அன்று – இன்று

  • 23

உள்ளதை உள்ளபடி
உபயோகப்படுத்தினான் – அன்று
குளம் குட்டை
ஆறு கடல் கடந்து
கிடைத்ததை உண்டு
காலார நடந்து
இயற்கையோடு
இணைந்து
இன்புற்றான்.

இருப்பதை மாற்றி
புதியதை புகுத்தி
புரட்சி செய்கிறான்
இன்று.
கண்டதை எல்லாம்
உண்டு கலரி கூடி
காலமெல்லாம்
கட்டிலில் கிடக்கிறான்.

பரந்து விரிந்த
பாரைப்பாேற்றி
நாடோடியாக நன்றாக
வாழ்ந்தான் – அன்று.

இருக்க இடம்
இருந்தும் சாெற்ப
காலத்திலேயே
சோர்ந்துப் போகிறான் – இன்று.

சுவையான உணவின்றி
சுகமாக வாழ்ந்தான்
அன்று
சுவை கூடி இல்லாத
நாேயை உள்ளே
இழுக்கிறான் – இன்று.

நேரத்தை நேர்த்தியாக
செதுக்கினான் – அன்று
நேரமில்லை என்று
நொந்துபோகின்றான் – இன்று.

ஆடை இன்றியும்
அழகாய் இருந்தான்
அன்று
ஆடை இருந்தும்
அழுக்காய் இருக்கிறான்
– இன்று.

ஒன்றும் இல்லாமல்
ஒற்றுமையுடன்
இருந்தான் – அன்று
எல்லாம் இருந்தும்
ஒதுங்கிப் போகிறான்
இன்று.

அன்றும் இன்றும்
என்றும் அகிலம்
அப்படியே ஆனால்
அத்தனையும்
மாறிவிட்டது
வாழ்க்கையிலே!

Rushdha Faris
South Eastern University of Sri Lanka.

உள்ளதை உள்ளபடி உபயோகப்படுத்தினான் – அன்று குளம் குட்டை ஆறு கடல் கடந்து கிடைத்ததை உண்டு காலார நடந்து இயற்கையோடு இணைந்து இன்புற்றான். இருப்பதை மாற்றி புதியதை புகுத்தி புரட்சி செய்கிறான் இன்று. கண்டதை…

உள்ளதை உள்ளபடி உபயோகப்படுத்தினான் – அன்று குளம் குட்டை ஆறு கடல் கடந்து கிடைத்ததை உண்டு காலார நடந்து இயற்கையோடு இணைந்து இன்புற்றான். இருப்பதை மாற்றி புதியதை புகுத்தி புரட்சி செய்கிறான் இன்று. கண்டதை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *