வர்த்தமானி வந்ததும்
வாழ்த்தாதே
வந்தது வஹியல்ல
வழங்கியது
வரப்பிரசாதமல்ல
வலிந்தெடுத்த
வாழுரிமையை
வழியின்றி வழங்கினர்
வல்லரசுகளின் வற்புறுத்தலால்

வல்லோனின்
வண்ணப்படிதான்
வருத்தமும் வருகிறது
வல்லரசும் வானில்
வட்டமிடுது

வல்லோனை வாழ்த்துவோம்
வல்லோனின் வார்த்தைப்படி
வாழ்க்கையை வண்ணப்படுத்தி
வாழ்வை வளப்படுத்துவோம்

Ibnuasad

Leave a Reply

Your email address will not be published.

Open chat
Need Help