தகுதியற்ற தலைமைத்துவத்தின் கையில் சிக்கிக் தவிக்கும் முஸ்லிம் சமூகம் காரணம் என்ன?

  • 35

ஒரு சமூக சக்கரத்தின் ஆரம்ப அச்சானியில் பிழை இருக்கும் போது துனை அச்சானிகள் சீராக இயங்குமா?

ஒரு சமூகத்தின் மதிப்பும் மறியாதையும் கொளரவமும் உயர்சியும் அந்த சமூகத்தை நிர்வகிக்கும் தலைமைத்துவங்களின் கைகளிலே தங்கியுள்ளது. அந்த வகையில் ஒரு சமூகத்தை நிர்வகிக்கும் முன்று பிரிவினரின் செயற்பாடுகளே அந்த சமூகத்தை மேல் ஓங்கச் செய்வதும் படு குழியில் தள்ளுவதுமான காரணிகளில் செல்வாக்குச் செலுத்துகின்றன.

  1. ஆன்மீகத்துறை
  2. அறிவியல்துறை
  3. அரசியல்துறை

நாட்டின் தற்போதய முஸ்லிம் சமூகத்தின் சன்மார்க்க காலாச்சார அரசியல் நிலைமையை சீர் தூக்கி பார்க்கும் போது இலங்கை வரலாற்றிலேயே ஒரு கவலையான நிலைமையை எதிர் கொண்டு இருப்பதை காண முடிகின்றது.

இலங்கை வரலாற்றில் அவ்வப்போது முஸ்லிம்களுக்கு அன்று தொடக்கம் சிறு சிறு பிரச்சினைகள் அவ்வப் பகுதிகளில் கலவரங்கள் அசம்பாவிதங்கள் என ஏற்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து வந்த சரித்திரங்களை திரும்பிப் பார்கும்போது தற் காலம் போன்ற மார்க்க கடைமைகளை வணக்கங்களை செய்யக் கூட முடியாத அளவு பிரச்சினைகளை இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் ஒருபோதும் ஏற்பட்டதில்லை.

இதற்கான காரணம் என்ன

1. ஆன்மீகத்துறை

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் வெற்றியில் கணிசமான அளவு பங்கு கொள்ளும் ஆன்மீக தலைமைத்துவத்தை எடுத்து நோக்கும்போது, அதில் ஒரு கவலைக்கிடமான நிலையையே காணமுடிகின்றது. அதாவது சமூகத்திற்காக, சமூக நலனுக்காக தைரியமாகவும், திடகாத்திரமாகவும், முடிவுகளை மேற்கொள்ள வேண்டிய தலைமைதுவங்கள் தமது நலனையும் பதவியையும் அடிப்படையாக வைத்து தீர்ப்பு தீர்மானங்களை மேற்கொள்வதையும், அரசியல் வாதிகளின் திருப்தியையும் நாடி, அரசியல் வாதிகளின் அடிவருடிகளாக தோற்றமளிப்பதையும், அரசியல்வாதிகளுக்காக வக்காலத்து வாங்குவர்களாவும், இவர்களது உலக லாபங்களை எதிர்பார்த்து அதன் பின்னனியில் செயற்படுபவர்களாவும் காணமுடிகின்றது. ஆக சமூகத்தின் அரசியல் அறிவியல் ஆகிய அனைத்து விடயங்களையும் கட்டுப்படுத்தி ஒரு நிலைப்படுத்த வேண்டிய செல்வாக்குச் செலுத்தும் ஆன்மீகம் முதல் காரணமே, பிழையான பாதையில் பயனிக்கும்போது முதல் கோனல் முற்றிலும் கோனல் என்பது போல் சமுகத்தின் அத்தனை தூண்களையும் தாங்கி நிற்கவேண்டிய முதல் தூன் உறுதியில்லாமையே சமூகத்தின் தோல்விக்கு முதல் காரணம் ஆன்மீகத்துறையின் பலவீனமாகும்.

2. அரசியல் துறை

பண்டைய காலம் முதல் முஸ்லிம்களின் அக்கால அரசியல் தலைமைகள் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டிருந்தாலும், அவர்களின் அரசியல், சமூக நலன் சார்ந்தாக, சமூகத்தின் உயர்ச்சி, சமூக நம்பிக்கை, சமூகத்தின் மானம் மறியாதை, சமூகத்தின் ஆன்மீகம் அரசியல் அறிவியல் போன்றவற்றை அடிப்படையாக வைத்தே செயற்பட்டார்கள்.

ஆனால் இன்றைய அரசியல் தலைமைகளை பொறுத்தவறையில் நூறு வீத சுயநலத்தையும் தனக்கும் தன் குடும்பத்திற்கும் கோடிக்கணக்கான பொருளாதாரத்தை ஈட்டிக் கொள்வதையும், தன் பதவிகளையும் பாதுகாத்துக் கொள்வதுமாகவே நோக்கமாகக் கொண்டதை காணமுடிகின்றது. துண்டங்களாகவும், துருவங்களாவும், தூர்ந்து போன பலம் பொருந்திய அரசியல் தனித்து சக்தி, அனு அளவேனும் சமூகத்திற்காவோ சமூக எதிர்கால நலனுக்காவோ பிரியவில்லை. ஒவ்வொருவரும் ஒருவருக்கு ஒருவர், தான் தான் தலைமை வகிக்க வேண்டும். என்ற தலைமைப்போட்டியே இவர்களை துண்டாடா வைத்ததே தவிர, சமூகத்திற்காக என்ற எந்த தூய்மையான நோக்கம் எந்தத் தரப்பிலும் காணப்படவில்லை.

இதற்காக சமூக ஒற்றுமையை பாதுகாக்க ஏதும் ஒரு அமைப்பு செயல்பட்டதா என்பதை நோக்கும்போது, அதுவும் இல்லை. அதேவேலை சமூக ஒற்றுமையை பாதுகாப்பது ஆன்மீகத் துறையின் தார்மீக கடமை. ஆனால் ஆன்மீகத் தலைமைத்துவத்தை பொறுத்தவரையில் சமூகம் எக்கேடு கெட்டால் நமக்கென்ன, என்ற நிலைப்பாட்டில் இதைப் பற்றிய எக்கவலையும் இன்றி, தங்களுக்கு சார்பாக தத்தமது நலனுக்காக செயற்பட்டார்களே தவிர, ஒரு போதும் பலம் பொருந்திய சமூக சக்திகள் பிரிந்து சமூகம் பலம் இழந்து விடக் கூடாது என செயற்பட்டது கிடையாது. இதற்காக அவ்வப்போது வரும் பிரச்சினைகளில் தலையிட்டு பிரச்சினைகளை சமாதானப் படுத்தி சமூகம் பலம் இழந்து ஒற்றுமையற்று சின்னாபின்னமாக சிதறிவிடக்கூடாது என்ற நோக்கம் ஆன்மீக தலைமைகளிடம் அறவேனும் காணப்படவில்லை. மாறாக சமூகம் துண்டங்களாகவும் துருவங்களாகவும் பிரிந்திருப்பதே இவர்களின் பதவிக்கான பதுகாப்பு என்பதே இவர்களின் நிலைப்பாடு.

3 . அறிவியல் துறை

சமூகத்தின் படித்த அறிவுள்ள அறிவியல்துறை வர்க்கத்தை எடுத்து நோக்கும்போது, இவர்களை பொறுத்தவரை, சிலர் தாமும் தம் குடும்பமும் எனவும் வாழும் நிலையிலேயே உள்ளனர். இவர்களை வைத்து சமூகத்திற்கு பயன்படுத்தக்கூடிய விதத்தில் தலைமைகள், ஏற்பாடுகள் சமூகத்தில் இல்லை. இன்னும் சிலர் தலைமைகளோடு சேர்ந்து சமூகத்திற்கு ஏதும் சேவை செய்ய முற்பட்ட போதும் இதற்கான வாய்புக்களை வழங்குவதாக தெ‌ரியவில்லை. இதுபற்றி சில ஆய்வுகளை மேற்கொண்ட போது, சில கவலையான விடயங்களே தெரிய வந்தது.

அதாவது அதிகாரம் கொண்ட ஆன்மீகத்துறை, சில தவறுகளை செய்த போது அது அறிவியல் துறையால் சுட்டிக்காட்டப்பட்டபோது அதை ஆன்மீகத்துறை கணக்கில் எடுக்காததின் காரணமாய் அறிவியல் துறையில் உச்சத்தில் உள்ள சிலரின் விரக்தி. போலும் அறிவியல்துறையில் உயர் நிலையில் உள்ளவர்கள் ஆன்மீகத்துறையின் கீழ் இயங்க மறுத்தல், இதற்கு ஆன்மீகத்துறை விட்டுக்கொடுக்காமை, அறிவியல் துறைக்கு உரிய இடமளித்து மதிப்பளித்து விட்டுக் கொடுக்காமை இது போன்ற பிரச்சினைகளாலையே சமூகம் தொடர்ச்சியான தோல்வியை கண்டு வருகிறது.

ஆக மொத்தத்தில் சமூகத்தின் அத்தனை தரப்புக்களையும் கௌரவமான கட்டுப்பாட்டுடன் கட்டுப்படுத்தி உரிய தரப்புக்களுக்கு உரிய இடமளித்து சமூகத்தை வழி நடாத்த வேண்டிய தார்மீக கடமையை செய்யத்தவறியமையே சமூகத்தின் இத்தனை பிரிவுகளுக்கும் பிரச்சினைகளுக்கும் முதல் காரணமாகும்.

ஆரம்பத்தில் குறிப்பிட்டதைப்போன்று முதல் கோனல் முற்றிலும் கோனல் என்பதே யதார்த்தமாகும் ஆக சமூக சக்கரத்தின் ஆரம்ப அச்சானியில் பிழை இருக்கும்போது துனை அச்சானிகளின் செயற்பாடுகள் சீராகுமா? சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திப்பார்களா?

பேருவளை ஹில்மி

ஒரு சமூக சக்கரத்தின் ஆரம்ப அச்சானியில் பிழை இருக்கும் போது துனை அச்சானிகள் சீராக இயங்குமா? ஒரு சமூகத்தின் மதிப்பும் மறியாதையும் கொளரவமும் உயர்சியும் அந்த சமூகத்தை நிர்வகிக்கும் தலைமைத்துவங்களின் கைகளிலே தங்கியுள்ளது. அந்த…

ஒரு சமூக சக்கரத்தின் ஆரம்ப அச்சானியில் பிழை இருக்கும் போது துனை அச்சானிகள் சீராக இயங்குமா? ஒரு சமூகத்தின் மதிப்பும் மறியாதையும் கொளரவமும் உயர்சியும் அந்த சமூகத்தை நிர்வகிக்கும் தலைமைத்துவங்களின் கைகளிலே தங்கியுள்ளது. அந்த…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *