ஈராண்டுகள் இன்றோடு

  • 33

தெற்கிலிருந்து தென்கிழக்கு நோக்கி
தெவிட்டாத கல்வியை தேடிச் சென்று
ஈராண்டுகள் இன்றோடு!

கண்ணீரும் கண்ணை மறைக்க
சொந்தம் பந்தம் பிரிந்து
புது உறவுடன் சங்கமித்து
வருடங்கள் இரண்டு கடந்துவிட்டதே!

சொந்தம் பிரிந்த சோகம்
தாங்க முடியவில்லை
வீட்டுக்கு வரும் விடுமுறைக்காய்
நம் உள்ளம் ஏங்கியதே!

பந்தம் விட்டு பல்கலை சென்றேன்
நிமிடங்கள் கூட நாட்களாய் நகர்ந்ததே!
பந்தம் காண இல்லம் வந்தேன்
நாட்கள் கூட நிமிடங்களாய் ஓடியதே!

பெற்றோரின் பரிவையும்
ஏழையின் பசிப்பிணியையும்
வீடு விட்டு வந்த
விடுதி வாழ்கை உணர வைத்ததே!

வீட்டைப் பிரிந்த சோகம் மறைக்க
புது நட்புக்கள் புதுமணம் வீச
காலங்கள் கடந்தோட
இன்று ஈராண்டு விளிம்பில்!

ஊர் பெயர் தெரியா நட்பை பெற்றே
ஊர்ப்பேச்சை கிண்டல் செய்தே
உவகையடைந்த பொழுதுகள் பல

விடுமுறையை எதிர்பார்த்த நமக்கோ
விடுமுறையே வாழ்க்கையாகிவிட்டதே!

முதல் வருடம் விரிவுரை அரங்கோடு
இவ் வருடம் நிகழ்நிலை அரங்கோடு
ஈராண்டு கடந்துவிட்டது காற்றோடு

ஒன்றை இழந்தால் புதுவொன்றை பெறுவாய்
என கற்றுத்தந்ததே பல்கலை வாழ்க்கை
பல்கலை வாழ்வு அது பல கலை வாழ்க்கை

Faslul Farisa Asadh
Second Year
SEUSL

தெற்கிலிருந்து தென்கிழக்கு நோக்கி தெவிட்டாத கல்வியை தேடிச் சென்று ஈராண்டுகள் இன்றோடு! கண்ணீரும் கண்ணை மறைக்க சொந்தம் பந்தம் பிரிந்து புது உறவுடன் சங்கமித்து வருடங்கள் இரண்டு கடந்துவிட்டதே! சொந்தம் பிரிந்த சோகம் தாங்க…

தெற்கிலிருந்து தென்கிழக்கு நோக்கி தெவிட்டாத கல்வியை தேடிச் சென்று ஈராண்டுகள் இன்றோடு! கண்ணீரும் கண்ணை மறைக்க சொந்தம் பந்தம் பிரிந்து புது உறவுடன் சங்கமித்து வருடங்கள் இரண்டு கடந்துவிட்டதே! சொந்தம் பிரிந்த சோகம் தாங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *