட்டாள். கோரின் கியோனையும் சோஃபியையும் தோளில் தாங்கி கொண்டே எல்லோரும் ஓரிடத்தில் குவிந்தனர்.

“ரியூகி… நாம” என்று சோஃபி குழப்பத்துடன் அவனை தேற்றினாள். யாரும் எதுவும் பேசவில்லை. அப்படியே பயணத்தை தொடர்ந்தனர். இரவாக இருந்தும் பயணிக்க வேண்டி இருந்தது.

***************************

மறுபுறம் ஆற்று வெள்ளத்தில் அடிபட்டு சென்ற நயோமியை எப்படியோ சின் கே காப்பாற்றி கரைக்கு கொண்டு சென்றான். அங்கு ஒரு குகை இருந்தது. அவளது மேலதிகமான ஆடைகளை களைந்து அவளை அதில் கிடத்தி அவளதும் சின் கே வினதும் ஈர உடைகளை களைந்து ஒரு கல்லில் காயபோட்டு விட்டு கற்களால் தீயை ஏற்படுத்தினான். அதில் நயோமியை குளிர் காய விட்டு விட்டு அவன் குகைக்கு வெளியே சென்று அமர்ந்து கொண்டான். அவள் நீரை விழுங்கியிருக்க வில்லை. அதிர்ச்சியால் ஏற்பட்ட மயக்கம் தெளிந்ததும் எழுந்தவுடன் சின் முன்னாடி உட்கார்ந்து இருப்பது கண்டு,

“நாம இப்போ எங்க இருக்கோம்.” என்று கேட்டாள். அவனும் மறந்து போய், திரும்பி,

“எழும்பிடீங்க….. ளா… ஸாரி.., ஸாரி…” என சட்டன திரும்பி கொண்டான்.

அதன்பின்னர் தான் நயோமி தான் ஆடைகள் இன்றி இருப்பதை உணர்ந்து வெட்கித்து போய்  சட்டன அங்கிருந்து ஒரு துணியை இழுத்து மறைத்து கொண்டாள்.

“அது வந்து ஆடைகளை நான் தான் களைந்தேன். உங்களுக்கு ஜுரம் பிடிக்காம இருக்க அது நான் சத்தியமா கண்களை மூடிக்கொண்டு தான்.” என்று சொல்ல தயங்கினான்.

“என் உயிரையே காப்பாற்றி இருக்கீங்க ரொம்ப நன்றி.” என்றாள்.

“இதுக்கு எதுக்கு நன்றி… நான் என்னோட கடமையை தானே செஞ்சேன்.”

“இப்போ புறப்படனுமா.. இல்ல..”

“இல்ல நயோமி… இப்போ வெளில போறது ஆபத்து காலைல தான் போகமுடியும். எனக்கு தெரிந்து இந்த ஆற்றுக்கு ரொம்ப பக்கத்தில் தான் அந்த பாலம் இருக்கு. உங்களுக்கு இன்னிக்கி ராத்திரி இங்க தங்கிறதால ஏதும் சங்கடமா?”என கேட்டான்.

“சே சே… இப்படி ஒரு அருமையான வாய்ப்பை விடமுடியுமா?” என சிரிக்க. அவன் மனதில்…

“போச்சு போ.. இப்போ இவளை வேற சமாளிக்கணும்.” என்று முணு முணுத்தான்.

இரவு முழுவதும் அவள் சின் கேவை கேள்விகள் கேட்டு துளைத்தெடுத்து விட்டாள். போதும் போதும் என்றாகி விட்டது. விடிந்ததும் ஆடைகளை எல்லாம் அணிந்து கொண்டு பாலத்தை நோக்கி பயணித்தார்கள். அதே சமயம் ரியூகி குழுவும் பாலத்தை நெருங்கி கொண்டிருந்தார்கள்.

தொடரும்……
ALF. Sanfara.

“இது ரொம்ப பெரிசு.” அது பார்க்குறதுக்கு ரொம்பவும் கோபத்தில் இருக்குறமாதிரி இருக்கு. நம்மள ஒரு வழி பண்ண போகுது.” என்றான் கியோன். “கியோன்!…” அதற்குள் அது கியோனையும் சோஃபியையும் தன் வாலால் தாக்கியது. அலைஸ்…

“இது ரொம்ப பெரிசு.” அது பார்க்குறதுக்கு ரொம்பவும் கோபத்தில் இருக்குறமாதிரி இருக்கு. நம்மள ஒரு வழி பண்ண போகுது.” என்றான் கியோன். “கியோன்!…” அதற்குள் அது கியோனையும் சோஃபியையும் தன் வாலால் தாக்கியது. அலைஸ்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *