ஹரீனின் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு வெளியாகியதை தொடர்ந்து, புலமைப் பரிசில் பெறுபேற்றை கேட்ட இராஜ்

  • 18

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் அறிக்கை வெளியாகியுள்ள தருணத்தில் சாதாரண தரப் பரீட்சையும் நடைபெறுகின்றது ஆனால் அனைவரும் தேடுவதோ பாராளுமன்ற உறுப்பினர்களின் பெறுபேற்றையாகும்.

சாதாரண தரப் பரீட்சை ஆரம்பாகியுள்ள நிலையில் மாணவர்களை வாழ்த்தி தராதரங்கள் இன்றி அனைவரும் மாணவர்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணமுள்ளனர்.

இவ்வாறுதான் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் தொழில்நுட்ப அமைச்சருமான ஹரீன் பேர்னான்டோவும் மாணவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

குறித்த பதிவிற்கு  பலரும் நீங்களும் எழுதுறா?, நீங்கள் சித்தியடையாமல் பிறரை சித்தியடைய வாழ்த்துவது சந்தோஷம், சஜித்துடன் சேர்ந்து பரீட்சை எழுதுங்கள் போன்று கேலிபடுத்தும் விதத்தில் பின்னூட்டல்களை வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் தான் சாதாரணப் பரீட்சையில் சித்தியடைந்தேன் என்பதை நிரூபிப்பதற்கு தனது 1994 ஆம் ஆண்டு பரீட்சை பெறுபேற்றை ஹரீன் பெர்னான்டோ வெளியிட்டுள்ளார். மேலும் அவர் 6 பாடங்களில் சாதாரண சித்தி (S) பெற்றுள்ளார். மேலும் கத்தோலிக்கம் மற்றும் சிங்களம் ஆகிய பாடங்களில் சித்தியடையவில்லை.

மேலும் தனது பதிவில் தனது சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு பற்றி பொய்களை பரப்புவோருக்கு எதிராக, பொய்களுடன் வாழும் இவ்வாட்சியில் நீதியை எதிர்பார்ப்பது நகைச்சுவை என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரபல பாடகர் இராஜ் தனது முகநூலில் ஹரீன் பெர்னான்டோவின் பெறுபேறு பற்றி விமர்சித்துள்ளார்.

தாம் கேட்டதற்கு இணங்க பெறுபேற்றை வெளியிட்டமைக்கு நன்றி, ஆனால் 2004 இல் அறிமுகமான மின்னஞ்சல் (gmail) 1994 ஆம் ஆண்டின் பெறுபேற்று அட்டையில் வந்தது எவ்வாறு? மேலும் பல பாடங்களின் பெயர்களை தவறாக எழுதியுள்ளீர் என்று குறிப்பிட்டார்.

மேலும் கணிதத்தில்  சாதாரண (S) சித்தியை பெற்று நாட்டின் உயர்ந்த இடமான பாராளுமன்றத்தில் தொழில்நுட்ப அமைச்சராக ஆலோசனை வழங்க முடியுமா?

மேலும் தீங்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தீர்களா என்ற சந்தேகம் உள்ளது. எனவே அதன் பெறுபேற்றையும் வெளிமிடவும் என்றும் குறிப்பிட்டார்.

அடுத்த 225 பேரும் இவ்வாறு காட்டினால் நல்லம்
என்று பதிவிட்டுள்ளார்.

(குறிப்பு குறித்த பதிவு சில மணிநேரங்களுக்குள் நீக்கப்பட்டுவிட்டது. அதற்கான காரணம் ஹரீனின் பதிவொன்றாகும்.)

ஆனால் மாணவர்களுக்கு சாதாரண தரப் பரீட்சை இடம்பெற்றாலும் மக்கள் தேடுவதோ அமைச்சர்களின் பெறுபேற்றையாகும். ஏனெனில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் அதை மீளாய்வு செய்ய நியமித்த குழுவில் உள்ள உறுப்பினர்கள் சிலர் சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையவில்லை என்று ஆர்ப்பாட்டமொன்றின் போது கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்திருந்தார்.

மேலும் இதனை மேற்கோள்காட்டி கடந்த 23 ஆம் திகதி பேசிய ஹரீன் பெர்னான்டோ குறித்த குழு அங்கத்துவர்களின் சாதாரண தரப் பரீட்சை  பெறுபேறுகளை பகிரங்கப்படுத்துமாறு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான பிரச்சினைகளை முடிவிற்கு கொண்டுவரும் விதத்தில் ஹரீன் பெர்னான்டோ இன்னொரு பதிவை இட்டுள்ளார்.

அதில்,

உண்மையில் பரீட்சை என்பது  முழு வாழ்க்கையும் அல்ல, ஆனால் தேர்வின் முடிவு வாழ்க்கையில் ஏதோவொன்றை சேர்க்கிறது.

நான் ஒரு கல்வியாளர் அல்ல என்றாலும், தேர்வில் தேர்ச்சி பெற்றேன். அந்த தேர்வின் உண்மையான பெறுபேற்றை நாட்டிற்குக் காண்பிக்கும் வலிமை எனக்கு இருந்தது. நான் தேர்வில் ஓரளவிற்கு தேர்ச்சி பெற்றேன், ஆனால் என் வாழ்நாளில் தோல்வியடையவில்லை!

நான் அனைத்து பாடங்களிலும் சித்தியடையாவிட்டாலும் அதை நாட்டிற்குச் சொல்ல நான் தயங்கமாட்டேன், ஏனென்றால் நான் பரீட்சை பெறுபேற்றை  சார்ந்து இருக்கவில்லை.

தேர்வில் தோல்வியடைவதால் வாழ்க்கை முடிவதில்லை. தேர்வில் தோல்வியடைந்து உலகை வென்ற பலர் உள்ளனர்.மேலும் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரும் வாழ்க்கையில் தேர்ச்சி பெறவில்லை.

கல்வி என்பது ஒரு இடைவெளி மட்டுமே. எனவே கல்வித் தரங்களை கேலி செய்வது கடைசி பொருத்தமற்ற விஷயம்!

இலங்கையில் சுமார்  ஆறு லட்சம் பேர் சாதாரண தரப் பரீட்சை எழுதுகின்றனர். அதில் சுமார் 250,000 பேர் உயர்தரப் பரீட்சை எழுதி வெறும் 20,000 பேர் பல்கலைக்கழகம் செல்கின்றனர். எனவே இது  ஒரு போட்டி கல்வி முறை. ஆனால், முக்கியமான விஷயம் என்னவென்றால், 13 வருட கல்வி கற்றிருக்க வேண்டும்.

இன்று உலகம் முன்னெப்போதையும் விட பரந்ததாக உள்ளது. யாருக்கும் வாய்ப்புகள் உள்ளன. வேலை உலகில் பல வேலைவாய்ப்புகள் உள்ளன. இதற்கு திறனும் திறமையும் தேவை.

பின்லாந்து உலகில் மிகவும் படித்த நாடுகளில் ஒன்றாகும், ஆனால் அந்த நாட்டில் போட்டி, பயனற்ற தேர்வுகள் எதுவும் இல்லை.

ஒரு பரிசோதனை என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒரு மைல்கல் மட்டுமே. இது உங்கள் வாழ்க்கையின் பயணத்தை வரையறுப்பதில்லை, என்றாலும், அது நிச்சயமாக ஒரு வழியிலோ அல்லது வேறு வழியிலோ மதிப்பு சேர்க்கிறது.

Ibnuasad

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் அறிக்கை வெளியாகியுள்ள தருணத்தில் சாதாரண தரப் பரீட்சையும் நடைபெறுகின்றது ஆனால் அனைவரும் தேடுவதோ பாராளுமன்ற உறுப்பினர்களின் பெறுபேற்றையாகும். சாதாரண தரப் பரீட்சை ஆரம்பாகியுள்ள நிலையில் மாணவர்களை வாழ்த்தி தராதரங்கள் இன்றி…

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் அறிக்கை வெளியாகியுள்ள தருணத்தில் சாதாரண தரப் பரீட்சையும் நடைபெறுகின்றது ஆனால் அனைவரும் தேடுவதோ பாராளுமன்ற உறுப்பினர்களின் பெறுபேற்றையாகும். சாதாரண தரப் பரீட்சை ஆரம்பாகியுள்ள நிலையில் மாணவர்களை வாழ்த்தி தராதரங்கள் இன்றி…

One thought on “ஹரீனின் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு வெளியாகியதை தொடர்ந்து, புலமைப் பரிசில் பெறுபேற்றை கேட்ட இராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *