உனக்கெதிராக இறைவனிடம் உயரும் கைகள்

  • 46

தனக்கு அநியாயம் செய்தோரை தன் இறைவனிடம் முறையீடு செய்வதற்காக பள்ளிக்குச் சென்றார் ஒரு மனிதர். (அங்கே அவருக்கு அநீதியிழைத்த) அந்த அநியாயக்காரர்கள் முதல் வரிசையில் தொழுது கொண்டிருப்பதைக் கண்டார்.
-மொழி பெயர்ப்பு –

பிறரின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் திருடியோர். பொறாமையில் சிக்குண்டு அடுத்தவர் சந்தோஷத்தை சீர்குலைத்தோர். மானத்தில் களங்கம் ஏற்படுத்தியோர். கோள் சொல்லி, புறம் பேசி சந்தோஷம் அடைந்தோர். தோற்றத்தில் தம்மை உத்தமர்களாகக் காட்டி பிறர் உரிமைகளில் அத்துமீறியோர். தானும் தன் பிள்ளைகளும் மாளிகையில் வசிக்க பிறரையும் அவர்களது பிள்ளைகளையும் வீதிக்குக் கொண்டு வந்தோர். ஊழலிலும் லஞ்சத்திலும் உயர்வான வாழ்வை தமக்கென அமைத்துக் கொண்டோர். மனைவிக்கு துரோகமிழைத்தோர். கணவனுக்கு மாறுசெய்தோர்.

என்று அடியார்களுக்கு அநியாயம் செய்து அவர்களின் அழுகைக்குக் காரணமானவர்கள் இறைவனுக்குரிய கடமைகளை நிறைவேற்ற முந்திக் கொள்கின்றனரே. அவர்களது நிலை அந்தோ பரிதாபம். என்னவென்று சொல்ல உண்மையான இந்த வங்குரோத்து நிலையை.

தொழுகையும் நோன்பும்தான் இஸ்லாமென்று நினைக்கின்றார்கள் போலும். அல்லது தொழுது, நோன்பு நோற்றால் எந்த அநியாயம் செய்தாலும் சுவனம் போகலாமென்று கருதுகின்றார்கள் போலும். அல்லாஹ்வே போதுமானவன்.

இவர்களின் நிலையே இதுவென்றால் அநியாயங்கள் செய்வதுடன் எந்த அமல்களையும் செய்யாது பாவங்களிலேயே மூழ்கியிருப்போரின் நிலை. அல்லாஹ் அனைவரையும் பாதுகாப்பானாக.

பாஹிர் சுபைர்

தனக்கு அநியாயம் செய்தோரை தன் இறைவனிடம் முறையீடு செய்வதற்காக பள்ளிக்குச் சென்றார் ஒரு மனிதர். (அங்கே அவருக்கு அநீதியிழைத்த) அந்த அநியாயக்காரர்கள் முதல் வரிசையில் தொழுது கொண்டிருப்பதைக் கண்டார். -மொழி பெயர்ப்பு – பிறரின்…

தனக்கு அநியாயம் செய்தோரை தன் இறைவனிடம் முறையீடு செய்வதற்காக பள்ளிக்குச் சென்றார் ஒரு மனிதர். (அங்கே அவருக்கு அநீதியிழைத்த) அந்த அநியாயக்காரர்கள் முதல் வரிசையில் தொழுது கொண்டிருப்பதைக் கண்டார். -மொழி பெயர்ப்பு – பிறரின்…

6 thoughts on “உனக்கெதிராக இறைவனிடம் உயரும் கைகள்

  1. 972781 663533Incredible! This weblog looks just like my old 1! Its on a entirely different subject but it has pretty much the same layout and style. Great choice of colors! 391694

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *