தூக்கம் தொலைத்தீரோ!

admin

நீ இன்றி விடியல் புலராது
உனை அன்றி என் வழ்வு நகராது
எனை ஈன்ற அன்னை ஆணையாக
உனை சுமப்பேன் குழந்தையாக
என்று சுவைத்த பின்
உதித்த மலரை உதிர்த்திய
உள்ளங்களே உங்களை விட
விபச்சாரிகளே மேல்!

காமம் கொள்ள
கைகளுக்கும்
கண்களுக்கும்
கள்ளத்தனம் வேண்டும்
கற்பை திறந்த பின்
கட்டிலிலே கொஞ்ச வேண்டிய பிஞ்சை
குப்பை தொட்டியிலே
கிளை மறைவில்
வைக்கிறதா உங்கள் நெஞ்சு!

ஒரு சில சுகத்திற்காய்
சில இரவுகள் கடந்து
சுகம் தந்த விருந்துண்ண
விரும்ப வில்லையோ
உங்கள் நஞ்சுள்ளம்

காதல் என்ற பெயரில்
காமம் வென்ற பின்பு
காரணம் தேவையில்லை
கண்திறக்கும் முன்னே இறந்திட்ட
இப்பிஞ்சுக்கு
இக் குப்பைத் தொட்டியும்
குமரி உன் கருவறை என்றே
நினைத்திருக்கும் !

அநாதை இல்லம்
வரை கூட
அடைக்களம் இல்லையே
உன் தாயுன்னை
நசுக்கி இருந்திருந்தாள்
இங்கு உன் பசிக்கு
இறையில்லாமல்
இருந்திருக்கும் அல்லவா !

இப்படி ஒரு
ஏப்பமிடத்தான்
அப்படி ஒரு தூக்கம்
தொலைத்தீரோ !

கவியிதழ் காதலன்
ஐ.எம்.அஸ்கி
அட்டாளைச்சேனை-08

Leave a Reply

Your email address will not be published.

Open chat
Need Help