நாணா இங்கு என்ன நடந்திருக்கும்?

  • 46

தடம் புரண்ட கடல்
பகுதி 01

2004 ஆம் ஆண்டிலே நான் வில்வத்தை எனும் ரயில் நிலையத்தில் பணிபுரிந்த காலகட்டத்திலே என் வாழ்வில் நான் முகங்கொடுத்த முக்கியமான ஒரு நிகழ்வு தான் நான் உப புகையிரத நிலைய அதிபராக இருந்த வேளையில் அடுத்த கட்ட பதவி உயர்வுக்காக எழுதிய தேர்வு அதை எழுதிய பின்னர் எனது நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக சரியத் தொடங்கியது. பரீட்சை மண்டபத்தில் இருந்து வெளிவரும் போது ஏதோ ஒன்றை இழந்தவனின் மனப்பான்மையை சுமந்தவனாய் வீடு வந்து சேருகிறேன்.

இன்று அந்த இடத்திலிருந்து வீட்டுக்கு வந்து இரவுச் சாப்பாட்டை எடுத்துக் கொண்டிருக்கும் போது மனைவி என் முகத்தைப் பார்த்து கேட்டாள்.

“ஏன் நீங்கள் பரீட்சைக்கு போய் வந்த நேரத்திலிருந்து ஏதோ ஒன்றை பறிகொடுத்தவர் போல் ஒரே யோசனையா இருக்கிறீங்க ஆமா பரீட்சை கஷ்டமா?”

என் மனதில் உள்ள பாரத்தை இறக்கி வைக்க இதுதான் தக்க சந்தர்ப்பம் என்று எண்ணியவனாய் என் மனச்சுமையை அவளிடம் கொட்டினேன். பொறுமைக்கு இலக்கணமாய் அமைந்த என் மனையாள் என்னை ஆறுதல் படுத்தினாள்.

“நிச்சயமாக நீங்கள் பாஸ் பண்ணுவீர்கள் அல்லாஹ் உங்களை கைவிட மாட்டான். நானும் ஐந்து நேரமும் தொழுது அழுது கேட்கிறேனே என் வேண்டுதலையும் இறைவன் ஒருபோதும் நிராகரிக்க மாட்டான்.”

அவளின் ஆறுதல் வார்த்தைகள் என்னை ஓரளவு நிம்மதிப் படுத்தியது. இப்படிப்பட்ட ஒருவளை என் வாழ்க்கை துணையாக அமைத்த அல்லாஹ்வுக்கு நன்றி கூறிக் கொண்டேன்.

கல் எலியாவின் வாழ்க்கையும் ஓரிரு மாதங்கள் கழிந்து சென்றது ஊர் மக்களும் அடிக்கடி நமது சுகம் விசாரிக்க வீடு தேடி வந்தார்கள். பல புதிய உறவுகளும் நம்மோடு நட்பை ஏற்படுத்திக் கொண்டதோடு நல்ல பல நடவடிக்கைகளிலும் நமக்கு உதவி ஒத்தாசைகளை வழங்கினார்கள். வீட்டு வளவிலிருந்த மரமுந்திரி மரங்களும் காய்க்கும் தருவாயில் இருந்தன. பெரிய ஈரப்பலா மரமும் பலன் தருவதற்கான முன்னேட்பாடுகளை செய்வதற்கு தயாராக இருந்தது. எனது பிள்ளைகள் மூவரும் அயல் வீட்டுப் பிள்ளைகளோடு ஓடி விளையாடும் போது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

அது 2004 ஆம் ஆண்டின் டிசம்பர் 18 ஆம் திகதி ரொம்ப நாளைக்கு பிறகு எனது ஊர் நோக்கி புறப்பட்டுச் சென்றேன் என்னுடன் மனைவியும் பிள்ளைகளும் சேர்ந்து கொண்டனர். குடும்பத்தில் நடக்க இருக்கும் ஒரு கல்யாண வைபவத்தில் கலந்து கொள்வதற்காகவே நாங்கள் அங்கு சென்று கொண்டிருந்தோம். எனது வாப்பாவின் சகோதரியின் மகனின் கல்யாணமே நடைபெற இருந்தது. நண்பர் ரிபாக் ஸ்டேஷனில் இருந்ததால் எந்த விதமான ஐயமுமின்றி பயணத்தில் இணைந்தேன்.

ஞாயிற்றுக்கிழமை கல்யாணம் முடிந்ததும் திங்கட் கிழமையே வேலைக்குத் திரும்பினேன். ஆனால் நான் தனியாகவே சென்றேன். எனது மனைவி மக்களை காலியில் விட்டு விட்டு வந்ததற்கான இன்னொரு காரணம் இருந்தது. அதற்கு அடுத்த கிழமை அதாவது (2004. 12 .26) எமது இன்னுமொரு மச்சானின் திருமணம் இடம் பெற இருந்தமையாகும்.

காலியில் கல்யாண வீட்டுக்கு போயிருந்த வேளையில் எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ஸன்ஹார் என்னைத் தேடி வந்தார். 2000 ஆம் ஆண்டில் எமது கிராமத்தில் நாம் தொடங்கிய நலன்புரி இயக்கம் தான் கட்டுகொடை முஸ்லிம் நலன்புரி இயக்கம். அதன் தலைவராக இருந்து எமக்கு வழிகாட்டியாக இருந்தவர் தான் நண்பர் ஸன்ஹார். நான் அப்போது அந்த இயக்கத்தின் இணைச் செயலாளராக கடமையாற்றிக் கொண்டிருந்தேன்.

எமது நலன்புரி இயக்கத்தின் செயல்பாடுகளில் ஒன்று தான் எமது கட்டுகொடை கிராமத்திலே இருக்கும் புஞ்சிவத்த மையவாடியை சிரமதான அடிப்படையில் வருடந்தோறும் சுத்தம் செய்வது. கடந்த மூன்று வருடங்களாக வருடத்தின் குறிப்பிட்ட ஒரு நாளைத் தெரிவு செய்தே இதை நாங்கள் நடாத்தி வந்தோம். அந்த தினம் தான் டிசம்பர் 25 ஆம் திகதி வரும் நத்தார் தினமன்று தான் அச்சிரமதானத்திற்கான நாள் குறித்திருந்தோம்.

நான்காம் வருடமாக இடம்பெற இருந்த குறிப்பிட்ட அந்த சிரமதானத்தைப் பற்றிய அறிவித்தல்களை, கையூட்டுப் பிரதிகளை தயாரிப்பதற்காகவே ஸன்ஹார் என்னை அன்று சந்தித்தார். தேவையான அறிவித்தல்களை இரண்டு மொழிகளிலும் எழுதிக் கொடுத்த நான் கட்டாயம் டிசம்பர் 25 ஆம் திகதி சிரமதானத்தில் வந்து கலந்து கொள்வேன் என்று கூறிவிட்டு அவரை வழியனுப்பி வைத்தேன்.

நான் அன்று வில்வத்தை சென்றவுடன் ரிபாக் என்னிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு காலி நோக்கி பயணமானார். அவர் செல்லும் போது நான் அவரிடம் கேட்டுக் கொண்ட ஒரே விடயம் தான்.

“கட்டாயம் வரும் வெள்ளிக் கிழமை பின்னேரம் மீண்டும் வந்து சேர்ந்து விடுங்கள்.”

என்று. சனிக்கிழமை எனக்கிருக்கும் சிரமதான அலுவல் பற்றியும் அதற்கு அடுத்த நாள் இடம்பெறவிருக்கும் திருமண நிகழ்வு பற்றியும் ஏற்கெனவே நான் ரிபாக் இடம் சொல்லியிருந்ததால் அவர் எப்படியும் வருவார் என்ற எதிர்பார்ப்போடு அவரை வழியனுப்பி வைத்தேன். ஆனால் குறிப்பிட்ட வெள்ளிக்கிழமை வந்து சேர்ந்தும் ரிபாக் வரவில்லை அவர் சனிக்கிழமை பின்னேரம் வருவதாக எனக்கு அறிவித்தார்.

டிசம்பர் 25 ஆம் திகதி அதாவது நத்தார் தினமன்று நாங்கள் ஏற்கெனவே திட்டமிட்டபடியே எமது ஊரின் மையவாடியை கிராமவாசிகளின் பங்களிப்புடனும் எமது சங்க உறுப்பினர்களின் அர்ப்பணிப்போடும் சிரமதான அடிப்படையில் சுத்தஞ் செய்யப்பட்டதாக நண்பர் ஸன்ஹார் என் கைபேசிக்கு அழைப்பொன்றை எடுத்துத் தெரிவித்திருந்தார். முக்கியமான ஒரு தருணத்தை இழந்து விட்ட மனவருத்தம் என்னை வாட்டியது.

சனிக்கிழமை இரவு ரிபாக் சொன்னபடியே வந்து சேர்ந்து விட்டார். அடுத்த நாள் அதிகாலை 4.30 மணியளவில் காலி நோக்கிய பயணத்தைத் தொடங்கினேன்.

கொழும்பு மருதானை ரயில் நிலையத்தை அடையும் போது அதிகாலை 5.50 மணியாகிவிட்டது. ரயிலில் இருந்து இறங்கியவுடனே மருதானை ஸாஹிராப் பள்ளிவாசலுக்கு ஓட்டமும் நடையுமாகச் சென்றேன். கெதியாக சுபஹ் தொழுகையை நிறைவேற்றிய நான் பக்கத்தில் இருந்த ஒரு ஹோட்டலில் சூடான தேநீர் கோப்பையொன்றையும் பருகினேன்.

மருதானையிலிருந்து மாத்தறை வரை செல்லும் இலக்கம் 8050 ரயில் வண்டி காலை 6.30 மணிக்கே மருதானையிலிருந்து புறப்படும். டிசம்பர் 26 ஆம் திகதியென்பது சனநெருக்கடிமிக்க ஒரு தினமாகும் போதாக் குறைக்கு அன்றைய தினம் ஞாயிறு தினமாகவும் போயா தினமாகவும் சிக்கியிருந்ததால் சனநெருக்கடி பற்றி யோசித்த நான் அவசர அவசரமாக ரயில் நிலையத்தை நோக்கி ஓடத் தொடங்கினேன்.

5ஆம் மேடைக்கு புகையிரதம் வந்து சேர்ந்தது. சனத்தைத் தள்ளிக் கொண்டு உள்நுழைந்த நான் மிகவும் சிரமத்தோடு இரண்டாம் வகுப்பு ஆசனமொன்றைக் கைப்பற்றிக் கொண்டேன்.

இந்த டிசம்பர் 26 ஆம் திகதியை ஆங்கில மொழியில் Boxing day என்று அழைப்பார்கள் அந்த சொல்லின் அர்த்தத்தை உண்மைப் படுத்தும் விதத்தில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்தும் பெரும் திரளான பயணிகள் முட்டி மோதிக் கொண்டு ரயிலில் ஏறினார்கள். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் காத்திருந்தது. அங்கே அவர்களுக்கு ஒரு ஆசனம் கூட கிடைக்கவில்லை பிள்ளைகளோடும் பயணப் பொதிகளோடும் ஏறிய மக்கள் ஆங்காங்கே காலுன்றி நின்றனர்.

ஐம்பது வருடங்களை பூர்த்தி செய்திருந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் முகமாக புதுப்பொலிவு பெற்றிருந்த அந்த கனேடிய நாட்டு ரயில் இன்ஜினைக் கொண்ட 8050 இலக்க ரயில் வண்டி கூவிக் கொண்டு நெருக்கமானதும் மிகவும் இக்கட்டானதுமான ரயில் பயணத்தின் ஆரம்ப மைல்களை மிகவும் விரைவாகக் கடந்து சென்றது.

சன நெருக்கடி வர வரக் கூடிக் கொண்டே போனது எனது பக்கத்தில் 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் மிகவும் அமைதியாக அமர்ந்திருந்தார். யன்னலோரமாக அமர்ந்திருந்த அவர் மிகவும் ஆர்வமாக இயற்கையை ரசித்த வண்ணமிருந்தார். கரையோரப் பாதையின் எழிலுக்கு பஞ்சமிருக்கவில்லை. கல்கிசையின் வனப்புமிக்க கடற்கரையில் உல்லாசப் பிரயாணிகள் தாம் விரும்பியபடி குளித்து மகிழ்ந்தனர். உள்ளூர் மக்களும் தமக்கு கிடைத்த ஓய்வை மகிழ்ச்சியாகக் கொண்டாடி மகிழ்ந்திருந்தனர். இவர்களின் மகிழ்ச்சியில் நாமும் பங்கு போட்டவர்களாய் அந்தக் காட்சிகளை கண் சிமிட்டாது பார்த்துச் சென்றோம். மிகவும் அமைதியான கடல் தன்பாட்டில் அடங்கியிருந்தது. சூரியனின் இளங் கதிர்கள் மெல்ல மெல்ல சூடுபிடிக்கத் தொடங்கியிருந்தது.

ரயிலின் உள்ளே அழைந்து திரிந்து வியாபாரம் செய்யும் வியாபாரிகளின் சத்தமும் ஓடிக் கொண்டிருந்த ரயிலின் இரைச்சல் சத்தமும் ஒன்றாகக் கலந்து புதிய இசை வடிவத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. அழைந்து திரியும் வியாபாரிகளுக்கு அன்றைய தினம் கடும் கஷ்டமாகவே காணப்பட்டது. வியாபாரம் ஓ ஓ வென நடந்தேறினாலும் சனநெருக்கடியில் அங்குமிங்கும் போக முடியாத நிலை காணப்பட்டது. சிலர் வியாபாரிகளை போக விடாது வழி மறித்தார்கள் சிலர் அவர்களை கடிந்து கொண்டார்கள். இவர்களின் போராட்டம் தொடர்ந்து அரங்கேறியது.

நெடு நேரமாக என்னையே பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறு பையனை என் ஆசனத்தின் ஓரத்தில் அமர்த்திக் கொண்டேன். அவனின் தாயும் தந்தையும் நன்றியுணர்வோடு என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள். அதற்கு சற்று அப்பால் கடும் கஷ்டத்தோடு நின்றிருந்த ஒரு மூதாட்டியைப் பார்த்தேன். உடனே என் ஆசனத்தை விட்டு எழுந்து நின்று அவளை அவ்விடத்தில் அமரச் செய்து விட்டு நான் கிடைக் கம்பியொன்றை பற்றிப் பிடித்து எழுந்து நின்றேன்.

என் ஆசனத்தின் இடப் பக்கமாக இருந்த ஆசனத்திலே 70 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டியும் அவரின் மகளும் அமெரிக்காவில் இருந்து வருவதாகச் சொன்னார்கள் இருவரும் இலங்கைப் பிரஜைகள் ஆயினும் இருபது வருடங்களாக அமெரிக்காவில் குடியிருப்பதாகவும் தனது மகன் ஹிக்கடுவையில் ஒரு உல்லாச விடுதியை நடாத்தி வருவதாகவும் இந்த விடுமுறையை மகனோடு கழிக்கும் நோக்கத்துடனேயே அவர்கள் அங்கே போவதாகவும்
என்னிடம் சொன்னார்கள். சற்று நேரம் செல்லும் போது அந்த பெட்டியில் பயணித்தவர்கள் என்னோடு சுமுகமாக பேசி நண்பர்கள் போல் ஆகிவிட்டனர்.

அம்பலாங்கொடை ரயில் நிலையத்தில் புகையிரதம் நிறுத்தப்பட்டதும் நான் ஆசனம் வழங்கிய அந்த மூதாட்டி எனக்கு திரும்பவும் ஆசனத்திலே வந்து அமருமாறு சைகை காட்டிவிட்டு நன்றி கலந்த புன்முறுவலுடன் விடைபெற்றுக் கொண்டாள். என் மனதிற்குள் அமைதியான மகிழ்ச்சி தோன்றி மறைந்தது.

வேறு நிலையங்களை விட அம்பலாங்கொடை ரயில் நிலையத்தில் சற்று நேரம் தங்கியிருந்தது காரணம் வழமையாக அங்கு கூடுதலான எண்ணிக்கையில் தயிர் சட்டிகள் இறக்கப் படும். திருகோணமலை, பொலன்னறுவை, போன்ற இடங்களிலிருந்து ரயில் மூலம் கொண்டு வரப்படும் தயிர் சட்டிகள் கரையோரப் பாதையிலுள்ள நிலையங்களுக்கு கொண்டு வரப்படுவது 8050 இலக்க புகையிரதத்திலாகும் அதிலும் கூடுதலான தயிர்ச் சட்டிகள் இறக்கப்படும் நிலையமாக அம்பலாங்கொடை விளங்கியது.

இரயில் பயணிப்பதற்கான பச்சை மின்சார விளக்குகள் எரியத் தொடங்கியது நிலைய அதிபரின் விசில் ஓசையையும் எல்லாம் சரியென்ற சமிக்ஞையையும் ஏற்ற புகையிரத உப பாதுகாவலர் (Under guard) தனது சமிக்ஞையான பச்சைக் கொடியை கிடையாக அசைத்துக் காட்ட அதனையேற்ற பிரதான பாதுகாவலர் (Head Guard) தனது கையிலிருந்த பச்சைக் கொடியை காற்றில் அசைத்துக் கொண்டிருக்க ரயில் மீண்டும் உயிர் பெற்று ஓடத் தொடங்கியது.

“கஹவை” புகையிரத நிலையத்தையும் தாண்டிச் சென்ற ரயில் வண்டி “தெல்வத்தை” உப ரயில் நிலையத்திற்கு அருகே அதன் வேகத்தைக் குறைக்கத் தொடங்கியது. “பெரேலியா” எனும் இடத்தில் வேகம் முற்றுமுழுதாகவே முடக்கப்பட்டு ரயில் நிறுத்தத்திற்கு வந்தது.

இரயில் பயணங்களில் ஆங்காங்கே திடீர் நிறுத்தங்கள் வந்து போவது வழக்கம் சில வேளைகளில் ரயில் கடவைகள் (Gates) மூடுவதற்கு தாமதமாகினால் கைகாட்டி சமிக்ஞைகள் அபாய நிலையில் இருக்கும். அப்போது புகையிரதத்தை திடீர் நிறுத்தத்திற்கு கொண்டு வர சாரதி முற்படுவார். இதே போன்றே இரண்டு புகையிரதங்கள் ஒரு நிலையத்தில் மாறும் போதும் திடீரென சமிக்ஞைகள் கவனமாக வருமாறு அறிவுறுத்தும் மஞ்சள் விளக்குகளை காட்டும் அல்லது சிவப்பு விளக்குகளால் அது நிறுத்தப் படும். சில சந்தர்ப்பங்களில் நமது நாட்டில் உள்ள தற்கொலை பிரியர்களின் திடீர் நடவடிக்கைகளின் காரணமாகவும் இவ்வாறான திடீர் நிறுத்தங்கள் ஏற்படுகின்றன.

ரயில் நிறுத்தப் பட்டு ஐந்து நிமிடங்கள் ஆகிவிட்டது. முன்னாலுள்ள சமிக்ஞைகள் எதுவும் எரியவில்லை நானும் ரயிலை விட்டு இறங்கி என்ன நடந்தது என சுற்றும் முற்றும் பார்த்தேன். ஜாலியான மூடில் வந்திருந்த சில இளைஞர்கள் ரயிலுக்கு கீழே யாராவது விழுந்து கிடக்கிறார்களா? என்று எட்டிப் பார்த்தார்கள். அவர்களை அடியொட்டி நானும் ரயிலின் சில்லுகளில் யாராவது சிக்குண்டு கிடக்கிறார்களா? என்று பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒரு பத்தொன்பது அல்லது இருபது வயது மதிக்கத்தக்க ஒரு பையன் என்னிடம் ஓடி வந்தான் உச்சியில் இருந்து பாதம் வரை நவீனம் அவனை அடிமையாக்கி இருந்தது. நீண்ட முடி கொண்ட அவ்வாலிபன் பார்ப்பதற்கு ஒரு உதைப்பந்தாட்ட வீரன் போல் தோற்றமளித்தான். என்னருகே வந்தவன்,

“நாணா இங்கு என்ன நடந்திருக்கும்”

என்று என்னைக் கேட்டான். எனக்கே தெரியாத கேள்விக்கு நான் எப்படி பதில் சொல்வது என்று யோசித்து கடல் பக்கம் பார்த்தேன். எங்கும் ஒரே அலறல் சத்தம் கேட்டது. ஆடவர்களும், பெண்களும், பிள்ளை குட்டிகளும் எம்மை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தனர். என் கண்ணை என்னால் நம்பமுடியவில்லை பக்கத்தில் இருந்த பையனையும் இழுத்துக் கொண்டு ரயிலை நோக்கி ஓடினேன்.

தொடரும்.
கலைமணாளன்

தடம் புரண்ட கடல் பகுதி 01 2004 ஆம் ஆண்டிலே நான் வில்வத்தை எனும் ரயில் நிலையத்தில் பணிபுரிந்த காலகட்டத்திலே என் வாழ்வில் நான் முகங்கொடுத்த முக்கியமான ஒரு நிகழ்வு தான் நான் உப…

தடம் புரண்ட கடல் பகுதி 01 2004 ஆம் ஆண்டிலே நான் வில்வத்தை எனும் ரயில் நிலையத்தில் பணிபுரிந்த காலகட்டத்திலே என் வாழ்வில் நான் முகங்கொடுத்த முக்கியமான ஒரு நிகழ்வு தான் நான் உப…

4 thoughts on “நாணா இங்கு என்ன நடந்திருக்கும்?

  1. 258272 531874Hey really good blog!! Man .. Beautiful .. Remarkable .. I will bookmark your website and take the feeds alsoIm satisfied to seek out numerous valuable information here within the post, we need develop far more techniques on this regard, thanks for sharing. 699796

  2. 329093 417704A persons Are generally Weight loss is definitely a practical and flexible an eating plan method manufactured for those that suffer that want to weight loss and therefore ultimately conserve a a lot more culture. weight loss 573275

  3. 166854 197513Some truly good and utilitarian info on this web website , likewise I think the style and style holds fantastic attributes. 963840

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *