உளத்துய்மை என்னும் இஹ்லாஸ்

  • 12

செயல்கள் அனைத்திற்கும் அடிப்படை இஹ்லாஸ் எனும் உளத்துய்மை ஆகும். இது இஸ்லாத்தின் அடிப்படை தத்துவங்களில் ஒன்று. இஹ்லாஸ் என்பது மார்கத்திற்குற்பட்ட எந்த காரியத்தையும் இறைவனின் பொருத்தத்தை மட்டும் நாடிச் செய்வதினை குறிக்கும். நாம் எத்தனையோ செயற்பாடுகளைச் செய்கிறோம் ; செய்ய முன் நல்லெண்ணம் பிறக்கிறது ஆனால் செய்து முடிக்கயில் எமக்கு தெரியாமலே எண்ணங்கள் சிதறி சின்னாபின்னமாகி விடுகின்றன.

எண்ணங்களை தூய்மை படுத்துவது என்னவோ உள்ளங்கையில் நெருப்பை தாங்குவது போன்ற கடினமாகி விடுகின்றதே! உண்மை தான் யாரலும் மறுக்க முடியாத உண்மை.

இப்பிரச்சனைக்கு எம்மில் அதிகமானவர்கள் ஆளாகிய போதிலும் சமூகத்தில் முக்கியமாக மூன்று சாராரே அதிகமாக முகம் கொடுக்க நேரிடுகிறது.

  1. ஆலிம்கள்
  2. செல்வந்தர்கள்
  3. சமூக ஆர்வலர்கள்

மக்களை வழி நடத்தும் மூக்கனங் கையிறு அவர்கள் கைகளில் இருப்பது. ஏழைகள் செல்வந்தர்களிடத்தில் தங்கி வாழுகின்றமை. சமூக செயற்பாடுகளில் தம்மை அதிகம் ஈடுபடுத்திக் கொள்கினறமை. இவ்வாறான பல காரணிகளால் இவர்கள் இந்நிலைக்கு ஆளாகுகின்றனர்.

இதனால் இவர்கள் எதிர் கொள்ளும் முதல் பிரச்சினை ;

  • எண்ணம் மாற்றம் அடைதல், இந்நிலை முற்றி முகஸ்துதியாக பரிணமிக்கின்றது.
  • அடுத்த கட்டம் தற்பெருமை
  • இது இம்மூவரின் வாழ்க்கையிலும் அவர்கள் அறியாமலே அவர்களிடத்தில் குடி கொள்ளும் ஒரு கெட்ட குணம்.

இதனால் அவர்கள் சந்திக்க நேரிடும் பாரதூரமான விளைவுகள் என்ன தெரியுமா?

  • செய்த அமல்களுக்கு இறைவனிடம் பெறுமானமற்றுப் போய்விடும். கானல் நீர் போல் காணமல் போய் விடுகின்றன.
  • நரகின் ஏறி கொள்ளிகளாக மாறும் அவலம்.

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறிய ஒரு பிரபல்யமான ஒரு நபி மொழி, நம் காதுகள் அதிகம் கேட்டறிந்த ஒரு நபி மொழி; கியாமத் நாளன்று முதல் விசாரிக்கப்படும் மூன்று நபர்கள் :

  1. இறைப் பாதையில் உயிர் நீத்த ஒரு தியாகி.
  2. அறிவை கற்று பிறருக்கு கற்றுக் கொடுத்த ஆலிம்.
  3. இறை பாதையில் தன் செல்வதை வாரி இறைத்த செல்வந்தர்.

இவர்கள் மூவரும் நரகில் முகம் குப்பற வீசி எறியப்பட்டார்கள் என நபி மொழி கூறுகிறது , ஏன், காரணம் என்ன? அவர்கள் எண்ணத்தில் ஏற்பட்ட மாற்றம்; தான் ஒரு தியாகி, வீரன் என்று செல்லப்பட வேண்டு என தியாகி தன் உயிரை நீத்தார், தான் ஒரு ஆலிம் என்று செல்லப்பட வேண்டும் என ஆலிம் உழைத்தார், செல்வந்தர் தான் ஒரு கொடயாலி என்று சொல்ல பட வேண்டும் என பண‌த்தை அள்ளி வீசினார்.

சிந்தித்து பாருங்கள் என்ன பயன், அ‌ப்படி எம் எண்ணத்தை மாற்றிக் கொ‌ள்வ‌தி‌ல் ஏது பயன் கண்டோம், ஒன்றும் இல்லை ஒன்றுமே இல்லையே. இக்கட்டான இந்த கால கட்டத்தில் இம் மூன்று சாராரின் பங்களிப்பு எத்துனை வகையில் எமக்கு தேவைப் படுகிறது. அவர்களின் நல்ல செயற்பாடுகள் வீண் போக் கூடாது.

அந்த வகையில் நாம் அதை அந்த நன்மையைத் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும், அதற்கு இஸ்லாம் சொல்லும் தீர்வு என்ன?

  1. துஆ, பிரார்த்தனை.
  2. சுய மதிப்பீடு.

துஆவின் மூலம் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. அடுத்தது சுய மதிப்பீடு செய்வதன் மூலம் நாம் எந்த நிலயில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து உடனே அதற்கான மாற்று வழியை செய்து கொள்ள முடியும்.

எண்ணத்தை சீர் செய்து இறை பொருத்தம் பெற்றிட எமக்கு உதவிடு ரஹ்மானே. எதை செய்வதாயினும் இறைவனுக்காய் செய்வாயெனில்.. நீ மாண்ட பின்பு உன் மண்ணறை சுவனத்து பூ வனம் என்பதில் சந்தேகம் தேவையில்லை மனிதா…!

Izzath Mismail


Monetize your website traffic with yX Media Advertising that works - yX Media

செயல்கள் அனைத்திற்கும் அடிப்படை இஹ்லாஸ் எனும் உளத்துய்மை ஆகும். இது இஸ்லாத்தின் அடிப்படை தத்துவங்களில் ஒன்று. இஹ்லாஸ் என்பது மார்கத்திற்குற்பட்ட எந்த காரியத்தையும் இறைவனின் பொருத்தத்தை மட்டும் நாடிச் செய்வதினை குறிக்கும். நாம் எத்தனையோ…

செயல்கள் அனைத்திற்கும் அடிப்படை இஹ்லாஸ் எனும் உளத்துய்மை ஆகும். இது இஸ்லாத்தின் அடிப்படை தத்துவங்களில் ஒன்று. இஹ்லாஸ் என்பது மார்கத்திற்குற்பட்ட எந்த காரியத்தையும் இறைவனின் பொருத்தத்தை மட்டும் நாடிச் செய்வதினை குறிக்கும். நாம் எத்தனையோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *