பேருவளை ஆர்ப்பாட்டம் இடை நிறுத்தம் அரசியல் சதியா?

  • 13

பேருவளை நகரில் (27.12.2020) இன்று நடாத்த தீர்மானிக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டமானது நீதிமன்ற தடையுத்தரவு காரணமாக பிற்போடப்பட்டுள்ளது.

இது குறித்து களுத்தறை நீதிமன்றத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்

மக்கள் அதிகளவில் ஒன்றுகூடுவதால் மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் மற்றும் சுகாதார நிலைமைக்கு பாதிப்பு ஏற்படும் போன்ற காரணிகளால் 106 (1) ஆம் இலக்க குற்றவியல் சட்டத்தின்படி இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் செய்ய தடை தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த அறிக்கையில் 27.12.2020 முதல் 08.01.2021 வரை எதிர்வரும் 14 நாட்களுக்கு பேருவளை நகரசபை எல்லைக்குள் எவ்வித ஆர்ப்பாட்டமும் செய்ய முடியாதென தடைவிதிக்கப்பட்டுள்ளது.

நாடாளவிய ரீதியில் இவ்வாறான ஆர்ப்பாட்டம் நடைபெற அனுமதித்த நிலைமையில், திடிரென நீதிமன்றத்தினால் இவ்வாறு ஜனாஸா எரிப்பிற்கு எதிரான அமைதிப் போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை பேருவளை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்போராட்டாமானது கட்சி பேதமின்றி பேருவளை இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என்றாலும் அதை தடை செய்ய களுத்தறை நீதிமன்றத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரும் முன்னாள் மாகணசபை உறுப்பினரருமான இப்திகார் ஜமீல், பேருவளை நகரசபை எதிர்கட்சி உறுப்பினர்கள் மூவர் உட்பட ஏழு பேரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இது ஓர் அரசியல் சதி என சந்தேகிக்கப்படுகின்றது

இது குறித்து முன்னாள் மாகாண சபை உறுப்பினர் , குறித்த ஆர்ப்பாட்ட ஏற்பாட்டுக் குழுவிற்கும் தனக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுபற்றி பிரதேச மக்கள் கருத்து தெரிவிக்கையில் இது எதிர்கட்சி சார்ந்த உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பட்டமல்ல மாறாக கட்சி சார்பிள்ளாமல் பேருவளை இளைஞர்கள் உட்பட பொது மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. என்றாலும் இங்கு ஆளுங்கட்சி சார்ந்த பிரதேச அரசியல்வாதிகள் இதனை ஒரு கட்சிசார் நடவடிக்கையாக காட்டி தடை செய்துள்ளனர் என தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

மேலும் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றால் 3,000 மேற்பட்டோர் ஒன்று கூடியிருப்பார்கள் என எதிர்பார்த்ததாகவும் என்றாலும் ஏற்பாட்டாளர்களை கைது செய்துவிடுவார்களோ அல்லது தனித்தனியே அழைத்துச் சென்று கொலை செய்து விடுவார்களோஎன்று அஞ்சி இது கைவிடப்படவில்லை. ஏற்பாட்டாளர்களின் அழைப்பை நம்பி வருகிற பெண்கள், முதியவர்கள், சிறுவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இடை நிறுத்தியதாக தெரிவித்தனர்.

 

சாத்வீக போராட்டம்.

நீதிமன்றம் மூலம் ஆர்ப்பாட்டம் தடை செய்யப்பட்டிருந்தாலும் சீனன்கோட்டையின் சகல பிரதேசங்களிலும் வெள்ளை கொடி பதாதைகள் கட்டப்பட்டு தமது கண்டனத்தையும், கவலையையும் இந்த அரசுக்கு தெறிவித்துள்ளது.

சீனன்கோட்டை பாஸியா பெரிய பள்ளிவாசல் நு​ழைவாயிலிலும் வெள்ளை சீலை கட்டப்பட்டுள்ளத.

இலங்கையின் நாளா பகுதிகளிலும் குறிப்பாக தலை நகர் கொழும்பிலும், சர்வதேச ரீதியிலும் இவ்வாறான அமைதி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஆனால் பேருவளையில் மட்டும் தடை செய்யப்பட்டுள்ளது.

பேருவளை நகரில் (27.12.2020) இன்று நடாத்த தீர்மானிக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டமானது நீதிமன்ற தடையுத்தரவு காரணமாக பிற்போடப்பட்டுள்ளது. இது குறித்து களுத்தறை நீதிமன்றத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மக்கள் அதிகளவில் ஒன்றுகூடுவதால் மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் மற்றும்…

பேருவளை நகரில் (27.12.2020) இன்று நடாத்த தீர்மானிக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டமானது நீதிமன்ற தடையுத்தரவு காரணமாக பிற்போடப்பட்டுள்ளது. இது குறித்து களுத்தறை நீதிமன்றத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மக்கள் அதிகளவில் ஒன்றுகூடுவதால் மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் மற்றும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *