சிடுசிடுவென சிணுங்குபவள்

  • 9

அவள் அப்படி இல்லை தான்
ஆனாலும் அவளை அப்படியே
மாற்றி விட்டது உலகம்

குழந்தையும் தோற்று விடும்
அவளது அளவில்லா குறும்புகளுக்கு
ஆனால் இன்று குறும்புகளே
அடைக்கலம் தேடுகிறது அவளிடம்
அவளோ கதவடைத்து விட்டாள்

நொடிக்கொரு முறை புன்னகை
பூத்தது அவள் இதழ்
இன்று இதழ் விரிக்க
தயங்கும் அவள் முகம்

சட்டென்று சிடுசிடுத்து விடுகிறாள்
பட்டென்று பதில் தருகிறாள்
ஆச்சரியம் தான்
என்றாலும் அது தான் உண்மை

அவள் கோபத்துக்கு பின்னால்
எத்தனையோ துரோகங்கள் மறைந்திருக்கிறது

அவள் ஒற்றை பார்வைக்குள்
அணைக்க முடியாத தீ
சுவாலையிட்டு எரிந்து கொண்டிருக்கிறது

அவள் வார்த்தைகளில்
அறிய முடியாத அர்த்தங்களை
அவளது மௌனம் உணர்த்தி விடுகிறது

அவள் மனதுக்குள் உள்ள அவமானங்கள்
தன்மானத்தை தலைதூக்கி விட்டது

அவள் சிடுசிடுக்கிறாள்
அது உனக்கான எச்சரிக்கை மணி ஓசை
பூக்களுக்கு கிடைக்காத மதிப்பு
முட்களுக்கு கிடைக்கிறது

மென்மையான பூ இதழ்களை
இலகுவில் சிதைத்து விடலாம்
நீ காயப்படுத்தினாலும் அவை
உன்னை காயப்படுத்தாது

ஆனால் முட்களை நீ இலகுவில்
சிதைத்து விட முடியாது
சிதைத்தால் உன் விரல்கள்
காயப்படக்கூடும்

பூக்களை கண்டு முட்களை
எடை போடாதே
பூ முள்ளானால் தரும் வலி
விசித்திரமானதாக இருக்கும்

எல்லை தாண்டி விளையாடி விடாதே
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான்

Noor Shahidha
SEUSL
Badulla

அவள் அப்படி இல்லை தான் ஆனாலும் அவளை அப்படியே மாற்றி விட்டது உலகம் குழந்தையும் தோற்று விடும் அவளது அளவில்லா குறும்புகளுக்கு ஆனால் இன்று குறும்புகளே அடைக்கலம் தேடுகிறது அவளிடம் அவளோ கதவடைத்து விட்டாள்…

அவள் அப்படி இல்லை தான் ஆனாலும் அவளை அப்படியே மாற்றி விட்டது உலகம் குழந்தையும் தோற்று விடும் அவளது அளவில்லா குறும்புகளுக்கு ஆனால் இன்று குறும்புகளே அடைக்கலம் தேடுகிறது அவளிடம் அவளோ கதவடைத்து விட்டாள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *