உலகின் முதல் இனம் சோனகர்

  • 125

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை வித்தியாசமானகோணத்தில் முன்வைப்பதற்கான நடவடிக்கை

 இலங்கை வரலாற்றில் 4 மதத்தவர்களும் உரிமை கொண்டாடும் ஓர் மலை இருக்கும் என்றால் அது சிவனொளி பாதமலையாகும். (ஸ்ரீ பாத, பாவாதம் மலை)

உலகின் முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் இலங்கையில் வாழ்ந்து வந்தாகவும் அவரின் கால் பாதச் சுவடு சிவனொளி பாதமலையில் உள்ளது என்பது முஸ்லிம்களின் நம்பிக்கையாகும்.

இதன் அடிப்படையில் ஆதம் (அலை) அவர்களது குடும்பத்தின் நேரடி பரம்பரையினர் யார் என்பதை வரலாறு, இலக்கியம், விஞ்ஞானம் சார்ந்த ரீதியில் முன்வைக்க உள்ளோம்.

இலங்கை முஸ்லிம்களுக்கு வழங்கக்கூடிய இனப் பெயர் சோனகர் ஆகும். மேற்படி சோனகர் பரம்பரையினர்தான் ஆதம் (அலை) அவர்களின் நேரடி பரம்பரையினர்.

ஆதம் (அலை) அவர்கள் தமது பிள்ளைகளிடம் தம்மை பற்றி குறிப்பிடுகையில் நான் ஆரம்பத்தில் சுவர்கத்தில் வாழ்ந்தேன் என கூறியிருப்பார்.

அதன் அடிப்படையில் அக்குடும்பத்தினர் தம்மை அடையாளப் படுத்த சுவன வாசிகள் எனும் கருத்தை தரும் சுவன நகர் என்று தமக்குள் பாவித்துள்ளனர். இந்தச் சொல்தான் காலப்போக்கில் மருவி சோனகர் என மாறியுள்ளது. எனவே இலங்கையில் மாத்திரமல்ல உலகிலே முதல் இனம் சோனகர் ஆகும்.

மேற்படி சோனகர் (முஸ்லிம்) களின் தற்போதைய குடியிருப்புக்களில் பெரும்பாலான குடியிருப்புக்கள் இலங்கையில் ஆறு அல்லது குளம் அல்லது கடலை அண்மித்ததாக உள்ளதை அவதானிக்கலாம்.

அதாவது உலகில் ஆரம்ப குடியிருப்புகளை அவதானிக்கையில் அவை நீர் நிலைகளை அண்மித்ததாக அமையப்பெற்றிருக்கும். அவ்வடிப்படையில் இலங்கையில் முதல் குடியிருப்பை உருவாக்கிய சுவனநகர் (சோனகர்) சமுகம் தம் வாழிடங்களை நீர் நிலைக்கு அண்மித்ததாக அமைத்துள்ளனர்.

உலகில் மனிதர்களை அவதானிக்கையில் நிற அடிப்படையில் அவர்களை கறுப்பர், வெள்ளையர், சிவப்பர் என அடையாளப்படுத்தலாம். இவ்வாறு நிறங்கள் மனிதர்களில் செல்வாக்கு செலுத்தக் காரணம் நிறமூர்த்தமாகும். இவை பரம்பரையினுடாக கடத்தப்படக் கூடியவையாகும்.

உலகிலும் இலங்கையிலும் ஆரம்பக் குடிமக்களாக உள்ள சோனகர் குடும்பங்களில் மாத்திரம்தான் இம் மூன்று நிற மக்களை அவதானிக்க முடியும்.

அதாவது இலங்கை சோனகரை எடுத்து நோக்கினால் அவர்களுள் கறுப்பர், வெள்ளையர், சிவப்பர் என பல நிறத்தவர் உள்ளதை அவதானிக்கலாம். இது சமுகத்தின் சிறு அலகிலும் காணலாம். அதாவது சோனகர் குடும்பம் ஒன்றை எடுத்தால் அதில் கறுப்பர், வெள்ளையர், சிவப்பரை இனம் காட்ட முடியும்.

இதற்கான காரணம் சனத்தொகை அதிகரித்த பின் மக்களை இனங்காண்பதற்காகவே பல நிறத்தவர்களாக மனிதர்களை இறைவன் படைத்துள்ளான்.

அவ்வடிப்படையில் ஆரம்ப குடிமக்களிடம் மேற்படி அனைத்து நீறமூர்த்தங்களும் இருந்தால் மாத்திரமே பிற்கால சமூகத்தை பல நிறத்தவர்களாக வகைப்படுத்தி படைக்க முடியும்.

எனவே அனைத்து நிறமூர்த்தமும் கொண்ட சமூகமாக இன்றுவரை இலங்கை சோனகர் உள்ளனர்.

மேற்படி விடயங்களை அவதானிக்கையில் சோனகர் என்பது இலங்கைக்கு வந்தேறி குடிகள் அல்ல அவர்கள்தான் இலங்கையிலும் உலகிலும் முதல் குடிமக்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

உசாத்துணை நூல்:
முஹம்மத் இத்ரீஸ் (நளீமி) அவர்களின் நூற்கள்

Ibnu Asad

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை வித்தியாசமானகோணத்தில் முன்வைப்பதற்கான நடவடிக்கை  இலங்கை வரலாற்றில் 4 மதத்தவர்களும் உரிமை கொண்டாடும் ஓர் மலை இருக்கும் என்றால் அது சிவனொளி பாதமலையாகும். (ஸ்ரீ பாத, பாவாதம் மலை) உலகின் முதல்…

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை வித்தியாசமானகோணத்தில் முன்வைப்பதற்கான நடவடிக்கை  இலங்கை வரலாற்றில் 4 மதத்தவர்களும் உரிமை கொண்டாடும் ஓர் மலை இருக்கும் என்றால் அது சிவனொளி பாதமலையாகும். (ஸ்ரீ பாத, பாவாதம் மலை) உலகின் முதல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *