மழலை மொழி கேட்க ஏங்கிக் கொண்டிருக்கிறேன்.

Advertisements

உன்னை காணத் துடிக்கிறேன் – தினமும்!
ஆனால் நீயோ இன்று தூரத்தில்.
உன்னால் நான் அடைந்த இன்பங்கள் எல்லையற்றது.
உன்னிடம் நான் எடுத்த உரிமைகளோ தாராளம்.

உன்னால் என் கடந்த கால வலிகள் மறைந்து போனது.
உன்னால் என் வாழ்வில் வசந்த காற்று வீசியது.
உன் வஞ்சகமற்ற சிரிப்பும்.
பொய்க் கோபமும் காண விழிகள் ஏங்குறது.

ஆனால் நீயோ இன்று தொலைவில்.
எல்லோரும் அருகில் இருந்தாலும்
ஏனோ நீ இல்லாதது ஓர் தனிமையே.

உன் மழலை மொழி கேட்க
ஏங்கிக் கொண்டிருக்கிறேன்.
தன் கன்றை காணாது
தவிக்கும் தாய்ப்பசு போல.

Noor Shahidha.
SEUSL.
Badulla.

Leave a Reply

%d bloggers like this: