பதில் – “தெரியவில்லை”

வாழ்வின் பல சந்தர்ப்பங்களில் ஏதேனும் ஓர் சம்பவம் இந்த உலகின் நிஜ உருவம் பற்றிய உண்மை நினைவை எம் மத்தியில் எழுப்பி விட்டுத்தான் செல்கிறது.

ஆனால் மனிதன்தான் நடந்தது நடக்காதது மற்றும் நடந்தால் நன்றாக இருக்கும் என்று அவன் நினைத்தது என அனைத்தையும் சேர்த்து ஒரு கற்பனையிற்குள் கொண்டு வந்து அதற்கு கதவு, ஜன்னல், கூரை வைத்து ஒரு மாயை நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருக்கின்றான்.

நிஜமாகவே மறந்துதான் போய்விடடோமா? அல்லது ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டிய அவசியம் அல்லது கட்டாயம் இல்லை என்கிற அஜாக்கிரதையா? இல்லை என்றால் இயல்பு நிலைக்குத் திரும்பிய பின் பார்த்துக்கொள்ளலாம் என்கிற பொடுபோக்குத் தனமா? எது என்று தெரியவில்லை ஆனால் ஏதோ ஒன்று மனிதன் இந்த உலகின் மாயங்களில் இருந்து விடுபட்டு யதார்த்தத்தை உணர மறுப்பதற்கு, வாழ்க்கையின் போலித் தன்மையில் இருந்து விடுபடாமல்  இருப்பதற்கு காரணமாக அமைகின்றது.

ஒன்று மட்டும் உண்மை இந்த Lock down ஊருக்கும் உலகிற்குமே தவிர நேரத்திற்கோ அல்லது காலத்திற்கோ இல்லை  நேரமும் காலமும் அதன் போக்கில் கடந்துகொண்டே தான் இருக்கும்.

சில சமயங்களில் மீண்டும் பழைய வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும். என்கிற எதிர்காலத்தைக்  குறித்த பயமோ அல்லது எதிர்பார்ப்போ இன்னதென்று செல்ல முடியாத ஒரு விடயம்  எல்லோர் மனதையும் ஆக்கிரமித்துக்கொண்டு தான் இருக்கிறது.

அப்படி பயப்படுகின்றோம் என்றால் இந்த வகையான வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு விட்டோமா?  இப்படி ஒரு வாழ்க்கையை தான் இவ்வளவு நாளாக எதிர்பார்த்து காத்திருந்தோமா? ஆம் என்றால் ஏன்? எதற்காக? அது எப்படி சாத்தியம்? எவ்வாறு அதை அறிவது என பல வினாக்கள்.  அப்படி என்றால் இவ்வளவு நாளாக தேடித் தேடி ஓடியது எல்லாம் பொய்யா? இது கையில் வெண்ணெய்யை வைத்துக்கொண்டு ஊரெல்லாம் நெய் தேடி அலைந்த கதையாக அல்லவா இருக்கின்றது. உண்மையில் காலம் இழுத்த இழுப்பிற்கு எல்லாம் இயங்கிக்கொண்டு அதற்கு நாம் இட்ட பெயர்தான் வாழ்க்கையா…?

சரி அப்படி இல்லை மீண்டும் பழைய வாழ்க்கைக்கு திரும்புவதை எதிர்பார்க்கின்றோம் என்றால் ஏன்? எதற்காக பிடிக்கவில்லை? எந்த வித வெளித்தொடர்பும் அற்ற முற்றுமுழுதாக தன் குடும்பத்துடன் மாத்திரம் 100% privacy நிறைந்த இந்த வாழ்க்கையில் இருந்து ஏன் விடுபடத் துடிக்கின்றோம். இப்படி ஒரே ஒரு நாளாவது எனக்கு கிடைக்காதா என்று ஏங்கிய நாட்கள் தானே இவை. கனவிலும் நடக்க வாய்ப்பில்லை என்று நாமே முற்றுப் புள்ளி வைத்த விடயம் தானே இது. அப்படி எது தான் இதை ஏற்க விடாமல் தடுக்கின்றது…?

சரி இவ்வளவு நாள், மாதம், ஏன் வருடமாக  இருந்தாலும் சரி போனது போகட்டும் இனி உள்ள மிகுதி வாழ்வின் குறிக்கோல், நோக்கம், அர்த்தம், தேவை, தேடல், பொருள் தான் என்ன…?

இறுதியாக நம் வாழ்வில் அடுத்து எடுத்து வைக்க வேண்டிய அடி தான் என்ன? அது எதை நோக்கியதாக இருக்க வேண்டும்.?

பதில் – தெரியவில்லை அல்லது யோசிக்க வேண்டும் அல்லது மனிதன் இன்னும் தன்னிலை உணரவில்லை, அல்லது காலம் இட்ட நேரசூசியின் படி தான் நான் இயங்கினேன். ஆகையால் காலமே பதில் சொல்லட்டும்.

Jàzira Junaideen
Faculty of Technology (UoC)

 

 

வாழ்வின் பல சந்தர்ப்பங்களில் ஏதேனும் ஓர் சம்பவம் இந்த உலகின் நிஜ உருவம் பற்றிய உண்மை நினைவை எம் மத்தியில் எழுப்பி விட்டுத்தான் செல்கிறது. ஆனால் மனிதன்தான் நடந்தது நடக்காதது மற்றும் நடந்தால் நன்றாக…

வாழ்வின் பல சந்தர்ப்பங்களில் ஏதேனும் ஓர் சம்பவம் இந்த உலகின் நிஜ உருவம் பற்றிய உண்மை நினைவை எம் மத்தியில் எழுப்பி விட்டுத்தான் செல்கிறது. ஆனால் மனிதன்தான் நடந்தது நடக்காதது மற்றும் நடந்தால் நன்றாக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *