மனைவிக்கு வீட்டு வேலைகளில் ஒத்துழைப்போம்!

  • 7

பிள்ளைகளைக் கவனித்து அவர்களது தேவைகளை தியாகத்துடன் செய்து கொடுத்து நாளாந்தம் ஓய்வின்றி வேலை செய்யும் மனைவிக்கு, கணவன் குறைந்தளவு Weekendலாவது சமைத்துக் கொடுத்து, வீட்டு வேலைகளை செய்து முடிக்க ஒத்துழைக்க வேண்டும்.

ஓயாது வீட்டில் பல சுமைகள், சிரமங்கள், வேலைகளை தினந்தோறும் செய்யும் தாய்க்குழாம் உண்மையில் பாராட்டத்தக்கவர்கள். சிறந்த புரிந்துள்ள கணவன், மனைவியின் வீட்டு வேலைகளில் தாமும் ஒத்துழைத்து, அவளது சுமைகளை குறைத்து இளைப்பாறுதலையும், ஓய்வையும் ஏற்படுத்திக்கொடுப்பார்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனைவிகளுக்கு வீட்டு வேலைகளில் ஒத்துழைத்து, உதவிய பல முன்மாதிரிமிக்க சம்பவங்கள் சான்றுகளாக ஹதீஸ்களில் பதியப்பட்டுள்ளன.

கணவன் ஆண் எனும் கர்வத்தைத் தவிர்த்து தனது மனைவி மற்றும் தனது குழந்தையை பல சிரமங்களுடன் சுமந்து வலிகளைப் பொறுத்து பிரசவித்த தாய் எனும் பார்வையில் அணுகி அவளை கண்ணியமாகவும் அன்பாகவும் நடத்துவதானது அன்பான கணவனின் வெளிப்பாடாகும்.

மனைவி என்பவளும் மனித இனம் தான், அவளுக்கும் மனமுண்டு. அத்தோடு அவளுக்கும் உணர்வுகள், அபிலாசைகள், கனவுகளடங்கிய உலகமொன்று உண்டென்பதை கணவன் உணர்ந்தால் அவளது சுக துக்கங்களில் பங்கெடுப்பதுடன் அவளுக்கு என்றும் ஆறுதலாகவும் பக்கபலமாகவும் அமைவான்.

அவளுக்காக நேரம் ஒதுக்கி அவளுடன் மனம் விட்டுப் பேசி, அவளது கனவுகளை அறிந்து முடியுமானவற்றை செய்து கொடுத்து அவளை மகிழ்விப்பதும் ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கைக்கு உந்துதலாக அமையும்.

இவ்விடயத்தில் முதலில் மாற்றம் எம்மிலிருந்து வரவேண்டும் எனும் சிந்தனையுடன் செயற்படுவோம்.

நட்புடன்
Azhan Haneefa

பிள்ளைகளைக் கவனித்து அவர்களது தேவைகளை தியாகத்துடன் செய்து கொடுத்து நாளாந்தம் ஓய்வின்றி வேலை செய்யும் மனைவிக்கு, கணவன் குறைந்தளவு Weekendலாவது சமைத்துக் கொடுத்து, வீட்டு வேலைகளை செய்து முடிக்க ஒத்துழைக்க வேண்டும். ஓயாது வீட்டில்…

பிள்ளைகளைக் கவனித்து அவர்களது தேவைகளை தியாகத்துடன் செய்து கொடுத்து நாளாந்தம் ஓய்வின்றி வேலை செய்யும் மனைவிக்கு, கணவன் குறைந்தளவு Weekendலாவது சமைத்துக் கொடுத்து, வீட்டு வேலைகளை செய்து முடிக்க ஒத்துழைக்க வேண்டும். ஓயாது வீட்டில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *