காத்திருக்கிறேன்

எனது கண்கள் காத்திருக்கிறது
எனக்காக இறைவனால் படைக்கப்பட்ட
என்னவனை காண்பதற்காக!

எனது இதயம் காத்திருக்கிறது
என்னவனின் அன்பிற்காக
எனது மனக்காயங்கள் காத்திருக்கிறது
என்னவனின் ஆறுதல் வார்த்தைகளுக்காக!

எனது கடந்த காலம் காத்திருக்கிறது
என்னவனின் மார்பில் முகம் புதைத்து அழுவதற்காக!

எனது மழலை கனவுகள் காத்திருக்கிறது
என்னவனின் தோள் சாய்ந்து சொல்வதற்காக!

அவன் எங்கிருக்கிறான் என்று தெரியாது
என்றாலும் அவனுக்காக நித்தமும் காத்திருக்கிறேன்
அவனை ஹலாலான முறையில்
ஒன்று சேரும் நாளுக்காக காத்திருக்கிறேன்

எனது வாழ்வின் திருப்பு முனையாக
என்னவனின் வருகை இருக்கும்
அது பலரது கேள்விக்கு விடையாகவும்
சிலரது விடைக்கு கேள்வியாகவும் இருக்கும்
நான் காத்திருக்கிறேன் என்னவனுக்காக!

Noor Shahidha
SEUSL
Badulla

Leave a Reply

Your email address will not be published.