சமூக ஊடகங்கள்
நவீன உலகில் ஊடகங்கள் பல்வேறு வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. எனினும் பாலையும் நீரையும் பிரித்தறியும் அன்னங் களாக எம்மில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது தான் கேள்விக்குறி?
தம் கருத்துக்களை, நோக்கங்களை,கொள்கைகளை மனித சமுதாயம் மத்தியில் புகுத்தும் ஒரு ஆயுதமாக ஊடகங்களை பயன்படுத்தும் சக்திகள் இன்று அதிகம் காணப்படுகின்றன.
கல்வி, அரசியல், சமயம், பொழுது போக்கு என அனைத்து வழிகளிலும் ஊடகங்கள் புறக்கணிக் க முடியாத அம்சமாக காணப்படுகின்றன.அறிவுக் களஞ்சியமாகவும், நன்மைக் தலமாகவும் பயன்படுத்த பல வாய்ப்புகள் இருந்தும் நல்வழியில் அவற்றை உபயோகிப்போர் மிகக் குறைவு.
நேரம் வீணாவது மட்டுமன்றி, பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கு இடையிலான முரண்பாடுகள்,கணவன்-மனைவி மற்றும் மாமியார்-மருமகள் பிரச்சினைகள்,ஆடை கலாச்சாரம், வீணான பகிர்வுகள், இனம் தெரியாத நபர்களுடனான நட்பு,காதல், உறவுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள இடைவெளிகள் என பல வகையிலும் ஏற்படும் பிரச்சினைகளுக்கு ஊடகங்களே காரணமாகின்றன.
தாயாக, மகளாக,மாணவியாக, மனைவியாக,பல பாத்திரங்களை பக்குவமாக வகித்த நம் நங்கையர் தம் பொறுப்பை மறந்து வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.சிறந்த மனைவியாய் வாழ்ந்த அன்னை கதீஜா, அறிவொளியாய் ஜொலித்த ஆயிஷா, தியாகத் தாய் சுமையா என இஸ்லாம் போற்றும் பெண்களின் வரலாறு கேட்டு வளர்ந்த நம் பெண் இனம், இப்பண்புகளை வெறும் நடிப்பில் சித்தரிக்கும் நடிகைகளை நேசிகின்றனர்.வரலாறு போற்றிய மாந்தர்களை வழிகட்டியாய் கொண்டு வாழ வேண்டிய நாம் ,தன் அழகை காட்டித் திரியும் பாவைகளை என் விருப்பத்துக்குரிய நடிகை என அனைவர் முன்னிலையிலும் கூறும் நிலையில்…..
சிந்திக்க வேண்டிய நேரம் இது.
Thank you for great content. Hello Administ. onwin