குரங்கு மனசு பாகம் 62

  • 13

“எங்கயோ போற ஒருத்திக்காக இந்த உம்மாவ நீ விட்டுக் கொடுத்தப்போ ஒரு கணம் உலகமே வேணாம்னு போயிச்சுடா, உன்ன நெனச்சி உருகி அழுதுட்டு இருந்தன். என்னால எதுவுமே செய்ய முடியல்ல. கண்ண மூடினாலும் உன் முகம் தான் வந்து நிக்கும், பேசாம செத்து விடுவோமான்னு கூட யோசிச்சு பார்த்தன்.”

“உம்மா…”

“நான் சொல்லுறன்னு தப்பா எடுத்துக்காதடா.. சர்மி யாரு?? ஒருத்தன் கூட வாழ்ந்துட்டு வந்தவள் டா, நீ வேணாம்னு அடிச்சி சொன்னவள் டா, உன் காதல புரிஞ்சிக்காம உன்ன கதற வெச்சவள்டா, நீ ஒரு ஆட்டோ ட்ரைவர்னு உன்ன எப்புடி எல்லாம் மட்டம் தட்டினாங்க?? இப்போ கூட நான் உனக்கு அவள் வேணாம்னு சொல்லல்ல ஆனா அப்புடி ஒருத்திய, என் புள்ள உன்ன, எங்கள கேவலமா கண்ட அந்த பெமிலி கூட உன்னப் போல வெக்கமில்லாம என்னால உறவு வெச்சிக்க ஏலாதுடா…”

“உங்க கோவம் நியாயமானது தான்மா.. ஆனா இதுக்கு எல்லாம் ரீசன் சர்மி இல்லம்மா” தன்னவளை விட்டுக் கொடுக்க அவன் அகம் மறுத்தது.

“நீ எங்க உன் பொன்சாதிய விட்டுக் குடுப்ப? நல்லா வெச்சிட்டு கொண்டாடு…”

“ஜய்யோ அப்புடி இல்லம்மா…”

“அவளப் பத்தி எதுவும் என்கிட்ட சொல்ல வராத…”

“உம்மா நான் சொல்றத நீங்க கொஞ்சம் வாங்கிக் கொண்டா அவள் யாருன்னு புரியும் மா…”

“என்னடா அப்புடி என்னதான் சொல்லப் போற?” பேயாட்டம் ஆடத் துவங்கிய தாயை அதற்கு மேலும் சீண்டி விட பிரியப்படவில்லை அவன்.

“சரிம்மா இப்போ அது இதுன்னு மனச கொழப்பிக்காம சந்தோஷமா இருப்போமே!”

“ஹ்ம்ம்ம்” அவள் இன்னும் பேச எத்தனித்தாலும் தாயின் வாய்க்கு பூட்டு போட்டு விட்டான் அதீக்.

“எனக்கு பசிக்குதும்மா” கதை வேறு பக்கத்துக்கு திரும்ப, மெதுவாக எழுந்து சென்றாள் வாஹிதா.

“சர்மி சாப்பிட்டு இருப்பாளா?” உடல் இங்கிருந்தாலும் உள்ளம் தன்னவள் நினைப்பில் இருக்க, மனைவிக்கு அழைப்பு செய்தான்.

“சர்மிம்மா சாப்பிட்டீங்களா?” கணவனின் குரல் கேட்டு குமுறி அழுதவளை ஆற்றுப்படுத்துவதா? அப்படியே விட்டு விடுவதா?” அவனால் என்னதான் செய்ய முடியும்?

“அதீக் சாப்பாடு ரெடிடா” தாயின் கூப்பாடு மனைவியை அப்புறப் படுத்த, கதறி அழுதவளை அப்படியே விட்டு விட்டு சாப்பிட எழுந்து சென்றான்.

மறுமுனையில் வெந்த புண்னுக்கு வேல் பாய்ச்சியதாய் சர்மி நிலையாக, அழைப்பை துண்டித்துச் சென்ற தன்னவனை எண்ணி கட்டிலில் குப்புற படுத்தவளாய் விம்மி அழுதாள்.

“என்ன விட்டு போயிடாதிங்க ஹபி” என்பதே அவள் வாய் பிதற்றலாய் இருக்க, இப் புனித காதல் ஜோடிகளை கழைத்து விடும் வாஹிதாவின் எண்ணம் அறங்கேறினால்???

கதை தொடரும்…
Aathifa Ashraf

“எங்கயோ போற ஒருத்திக்காக இந்த உம்மாவ நீ விட்டுக் கொடுத்தப்போ ஒரு கணம் உலகமே வேணாம்னு போயிச்சுடா, உன்ன நெனச்சி உருகி அழுதுட்டு இருந்தன். என்னால எதுவுமே செய்ய முடியல்ல. கண்ண மூடினாலும் உன்…

“எங்கயோ போற ஒருத்திக்காக இந்த உம்மாவ நீ விட்டுக் கொடுத்தப்போ ஒரு கணம் உலகமே வேணாம்னு போயிச்சுடா, உன்ன நெனச்சி உருகி அழுதுட்டு இருந்தன். என்னால எதுவுமே செய்ய முடியல்ல. கண்ண மூடினாலும் உன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *